வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 12, 2008

குண்டக்க மண்டக்க – 4

(‘குண்டக்க மண்டக்க – 3 ’வின் தொடர்ச்சி.)

காட்சி 2: பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்



( ஒரு முறை சிக்னலில் மாட்டிக் கொண்டு பார்த்திபனிடம் பட்ட பிறகு வடிவேலு சிக்னல் விழுவது போல் தெரிந்தால் போதும், பத்தடி தொலைவில் நின்று விடுவார். பார்க்கும் ட்ராபிக் போலீஸ் எல்லாம் பார்த்திபன் போல் தெரிந்தது. இந்நிலை மீண்டும் அதே மவுன்ட் ரோட் சிக்னலில் பார்த்திபன் நிறுத்துகிறார்.)

பார்த்திபன் : வண்டிய நிறுத்து..
வடிவேலு : அடபாவி... மறுபடியும் நீயா...?

பார்த்திபன் : நானே தான்..!
வடிவேலு : இப்ப சிக்னல ஒழுங்க தானே வந்தேன்... எய்யா நிக்க சொன்ன...?

பார்த்திபன் : சும்மா... பொழுது போகல... பேச்சு துணைக்கு ஆள் வேணும் அதான் நிறுத்துனேன்.
வடிவேலு : இது உன்னகே கொஞ்சம் ஓவரா இல்ல.. பேச்சு துணைக்கு ஆள் வேணும்னா உன் பக்கதுல இருக்குற போலீஸ்கார கிட்ட பேசுறது... வண்டியில போறவன நிறுத்தி பேசனும் சொல்லுற... சின்ன புள்ளதனமா விளையாட்டா இருக்கு...

பார்த்திபன் : சரி அதெல்லாம் இருக்கட்டும்... லைசன்ஸ் எடு..
வடிவேலு : பேச்சு துணைக்கு நிறுத்துனேன்னு சொல்லிட்டு இதெல்லாம் கேக்குற..

பார்த்திபன் : வெட்டியா பேச முடியுமா...! எதோ உன் கிட்ட இருக்குற லைசன்ஸ், ஆர்.சி பூக், இன்ஷூரன்ஸ் எடுத்து காட்டினா அத பத்தி பேசலாம்.
வடிவேலு : உனக்கு பயந்து வண்டி ஒட்டும் போது சிக்னல் விழுது தெரிஞ்சதும் பத்தடி தூரம் வண்டி நிறுத்துறேன்... என்னையே ரவுட் கட்டி ஏன் புடிக்கிற...?

பார்த்திபன் : நா கேட்டது எடுக்க போறிய இல்லையா...?
வடிவேலு : சரி.. தரேன்... ஆள விடமாட்ட... இந்தா என் வண்டி இன்ஷூரன்ஸ், ஆர்.சி பூக், லைசன்ஸ்... போதுமா..

பார்த்திபன் ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கிறான்.
வடிவேலு : எல்லா சரியா இருக்கா.. நான் கிளம்புறேன்..

பார்த்திபன் : இரு.. பைன் கட்டிடு போ...
வடிவேலு : சொந்தக்கார வீட்டுல சொல்லுற மாதிரி பேசுற... எல்லா பேப்பரும் சரியா இருக்குல..

பார்த்திபன் : அப்படினு யார் சொன்னா... இன்ஷூரன்ஸ் நேத்தோட லாப்ஸ் ஆயிடுச்சு...
வடிவேலு : என்னது நேத்தோட முடிஞ்சு போச்சா... ( இன்ஷூரன்ஸ் பேப்பரை பார்க்க) அட ஆமா... நல்ல வேல நியாபகம் படுத்துன.. இப்போவே போய் ரென்யூ பண்ணிடுறேன்..

பார்த்திபன் : உனக்கு நியாபகம் படுத்த நான் என்ன உன் பி.ஏவா... ரென்யூ பண்ணாததுக்கு பைன் கட்டு.
வடிவேலு : யோவ்.. ஒரு நாள் தானே... ரென்யூ பண்ணிட்டு வந்து உனக்கு காட்டுறேன்

பார்த்திபன் : அப்படியா.... சரி லஞ்சமா அம்பது ரூபா கொடுத்திட்டு போ..
வடிவேலு : இத முன்னேடியே கேக்க வேண்டியது... இதுக்கு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு... இந்த வச்சிக்கோ.. நா போகட்டா..

பார்த்திபன் : சரி போ..
வடிவேலு : ( அப்பாடா...எதோ அம்பது ரூபாவோட போச்சு... ஆயிரம், இரண்டாயிரம் சொன்ன.. கையில் பணம் கூட இல்ல )

மவுட் ரோட் ப்லை ஓவரில் இருந்து கிளம்பிய வடிவேலும் தேனாம்ப்பேட்டை சிக்னலில் ட்ராபிக் போலீஸ் நிறுத்துகிறார்.

