வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

1.ஜான் மில்டன் - பிறப்பு



இந்தியாவில் மிக பெரிய இதிகாசங்களாக இன்று வரையும் கருதப்படுவது ஒன்று இராமயணம்; இன்னொன்று மகாபாரதம். இந்த இரண்டு இதிகாசங்களை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இரண்டுமே கடவுளை நாயகர்களாக கொண்ட இதிகாசங்கள். ஆனால், ஒருவரே இரண்டு இதிகாசங்கள் எழுதியிருக்கிறார். அதுவும் முதல் இதிகாசத்தில் கடவுளை எதிர்க்கும் சாத்தானை கதாநாயகனாக கொண்ட இதிகாசக்கதை. சாத்தானை நாயகனாக்கும் துணிச்சல் அந்த காலத்தில் அப்படி ஒருத்தருக்கு இருந்ததா....?

ஆ ங்கிலத்தில் உள்ள இந்த இதிகாசங்கள் கவிதை வடிவத்தில் உள்ளன. இதை இயற்றியவர் கண்ணில்லாத ஜான் மில்டன் என்பவர். அவர் எழுதிய சொர்க்க நீக்கம் (Paradaise Lost) மற்றும் மீண்ட சொர்க்கம் (Paradaise Regain) ஆங்கிலத்தில் இன்று வரை மிக பெரிய இதிகாசங்களாக கருதப்படுகிறது. மில்டன் வேறும் கவிஞர் மட்டுமல்ல... இங்கிலாந்து மன்னரை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர். நமக்கு பாரதி எப்படியோ இங்கிலாந்துக்கு ஜான் மில்டன்.

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால்... அதற்கு பதில் ஜான் மில்டன் என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான்.

ஜான் மில்டன் தந்தை பெயரும் ஜான் மில்டன் தான். பொதுவாக தாத்தா பெயர் தான் பேரனுக்கு வைப்பார்கள்... இங்கு தந்தை பெயர் மகனுக்கு. ப்ரவயில்லை...இவரை ஜான் மில்டன் சீனியர் என்று அழைப்போம். மில்டன் சீனியர் மிக கைதெர்ந்த இசை மேதை. அவர் தன் வாழ் நாளில் இசைக்காக பல பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். அந்த காலத்தில் மிக பெரிய இசை மேதையாக கருதப்பட்ட ஹென்றி லாவிஸ்யுடம் நட்பு கொள்ளும் அளவிற்கு அவர் இசையில் புகழ் வாய்ந்தவராக இருந்தார்.

மில்டன் சீனியர் மனைவியின் பெயர் சாரா ஜெர்பி.அவர் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் கதை,கவிதை எழுதும் எழுத்தாளர் அல்ல. ஒருவர் சொல்லுவதை அப்படியே எழுதி கொடுக்கும் வேலை. அக்காலத்தில் கணக்கு எழுதவதோ, பத்திரம் எழுத வழக்கறிஞர்களோ கிடையாது. வியாமபர ரிதியாக இருந்தாலும் சரி, சட்ட ரிதியாக இருந்தாலும் சரி...யார் என்ன எழுத சொல்கிறார்களோ அப்படி எழுதி கொடுக்க வேண்டும். இன்று நாம் பத்திர பதிப்பு அலுவகத்தில் அப்படிப்பட்ட ஆட்களை நாம் பார்க்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் செய்யும் சமூக வேலைகளுக்கு பணம் வாங்கி கொள்வார்.

மில்டன் சீனியரும், சாரா ஜெர்பியும் தங்கள் இல்லற வாழ்க்கையை லண்டனில் உள்ள பிரட் ஸ்டிரிடில் என்ற இடத்தில் தொடங்கினர். இன்பமான அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு சாட்சியாக டிசம்பர் 8, 1608 பிறந்தவர் தான் நமது நாயகன் கவிஞர் ஜான் மில்டன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails