வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, July 15, 2009

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.



நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

4 comments:

Vidhoosh said...

உங்கள் விடாமுயற்சி கண்டு மிரண்டு போனேன்.
ஒன்றேனும் உமக்கு கிடைக்க "நித்ய" கல்யாண பெருமாள் உதவட்டும்...

குகன் said...

// Vidhoosh said...
உங்கள் விடாமுயற்சி கண்டு மிரண்டு போனேன்.
ஒன்றேனும் உமக்கு கிடைக்க "நித்ய" கல்யாண பெருமாள் உதவட்டும்...
//

எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதால், "நித்ய" கல்யாண பெருமாள் உதவி இதற்கு மேல் தேவைப்படாது என்று நினைக்கிறேன். :-)

Vidhoosh said...

:)) அபாரத் துணிச்சல் தான் உங்களுக்கு. உங்கள் மனைவி இதெல்லாம் படிப்பதில்லையா??

சேக்காளி said...

//. நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன்//
கிடைத்தால் தானே!.அவள் உன்(ங்கள்)கண்களுக்கு மட்டும் தேவதையாக தெரிந்திருந்தால் சொன்னது நடந்திருக்கலாம்.ஆனால் விதி என்(ங்கள்) கண்களுக்கும் அவளை தேவதையாகவே காண்பிக்கிறதே.

LinkWithin

Related Posts with Thumbnails