வடிவேலு : யோவ்... சிக்னலுக்கு சிக்னல் ஏன்ய்யா வண்டிய நிறுத்துறீங்க...
தேனாம்ப்பேட்டை போலீஸ் : மவுன்ட் ரோட் போலீஸ் போன் பண்ணி உன் வண்டிய நிறுத்த சொன்னாரு.. அத நிறுத்துனேன்.

வடிவேலு : இப்ப தான் மவுன்ட் ரோட் போலீஸ்க்கு பணம் கொடுத்தேன்.. ஒரு வேல ஆவனா இருப்பானோ...?
பார்த்திபன் பைக்கில் வந்து அங்கு இறங்குகிறான்.
வடிவேலு : அவனே தாய்யா...

பார்த்திபன் : என்னப்பா பிரச்சனை
வடிவேலு : நீ தான் பிரச்சன.. போன் பண்ணி வண்டிய ஏன் நிறுத்த சொன்ன...?

பார்த்திபன் : ( தேனாம்ப்பேட்டை போலீஸ்யிடம்) நீ போப்பா நான் பார்த்துக்கிறேன்... (வடிவேலுவிடம்) உன் லைசன்ஸ், இன்ஷூரன்ஸ் பேப்பர் எல்லாம் எடு...
வடிவேலு : நினச்சேன்... என்னடா வம்பு பண்ணாம அம்பது ரூபா வாங்கிட்டு விட்டானே சந்தோஷப்பட்டேன்.. என்ன விட மாட்ட.! மனசாட்சி தொட்டு சொல்லு போன சிக்னல தானே எல்லாத்தையும் பார்த்த..

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : ( என் பிட்ட எனக்கே போடுறியா..) இந்தா எல்லா பேப்பரையும் இன்னொரு வாட்டி பாரு...

பார்த்திபன் : எதுக்கு இன்னொரு வாட்டி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணுறது.. இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... அதுக்கு பைன் கட்டு..
வடிவேலு : அதுக்கு தான் போன சிக்னல அம்பது ரூபா வாங்குனல்ல...

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : (மறுபடியும் அதே பிட்டா...) இப்ப என்ன தான் வேணும்.

பார்த்திபன் : அம்பது பணம் கொடுத்திட்டு போ...
வடிவேலு : போன சிக்னலையே நூறு ரூபா கேட்டா கொடுத்திருப்பேனே... எதுக்கு இன்னொரு சிகனல்லுக்கு வந்து அம்பது ரூபா வாங்குற..

பார்த்திபன் : இப்ப தரியா... இல்ல கேஸ் எழுத சொல்லவா..
வடிவேலு : என்னப்பா மிரட்டுறியே... இந்த அம்பது ரூபா... அடுத்த சிக்னல்ல வந்து நீ என்ன தொந்தரவு கொடுக்க மாட்டியே..

பார்த்திபன் : கவலப்படாத... அடுத்த சிக்னல்ல நா உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன் போதுமா..
வடிவேலு : ( அப்பாடா... எதோ நூறு ரூபாவோட போய் தொலையுது )

அடுத்து நந்தனம் சிக்னலில் வடிவேலு இன்னொரு ட்ராபிக் போலீஸால் நிறுத்தப்படுகிறார்.

வடிவேலு : (அடுத்தபிரச்சன வந்திடுச்சு...) இப்ப தான் இரண்டு சிக்னல்ல போலீஸ் நிறுத்துனாங்க... நீ வேறையா...?

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அம்பது ரூபா லஞ்சம் கொடுத்திட்டு போ...!
வடிவேலு : யோவ்.. இப்ப தான் வண்டிய நிறுத்த்தினேன்.. எந்த பேப்பரும் பார்க்காம லஞ்சம் கேக்குற...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : முன்னாடியே மவுன்ட் ரோட் போலீஸ் பார்த்திபன் கிட்ட இருந்து ஒயர்லஸ் இன்பர்மேஷன் கொடுத்திருடாரு...
வடிவேலு : என்னனு கொடுத்திடாரு...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : உன் இந்ஷூரன்ஸ் லாப்ஸ் அயிடுச்சு சொன்னாரு..
வடிவேலு : அடபாவிங்களா.... களவாளி பசங்கல புடிக்குறது ஒயர்லஸ் யூஸ் பண்ணமா... அப்பாவி என்ன புடிக்கிறது யூஸ் பண்ணுறீங்க..

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : பணம் எடு...
வடிவேலு : கொடுத்து வச்ச மாதிரி கேக்குற... நான் பேசாம பைன் கட்டுறேன்...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அது எல்லாம் முடியாது... லஞ்சம் வாங்க சொல்லி தான் எனக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க..
வடிவேலு : லஞ்சம் வாங்குறதுக்கு எல்லாம் ஆர்டர் போடுறாங்களா … கொடுக்கலைனா... ?
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : வண்டிய வாங்கி வச்சிக்க சொன்னாங்க...
வடிவேலு : ஆ ஆ ஆ... பாவி மக்கா... இப்படியும் ஒரு பொலப்பா...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : நீ ரொம்ப பேசுற... வண்டிய கொடு...
வடிவேலு : இல்லப்பா.. இல்லப்பா.. இந்த அம்பது ரூபா... ( காலையில யாரு முகத்துல முழிச்சேனோ.. எனக்கு நேரமே சரியில்ல...)

மூன்று சிக்னலிலும் அம்பது ரூபா லஞ்சம் கொடுத்த வடிவேலுவின் விதி விடவில்லை. அதான் பார்த்திபன் விடவில்லை. மீண்டும் சைதாப்பேட்டை சிக்னல் பார்த்திபனால் மடக்கப்படுகிறான்.

பார்த்திபன் : நான் சொன்ன மாதிரி போன சிக்னல்ல உன்ன தொந்தரவு பண்ணல பார்த்தியா...
வடிவேலு : யோவ்... விரட்டி விரட்டி வெட்டுவாங்கனு கேள்வி பட்டிருக்கேன்... விரட்டி விரட்டி லஞ்சம் வாங்குறத இப்ப தான் பார்க்குறேன்... பேசமா மவுன்ட் ரோட்டுலைய பைன் கட்டிருப்பேன். உங்களுக்கு லஞ்ச கொடுத்தே என் சம்பள பண போய்யிடும் போலிருக்கு...

பார்த்திபன் : சரி... பைன் கட்டனும் ரொம்ப ஆச படுற.. உன் ஆசைய ஏன் கெடுக்கனும்... ஆயிரம் ரூபா பைன் கட்டு...
வடிவேலு : அடபாவி... மூனு சிக்னல் லஞ்சம் வாங்குனது இல்லாமா... இப்போ அயிரம் ரூபா பைன் கட்ட சொல்லுறீயே.. இது உனக்கே நியாயமா தெரியுதா...

பார்த்திபன் : லஞ்சம் வாங்குறது எங்களுக்காக... பைன் கட்ட சொல்லுறதுக்கு கவர்மென்ட்காக...
வடிவேலு : இதுல பன்ச் டைலாக் வேற… அப்படினா... முன்னாடியே பைன் கட்ட சொல்ல வேண்டியது தானே

பார்த்திபன் : நீ நேர்மையான ஆளா இருந்த என்ன சொல்லிருக்கனும்... "இல்ல சார் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன்.. பேசாம பைன் கட்டுறேன் சொல்லிருக்கனும்"... இப்படி செய்யாம உன் புத்தி எங்க போச்சு...?
வடிவேலு : ( வ்...வ்..வ்.வ்) என் கிட்ட பணம் கூட இல்ல. இந்தா கிரடிட் கார்டு...

பார்த்திபன் : நாங்க லஞ்சம் வாங்குறதுக்கு மட்டும் தான் கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணிப்போம்.. கோர்ட் பைன் எல்லாம் பணம் மட்டும் தான் கட்டனும்
வடிவேலு : அடபாவி... எத்தன வாட்டி நீ கேக்கும் போதெல்லாம் பணம் கொடுத்திருக்கேன்... கொஞ்சம் மாச்சி கருண காட்டுறியா.

பார்த்திபன் : சரி... இவ்வளவு கெஞ்சுறதுனால... உன் வண்டிய இங்கையே விட்டு போய்டு...
வடிவேலு : விட்டு எங்க போறது...?

பார்த்திபன் : இந்த வண்டிக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு சொல்லிடு... பைன் கட்ட தேவையில்ல...
வடிவேலு : என்ன ஒரு புத்திசாலிதனம்... ஆயிரம் ரூபா லஞ்சத்துக்கு மூப்பதாயிரம் ரூபா வண்டிய விட்டு போ சொல்லுற... நல்ல இருக்கு.. நா பைன் கட்டுறேன் போதுமா...

பார்த்திபன் : பணம் இல்லனு சொன்ன...
வடிவேலு :(கோபமாக) போய் சொன்ன போதுமா.... நீ எல்லாம் உண்மைய மட்டும் பேசுற மாதிரி... இந்த ஆயிர ரூபா... எங்க போய் கட்டனும்

பார்த்திபன் : பைன் கட்டுறது ஒரு பக்க இருக்கட்டும்... பணம் வச்சிக்கிட்டு இல்லனு போலீஸ் கிட்ட போய் சொன்னியே அதுக்கு ஒரு கேஸ் எழுதனுமே....!
வடிவேலு : டேய்... இப்படியே பேச்சு கொடுத்து... உலகத்துல இருக்குற எல்லா தப்பையும் என் மேல கட்டிடுவியே... உன் கூட குடும்ப நடத்த என்னால முடியாது. நா ஜெயிலுக்கே போறேன்...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails