வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 29, 2009

வீடு வாடகைக்கு - 3

காட்சி - 1 , காட்சி - 2

காட்சி - 3

இரண்டு மாதங்களுக்கு பிறகு...

[ ஏகாம்பரம்,கார்த்திக், ரங்கன், 'BPO' சுந்தர், ராமநாதன் ]

ரங்கன் : ஸார் ! இந்த மாச வாடகை...
ஏகாம்பரம் : ரொம்ப தெங்க்ஸ் ! கேட்காம வாடக தர...

ரங்கன் : ஒரு சின்ன விஷயம்... என் ரூம்முல யாரோ தங்கி இருக்குற மாதிரி இருக்கு. வச்ச இடத்துல பொருள் இருக்க மாட்டீங்குது...
ஏகாம்பரம் : அதுவா ! அந்த பையன் கிட்ட சொல்லுறேன்...

ரங்கன் : என்னது அந்த பையனா...!!
ஏகாம்பரம் : அந்த பையனா சொன்னேன்..! ‘என்’ பையன் படிக்கிறதுக்கு மாடிக்கு வரான்ல அதான். அவன் கிட்ட சொல்லிடுறேன்.

ரங்கன் : அப்புறம் இன்னொரு விஷயம்.
ஏகாம்பரம் : என்ன ஜட்டிய காணோமா...?



ரங்கன் : ஐயோ இல்ல ஸார் ! ஊருல இருந்து அப்பா வராரு... ஒரு நாள் இங்க தங்குறாரு.
ஏகாம்பரம் : அதெல்லாம் முடியாது. உனக்கு மட்டும் தான் வாடகைக்கு வீடு விட்டேன். உங்க அப்பா வர கூடாது.

ரங்கன் : என்ன ஸார் ! இந்நேரம் அப்பா சென்டரல் இறங்கி வேளச்சேருக்கு வந்திட்டு இருப்பாரே...!
ஏகாம்பரம் : ஐயோ...அந்த பையன் வர நேரமாச்சு... உங்க அப்பா இருந்தா எப்படி சமாளிப்பேன்.

[ரங்கனின் அப்பா ராமநாதன் உள்ளே வருகிறார்.]

ராமநாதன் : ரங்கா ! எப்படி இருக்க ?
ரங்கன் : நல்ல இருக்கேன் அப்பா ! இவர் தான் அவுஸ் ஓனர்.

ராமநாதன் : வணக்கம் !
ஏகாம்பரம் : வணக்கம்

ராமநாதன் : மாடிக்கு போய்ட்டு ரிப்ரஷ் பண்ண்ணிடு வரேன்..
ஏகாம்பரம் : உக்காருங்க கொஞ்ச நேரம் பேசுவோம்.

ராமநாதன் : ட்ரெயின்ல வந்த கலைப்பு...பத்து நிமிஷத்துல வந்திடுறேன்.
ஏகாம்பரம் : சீக்கிரம் வந்திடுங்க ஸார்..!

[ இருவரும் மாடிக்கு சென்றனர்]

ஏகாம்பரம் : இப்ப என்ன பண்ணுறது தெரியலையே

[ ‘BPO’ சுந்தர் வீட்டுக்குள் வருகிறான் ]

சுந்தர் : குட் மார்னிங் ஸார் !
ஏகாம்பரம் : தம்பி ! தம்பி ! மாடிக்கு போகாதீங்க...

சுந்தர் : எதுக்கு ?
ஏகாம்பரம் : மேல கொஞ்சம் கிளினிங் வேல நடக்குது... நீங்க என் ரூம்ல எ.சி எல்லாம் போட்டு இருக்கேன். அங்க தூங்குக...

சுந்தர் : உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையே...
ஏகாம்பரம் : நீங்க மேல போனா தான் எனக்கு ப்ராப்ளமே...!

[சுந்தர் உள்ளே சென்று தூங்கிறான். மாலை வரை ராமநாதன் கீழே இறங்கி வரவில்லை]

ஏகாம்பரம் : பத்து நிமிஷத்துல வரேன் சொன்னான். சாய்ந்திரமாச்சி வராம இருக்கான். இவன் குழிக்குறானா பாத்ரூம்லே தூங்கிட்டானா !!

[சுந்தர் எழுந்து வெளியே வருகிறான் ]

சுந்தர் : ரொம்ப தெங்க்ஸ்... உங்க ரூம் நல்ல இருக்கு. நா மாடிக்கு போய் குழிச்சிட்டு வேலைக்கு கலம்புனும்
ஏகாம்பரம் : இரு..இரு..! என்னப்பா நீ காலையில செய்யுற வேலை எல்லாம் இராத்திரி செய்யுற..

சுந்தர் : நைட் ஷிப்ட் வேல செய்யுறவங்க எல்லாரும் அப்படிதான்.
ஏகாம்பரம் : ஓ அப்படியா...!! நீ.. நீ.. நீ.. என் வீட்ட முழுசா பார்த்திருக்க இல்ல. கார்த்திக் அண்ணனுக்கு வீட சுத்தி காட்டி...

[ கார்த்திக் ‘BPO’ சுந்தரை அழைத்து செல்ல... சரியா ராமநாதன் வீட்டுக்குள் நுழைகிறார்.]

ராமநாதன் : ஸார் ஸார் ! ட்ரெயின்ல வந்த கலைப்பு... தூங்கிட்டேன்.
ஏகாம்பரம் : பாத் ரூம்முலேவா...!!

ராமநாதன் : பேட் ரூம்ல தான். பையனும் வேலைக்கு போய்ட்டானா... என்ன எழுப்ப ஆளியில்ல..
ஏகாம்பரம் : என் கிட்ட முன்னாடி சொல்லியிருந்தா எழுப்பியிருப்பேனே..!

ராமநாதன் : அது யாரு உங்க பெரிய பையனா ! [சுந்தரை பார்த்து கேட்கிறார்]
ஏகாம்பரம் : ஆமா...

[வீட்டை சுத்தி பார்த்த’BPO’ சுந்தர் ஏகாம்பரம் அருகே வருகிறான் ]

சுந்தர் : ஒ.கே ஸார் ! உங்க வீடு ரொம்ப நல்ல இருக்கு. நா மாடிக்கு போறேன்.
கார்த்திக் : அப்பா நானும் அவர் கூட போறேன்.

[ஏகாம்பரம் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் ]

ராமநாதன் : உங்க பையன் சொன்னீங்க... உங்க ஸார் கூப்பிடுறான்.
ஏகாம்பரம் : அவன்.. அவன் மரியாதையான பையன்... அப்பாவ கூட 'ஸார்' கூப்பிடுவான்

ராமநாதன் : இரண்டாவது பையன் 'அப்பா' கூப்பிடுறான்.
ஏகாம்பரம் : அவன் மரியாத தெரியாத பையன். அதான் 'அப்பா' கூப்பிடுறான்.

ராமநாதன் : (ஓ பட்டினத்துல 'ஸார்'னா ரொம்ப மரியாத போலிருக்கு... ) சரி ! அத விடுங்க...! என் பையன் எப்படி ? நேரத்துக்கு வீட்டுக்கு வரானா....!
ஏகாம்பரம் : கரேட்டா தூங்குறதுக்கு வீட்டுக்கு வரான். என்ன இரண்டு வாட்டி பகல் நேரத்துல பொண்ணுங்க கூட வண்டியில போறத பார்த்தேன்.

ராமநாதன் : என் பையன் கொஞ்சம் ஜாலியான டைப். சரி ஸார் ! நா ஊருக்கு போறேன். பையனுக்கு போன் போட்டு சொல்லிட்டேன். மாடிக்கு போய் என் துணி எல்லாம் எடுக்கனும்.
ஏகாம்பரம் : இருங்க எதுக்கு உங்களுக்கு சிரம்மம். ( மாடியை பார்த்து ) டேய் கார்த்திக் ! ஸார் துணி எல்லாம் எடுத்திட்டு வா...!

[ கார்த்திக் மாடியில் இருந்து எல்லா துணியும் பொட்டியில் வைத்து கொண்டு வருகிறான்.]
கார்த்திக் : இந்தாங்க...!

ராமநாதன் : இது என் பொட்டியில்லைங்க…
ஏகாம்பரம் : உங்க பொட்டி எந்த கலரு...??

ராமநாதன் : உங்க மாதிரி கறுப்பு...
ஏகாம்பரம் : டேய் கார்த்தி மேல் 'சிவப்பு' கலர் பொட்டி இருக்கும் எடுத்துவா..

(கார்த்திக் மீண்டும் மூச்சிரைக்க பொட்டி எடுத்து வருகிறான்.)

கார்த்திக் : இந்தாங்க...!
ராமநாதன் : தம்பி ! பாத் ரூம்ல என் சோப்பு இருக்கு அதையும் எடுத்திட்டு வந்திரேன்.

[கார்த்திக் மீண்டும் சென்று சோப்பு டப்பாவோடு வருகிறான்]

ராமநாதன் : ஐயோ ! என் கண்ணாடி டேபிளைய இருக்கு. அதையும் எடுத்திட்டு வந்திரேன்.
கார்த்திக் : போங்க ஸார் ! என்னால முடியல்ல மூச்சு வாங்குது.

ராமநாதன் : சரி ! நானே மாடிக்கு போய் எடுத்துக்கிறேன்.
ஏகாம்பரம் :டேய் ! உனக்கு மூச்சு வாங்குறதால என் மூச்சு போய்டும் போல இருக்கே . போய் எடுடா !

ராமநாதன் : இல்லனா அந்த மரியாதைனா பையன எடுத்து வர சொல்லுங்க...
ஏகாம்பரம் :ஐய்யோ வேண்டாம் ஸார்... இவனே எடுத்து வருவான். எடுத்து வாடா...

[ கார்த்திக் மீண்டும் மாடிக்கு சென்று எடுத்து வருகிறான் ]

ராமநாதன் : சரி ஸார் ! வீட்டுக்காரம்மா எப்ப வருவாங்க...!
ஏகாம்பரம் : அடுத்த வாரம் வராங்க..!

ராமநாதன் : அப்படியா... அடுத்த வாரம் வந்து ஒரு மாசம் தங்கிட்டு போற மாதிரி வரேன்.
ஏகாம்பரம் : என்னது ஒரு மாசம்மா.......!!

[ ராமநாதன் பொட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறான் ]

கார்த்திக் : ஏப்பா ! உங்களுக்கு வேண்டாத வேல. பேசாம ஒருத்தர காலி பண்ண சொல்லுங்க..
ஏகாம்பரம் : அதாண்டா..நானும் யோசிக்குறேன். என்னால சமாளிக்க முடியல்ல..

[‘BPO’ சுந்தர் உள்ளே வருகிறான்]

சுந்தர் : நா வேலைக்கு போறேன். ஒரு சின்ன விஷயம் ?
ஏகாம்பரம் : என்னது ?

சுந்தர் : நாளைக்கு காலையில அம்மா ஊருல இருந்து வராங்க.. அவங்கிட்ட இந்த சாவி கொடுத்திடுங்க...
ஏகாம்பரம் : என்னது 'அம்மா'வா???? டேய் அப்பாவ சமாளிக்கலாம், தாத்தாவ சமாளிக்கலாம்... அம்மாவ சமாளிக்க முடியாதுடா... பேசாம அவங்க வேற இடம் பார்த்து போக சொல்லு...!!

(தொடரும்.... )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails