வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 27, 2009

சுஜாதாவும் மூன்று புத்தகங்களும்

ஒவ்வொரு காலக்கட்டத்தில் எனக்கு ஒருவர் பைத்தியம் பிடிக்கும். இந்த பைத்தியம் தெளிய வேண்டும் என்றால் அவர்கள் எனக்கு தேகட்டும் அளவிற்கு அனுபவித்து விடுவேன். கொஞ்சம் நாள்களில் இந்த பைத்தியம் தெளிந்துவிடம். ஆனால், அந்த பைத்தயம் இன்னொருவர் மீது பாயும்....

ஐயோ...மேலே இருக்கு பத்தி... டபுள் மினிங் மாதிரி தெரியுதா...!

ஓ.கே !

ஒவ்வொரு காலத்தில் ஒரு எழுத்தாளர் மீது பைத்தயமாக இருப்பேன். அந்த எழுத்தாளர் எழுதிய புத்தகங்களை தேடி பார்த்து, அளுப்பு தட்டும் வரை படிப்பேன். வைரமுத்து, கண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன்....... என்று நான் பைத்தியமாக திரிந்த எழுத்தாளர் பட்டியல் நீட்டலம். இப்போது எனக்கு பிடித்திருப்பது சுஜாதா பைத்தியம்.... எழுத்தாளர் சுஜாத பைத்தியம்ங்க....

நியாயமாய் பார்த்தால் இவர் எழுதிய புத்தகங்களை நான் முன்பே படித்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு இப்போது தான் இவர் மீது அதிக ஈடுபாடு வந்துள்ளது.

சமிபத்தில் நான் படித்த சுஜாதாவின் மூன்று புத்தகங்கள்

நிர்வாண நகரம்
விசா பப்ளிகேஷன்ஸ், விலை.70, பக்கம் - 136

சென்னை நகரத்தையே பழி வாங்க நினைக்கிறான் சிவராஜ். அதை தொடர்ந்து சென்னையில் நீதிபதி, மருத்துவர், அரசியல்வாதி என்று மூன்று பேர் தொடர்ந்து இறக்கிறார்கள். இதை செய்தது 'நான் தான்' என்று சிவராஜ், 'ஜீவராசி' என்ற பெயரில் போலீஸ்க்கு கடிதம் அனுப்புகிறான். சென்னை பழிவாங்க நினைக்கும் 'ஜீவராசி'யை வழக்கறிஞர் கணேஷ், வசந்த் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பது மீதி கதை.

சுஜாதா நாவலில் எனக்கு அதிகம் பிடித்திருப்பது அவருடைய 'Characterisation'. கதாப்பாத்திரத்தை வாசகர் மனதில் நன்றாக பதியவைத்துவிடுவார். அந்த பாத்திரம் அடுத்து என்ன செய்ய போகிறது என்ற ஆர்வத்தையும் தூண்டிவிடுவார். குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்க அதிக கஷ்டமிருக்காது. வாசகரால் யூகிக்க முடியும். ஆனால், அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் புத்திசாலி தனமான பாத்திரங்களை வடித்திருப்பது தான் சுஜாதாவின் ஸ்பேஷலிட்டி.

எழுத்தும் வாழ்க்கையும்
உயிர்ம்மை பதிப்பகம், விலை.85, பக்கம் - 168



சுஜாதாவின் வாசகர் அவரின் எழுத்தின் வாழ்க்கையோடு பயண செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது. அவரின் நாற்பது வருட எழுத்துல வாழ்க்கையை படிக்க முடியவிட்டாமல், அம்பலத்தில் அவர் எழுதிய கட்டுரை தொகுப்பை படிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே...!

'மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தையல்ல. கருத்துக்கு கருத்து'

கவிதையின் நோக்கம் உபதேசம் அல்ல. உபதேசம் இருந்தால் அதை ஒலித்து வைக்கப்பட வேண்டும்.

கல்வியும், சம்பாத்தியத் திறமையும் சாதி நீக்கத்துக்கு முக்கியமானகருவி.


இப்படி சுஜாதாவின் பல 'நச்' வரிகள் இது பல உண்டு.

புதிய நீதி கதைகள்
உயிர்ம்மை பதிப்பகம், விலை.90, பக்கம் - 156



ஜேம்ஸ் தர்பர், ஆம்ப்ரோஸ் பியர்ஸ் போன்றவர்கள் சொன்ன சில ஈசாப் கதைகளை சுஜாதா தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். சிறு வயதில் நாம் கேட்ட, கேட்காத பல கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. அம்பலம் மின் இதழில் வெளிவந்த இந்த கதைகளை உயிர்மை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர்.

நாம் கேட்ட கதையை மொழிபெயர்த்து ஏன் சுஜாதா இந்த புத்தகத்தில் தன் நேரத்தை செல்விட்டார் என்று தெரியவில்லை. சுஜாதாவுக்காக இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்கலாம்.

சுஜாதாவின் புத்தகங்களை பற்றி இன்னும் சொல்லலாம். நான் சொன்னது மிகவும் குறைவு. நீங்கள் படித்து அனுபவித்து பாருங்கள்.

தமிழ்10.காம் கீரிடம் !!

வணக்கம் நண்பர்களே,

இந்த வார தமிழ்10 இணையதளத்தின் கீரிடம் பெறும் பதிவர் நான் தான்...!

நன்றி தமிழ்10.காம்.

அன்புடன்,
குகன்


என்ன பதிவு போடுவது தெரியாமல் இருந்தேன். சரி... இதையே ஒரு பதிவாக போட்டுவிட்டேன் :-)

Tuesday, August 25, 2009

கலைஞரின் பள்ளி நினைவுகள்



1.

ஒரு முறை 'கடவுள்' என்ற தலைப்பில் கலைஞரின் பள்ளியில் ஒரு பேச்சு போட்டி நடந்தது. அதில் கலைஞர் அவர்கள் மிக பிரமாதமாக பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அவருக்கு போட்டியாக கலந்து கொண்ட மாணவருக்கு நடுக்கமாக இருந்தது. பேசாமல் ஒடிவிடலாம் என்று கூட நினைத்தான். எப்படியோ தைரியம் வர வழைத்துக் கொண்டு அந்த மாணவன் மேடை ஏறினான். அந்த மாணவன் தன் பேச்சை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். இறுதியாக, "இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்" கூறுவதற்கு பதிலாக - "இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்" என்றானாம். அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்தது. அந்த மாணவன் தன் தவறை உணர்ந்த சொன்ன போது, எல்லோரும் சிரித்தனர்.

***

2.

கலைஞர் அவர்கள் இளம் வயதில் சிறு சிறு கூட்டங்களில் பேசி பழகி இருந்தாலும் பெரிய கூட்டங்களை காணும் போது ஆரம்ப காலத்தில் சிறிது நேரம் நடுங்வாராம். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 'நட்பு' என்ற தலைப்பில் முதல் மேடை பேச்சை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பு கிடைத்த சந்தோஷம் மனதில் இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் நடுங்கினார். அப்போது அவரது தமிழாசிரியர்களில் ஒருவரும், மகாவித்துவானாக விளங்கக் கூடியவருமான தண்டபாணி தேசிகர் அவர்கள் கலைஞருக்கு தேவையான குறிப்புகளை வழங்கினார். அந்த குறிப்புகள் பெற, திருவாரூரில் இருக்கும் அவரது வீட்டை தேடி நாலைந்து முறை சென்று வந்திருக்கிறார். அவர் தந்து உதவிய குறிப்புகளை அப்படியே எழுதி கோவையாக மனபாடம் செய்தார். இரண்டு மூன்று நாட்களாக எழுதிய குறிப்புகளை வீட்டின் முன் இருக்கும் தூண்கள், சுவர்கள் முன் நின்று எல்லாம் பேசி பழகினார். தன் வீட்டார் அனைவரையும் தாழ்வாரத்தில் உட்கார வைத்து, முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தினார்.

இப்படி பல கடுமையான பயிற்சிக்கு பிறகு அவர் பள்ளியில் 'நட்பு' தலைப்பில் பேசிய போது மிக பெரிய பாராட்டு பெற்றது. அவரது முதல் மேடை பேச்சிலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

Monday, August 24, 2009

எதிர் வீட்டு தேவதை



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

Saturday, August 22, 2009

நா.முத்துக்குமார் : அ'ன்னா ஆ'வன்னா

உயிர்மை பதிப்பகத்தின் கவிதை தொகுப்பு நூல் என்பதால் பின் நவீனத்துவ கவிதைகளை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த நூல் உரைநடை வடிவில் எழுதப்பட்ட கவிதை.

திரைப்பட பாடலில் ஊன்றிவிட்டவர்களுக்கு தங்கள் கருத்து, ஏக்கம், ஆதங்கம் - இது போன்ற கவிதை புத்தகங்களில் தான் சொல்ல முடிகிறது. வரிகளை மாற்ற சொல்லவும், மற்றவர் சொல்லும் வார்த்தைகளை போடவும் இதில் யாரும் தலையிட முடியாது. இந்த கவிதை தொகுப்பில் நா.முத்துகுமார் தான் ஒரு சினிமா எழுத்தாளர் என்று பிம்பத்தில் இருந்து விடுபட்டு சராசரி மனிதன் மனதில் இருக்கும் நினைவுகளை, ஏக்கங்களை பிரதிபலித்து எழுதியிருக்கிறார்.

இந்த கவிதை நூலில் நான் ரசித்த ஒரு சில வரிகள்.

"தனலட்சு தட்டச்சுப் பயிலகம்" தலைப்பில்

காயத்ரிகளுக்கு வய்தானாலும்
காயத்ரி என்ற பெயருக்கு
வயதாவதேயில்லை

ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு தலைப்பில்

நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்
"நெனச்ச் வேலையே செய்யுறே
எப்படியிருக்க மாப்ளே ?" என்றேன்,
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்து
"படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க"ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை" என்றான்.

சபையறிதல் தலைப்பில்

கல்யாணத்தில்
கலந்துக் கொள்வதைக் கூட
நகைகள் தான் தீர்மானிக்கின்றன

தம்பியின் நாட்குறிப்பிலிருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை தலைப்பில்

"தம்பியாய் இருப்பதன் கஷ்டம்
தம்பிக்கு தான் தெரியும்"
என்று தனக்குள் சொல்லியப்படி
வாலாட்டுகிறது நாய்

பல கவிதைகள் பாலியத்தின் பிரதிபலிப்பை உணர்த்துகிறது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் பாலியம் ஒரு நிழல் தொடர்வதை இந்த புத்தகம் காட்டுகிறது.

இறுதியாக,'புத்த[க]யா' என்ற தலைப்பில் அவர் எழுதிய சில வரிகள்....

புத்தக வரிகளில்
கோடு போட்டுப் படிக்கிறார்கள்
எங்கேயோ இருக்கும் எழுத்தாளனுக்கு
இங்கிருந்தே கைகுலுக்கிறார்கள்

இந்த பதிவில் நான் சொன்ன நா.முத்துக்குமாரின் கவிதைகள் அனைத்தும் கோடு போட்டு இருந்த இடத்தில் அவருடன் கைகுலுக்கிய கவிதைகள்.

விலை.60, பக்கங்கள் : 96
உயிர்மை பதிப்பகம்

Friday, August 21, 2009

கந்தசாமி - திரைவிமர்சணம்



லஞ்சம் வாங்கும் அதிகாரி/அரசியல்வாதி ஒவ்வொராக கொல்லப்படுகிறார்கள் அல்லது அவர்களிடம் இருந்து பொருள் கொள்ளையடிக்கிறார்கள். அதன் பின்னால் இயங்கும் நெட்வோர்க். அந்த கொலை அல்லது கொள்ளைக்கு நியாயமான காரணம். இடைவேளைக்கு பிறகு ஒரு பிளாஷ்பேக். இறுதியில் கோர்ட் காட்சி. கதாநாயகன் விடுதலை.... இப்படி பழக்கப்பட்ட அதே கதை தான். சற்று விருவிருப்பாகவும், திருப்பங்களோடும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.

கஷ்டப்படும் ஏழை பெண் தன் குடும்ப கஷ்டத்தை கந்தசாமி கோயில் மரத்தில் எழுதி கட்டி வைக்கிறாள். அடுத்த நாள் அவள் வீட்டில் கருப்பு பையில் பணம். தனக்கு உதவி செய்தது கடவுள் என்று நம்புகிறாள். இது ஊர் முழுக்க பரவ, கந்தசாமி கோயில் முழுக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவர்கள் கஷ்டமும் தீர்கிறது. இதை எல்லாம் செய்வது ஒரு ஆசாமி என்று சந்தேகப்படுகிறார் 'சி.பி.சி.ஐ.டி' பிரபு.

இன்னொரு பக்கம், ஒவ்வொரு பணக்காரர்கள் வீட்டில் 'சி.பி.ஐ.' விக்ரம் ரைட் நடத்துகிறார். அப்படி ஒரு முறை ஆசிஷ் வித்யார்த்தி வீட்டில் ரைட் செய்து பல கோடிக்கணக்கில் பத்திரத்தை கைப்பற்ற, அவர் பக்கவாதம் வந்தது போல் நடித்து தப்பிக்கிறார். அவர் மகள் ஸ்ரேயா தன் தந்தையைக்கு நிஜமான பக்கவாதம் வந்ததாக நம்பி விக்ரமை பழிவாங்க முயற்சி செய்கிறார்.

ரைட்டில் கைப்பற்றிய பணத்தை எல்லாம் எழை மக்களுக்கு உதவியது கந்தசாமி என்று பிரபு கண்டுபிடிக்கிறார். ஏழை மக்களுக்கு உதவும் விக்ரம் லட்சியம் நிரை வேறியதா ? பிரபு அவரை கைது செய்தாரா ? ஸ்ரேயா விக்ரமை பழி வாங்கினாரா ? என்பது மீதி கதை.



நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விக்ரம்' படம். அவரை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மனுஷன் சும்மா கலக்கியிருக்கிறார். சேவல் மாதிரி நடப்பதும், பெண் வேடத்தில் நடனமாடுவதும், கண்ணை கட்டியப்படி சண்டை போடுவதும் என்று ஆள் மிரட்டியிருக்கிறார். பாடியும் இருக்கிறார்.

முதல் பாதியில் வில்லியாக, இரண்டாவது பாதியில் விக்ரமை காதலிக்கு வேஷம் ஸ்ரேயாவுக்கு. இருப்பை மட்டுமே அட்டுவதோடு இல்லாமல் கொஞ்சம் நடித்திருக்கிறார். விக்ரமை ஏமாற்றும் போதும் சரி, அவரால் ஏமாற்றப்படும் போதும் சரி.. ஸ்ரேயா கண்கள் பேசுகிறது. கொடுத்த காசுக்கு...ஒரே இடுப்பசைவை எல்லா பாட்டுக்கு ஆடியிருக்கிறார், பெரும்பாலும் காட்டிவிட்டார்.

பிரபுவுக்கு கச்சிதமான பாத்திரம். சீனியர் ஆபிஸர் கிருஷ்ணா தெலுங்கு பதிப்புக்கு உதவியாக இருப்பார். மற்றபடி சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

விருவிருப்பாக செல்லும் படத்தில் அதிகம் எரிச்சலுட்டுவது வடிவேலுவின் நகைச்சுவை. விவேக்க்கு வேலை வைக்காமல், 'கந்தசாமி' கேட்டப்பில் ஒரு மொக்கையை போடுகிறார். பிரபு அவரை விசாரிக்கும் காட்சி மட்டும் ரசிக்க முடிகிறது. மற்ற நகைச்சுவை எல்லாம் போர் தான்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த வருட மிக சிறந்த பாடல்களில் 'கந்தசாமி' பாடல் இருக்கும்.

இது போன்ற படத்தில் லாஜிக் இருப்பதில்லை. 'கந்தசாமி' படம் மட்டும் விதிவிளக்கல்ல. கோவில் சீட்டு எழுதி வைக்க மக்கள் வெள்ளமாக வருவதை சந்தேகப்பட்டு பிரபு விசாரிக்கிறார். இப்படி விசாரிக்க போனால் எத்தனை கோவிலை விசாரிக்க வேண்டியது இருக்கும். பணம் பரிகொடுத்தை பற்றி யாரும் 'கம்ப்ளைன்ட்' கொடுக்காமல் எப்படி பணத்தை பற்றி விசாரணை நடத்துகிறார் என்று லாஜிக் புரியவில்லை.

ஷங்கரை தேடும் தயாரிப்பாளர்கள், இனி சுசி கணேசனை தேடுவார்கள் என்று நினைக்கிறேன். (சங்கர் மட்டும் இந்த கதையை எடுத்திருந்தால் கண்டிப்பாக நூறு கோடியாவது இந்த படத்துக்கு செலவு செய்திருப்பார்.) தேவையான இடத்தில் மட்டுமே பிரமாண்டத்தை காட்டியிருக்கிறார். தன் முழு கவனத்தை கதையை நகர்த்துவதில் செலுத்தியிருக்கிறார். 'சி.பி.ஐ' ஆபிஸ், 'அலேக்ரா' பாடல் காட்சி மிகவும் அருமை. பெரிய ப்ளாஷ்பேக் வைக்காமல் இருந்ததுக்காகவே அவரை பாராட்டலாம்.

கந்தசாமி - துன்பத்தில் இருந்து காப்பாற்றும் ஆசாமி !!


கருத்து கந்தசாமி : படத்தில் சொல்லவந்த தகவல் நல்ல தான் இருக்கு. 'அலெக்ரா' பாட்டும், மெக்ஸிகோ காட்சி, சி.பி.ஐ ஆபிஸ் ஆடம்பரம் என்று கொஞ்சம் பணத்தை குறைத்திருந்தால் நூறு ஏழை மக்களுக்கு ஒரு மாதம் சாப்பாடு போட்டியிருக்கலாம்.
.

Thursday, August 20, 2009

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் - ஒரு எளிய அறிமுகம்



குரு என்பவருக்கு வயது 55. ஈரோட்டில் அலுவலக வேலை செய்யும் போது மயங்கி விழுந்து விட்டார். அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுத்தார்கள். துரதிஷ்டவசமாக அவரது குடும்பம் சென்னையில் இருந்தார்கள். மகன் அப்போது தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. லீவ் கூட எடுக்க முடியவில்லை. கண்களில் நீருடன் அம்மாவை மட்டும் ஈரோட்டுக்கு அனுப்பி வைத்தான்.

ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு குரு தன் மனைவியுடன் சென்னைக்கு வந்தார். இரண்டு மாதம் கலித்து மீண்டும் ஒரு மயக்கம். இந்த முறை அவர் மூளையில் ஒரு சிறு கட்டி இருப்பதை கண்டு பிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் எடுக்க வேண்டும் என்று கூறினர். மூன்று லட்சம் வரை செலவாகும் என்றனர். புது வேலையில் சேர்ந்த குருவில் மகனால் பத்தாயிரம் வரை தான் புரட்ட முடிந்தது. அம்மாவின் நகையை வைத்து அப்பா குருவை காப்பாற்றிவிட்டான் அந்த மகன்.

இந்த சம்பவம் நடந்தது 2005ல். அந்த மகன் நான் தான். இப்போது என் தந்தை ஆரோக்கியமாக இருக்கிறார். 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' பற்றிய முக்கியத்துவத்தை அன்று தான் உணர்ந்தேன்.

மனிதர்கள் தான் முக்கியம் என்று சொல்பவர்கள் கூட உடல் ஆரோக்கியம் கெடும் போது பணம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அந்த சமயத்தில் உதவிக்கு நண்பன், உறவனினர் என்று உதவ ஒரு சிலர் தான் முன் வருவார்கள். அவர்களை போல் நமக்கு உதவும் இன்னொரு நண்பன் தான் 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்'. அந்த இக்கட்டான சமயத்தில் 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' நம்பர் சொன்னால் போதும். மற்றதை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

என் நண்பரின் இரண்டு வயது மகளுக்கு இரண்டு நாட்களாக பேதியானது. அவளை மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் கொடுக்க வேண்டிய நிலை. அந்த சிறு குழந்தை படுக்கை இரண்டு நாளாக படுக்க வேண்டும். என் நண்பர் தன் 'மெடிக்கல் இன்ஷூரன்ஸ்' நம்பரை அந்த மருத்துஅவமனையில் கொடுத்தார். இரண்டு மணி நேரத்தில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கம்பேனியில் இருந்து தொலைப்பேசி அழைப்பு. " செலவபத்தி கவலப்படாதிங்க. நாங்க பாத்துக்கிறோம். குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்க" என்று ஆறுதல் கூறினர். அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை விபரம், இதுவரை கொடுத்த சிகிச்சை விபரம் போன்ற தகவலை இன்ஷூரன்ஸ் கம்பேனிக்கு மருத்துவமனை கொடுக்கும். இதை சரிபார்த்து அந்த பணத்தை இன்ஷூரன்ஸ் கம்பேனி நேரடியாக மருத்துவனைக்கு பணத்தை கொடுப்பார்கள். அந்த குழந்தை மருத்துவ செலவு இருபதாயிரம் வரையானது. அந்த செலவு முழுக்க மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கம்பேனி ஏற்றுக் கொண்டது.

மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களும் எங்காவது ஒரு இடத்தில் நடந்திருக்கும். யார் மூலமாவது நாம் கேள்வியாவது பட்டிருப்போம். இருந்தும், நம் குடும்பத்திற்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி பலருக்கு இருப்பது இல்லை.

ஏன்... ? எதற்காக.... ?

அடுத்த பதிவில்..........

***

இந்த பதிவை எழுத தூண்டிய தோழி வித்யா அவர்களுக்கு நன்றி.

Tuesday, August 18, 2009

வண்ணநிலவனும் இரண்டு நாவல்களும்

பல எழுத்தாளர்கள் வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் எழுதுவார்கள். அந்த புத்தகங்கள் வந்த சுவடே தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு சில எழுத்தாளர்கள் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தான் எழுதுவார். அவர் எழுத்துக்கள் நம்மை பெரிதும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர்களின் ஒருவர் தான் வண்ணநிலவன் அவர்கள். இவருடைய 'கடல்புறத்தில்' நாவலை படித்த பிறகு இவர் எழுதிய மற்ற புத்தகங்களை தேடிய போது மிக குறைவான புத்தங்கள் தான் கிடைத்தது. நாற்பது வருட எழுத்துறை வாழ்க்கையில் இதுவரை ஐந்து நாவல்கள் தான் எழுதியுள்ளார்.

கம்பாநதி

இது ஒரு நதியை பற்றிய கதையல்ல. நதியை சுற்றி வாழும் மனிதர்கள் பற்றியது. 'கம்பாநதி' அருகில் வாழும் மனிதர்களின் ஆசை, கனவு, வாழ்க்கை பற்றியது. நாவலில் நாயகன், நாயகி என்று யாருமில்லை. எல்லோரும் சம்பவத்தால் பின்னப்பட்டவர்கள். முக்க்கிய கதாபாத்திரங்களான பாப்பையா, சுந்திர பிள்ளை, சௌந்திரம், சிவகாமி, கோமதி போன்ற பாத்திரங்களை சொல்லலாம்.

வேலை தேடி அளையும் பாப்பையா, அவனை காதலித்து வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்ளும் கோமதி,குடும்பத்தை பற்றி கவலை மனதில் இருந்து இளசுகளுடன் சீட்டு விளையாடு சுந்திரபிள்ளை, சிவகாமி, சௌந்திரம் என்று பாத்திரங்களை நன்றாக பதிய வைத்திருக்கிறார்.

இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1979. அன்றைய காலக்கட்டத்தில் ஒரு இளைஞனின் முக்கிய தேவையான 'வேலை' எப்படி அவன் வாழ்க்கையை திருப்பி போடுகிறது என்று பாப்பையா கதாப்பாத்திரம் மூலம் வண்ணநிலவன் காட்டியிருக்கிறார். இறுதியில் அவன் இராணுவத்தில் சேர்வதை சொல்லும் போது அவனின் தேசபக்தி பற்றி எதுவும் சொல்லவில்லை. பாப்பையா கண்ணுக்கு முன் இருப்பது கோமதியை கைப்பிடிக்கும் கனவு தான். ஆனால், அவன் இராணுவத்தில் சேர்ந்ததும் அவள் வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

அடிப்படை தேவை கிடைத்துவிட்டால், ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடாது என்பதை இந்த நாவல் அழகாக உணர்த்துகிறது.

ரெயினீஸ் ஐயர் தெரு

வசனமில்லாத நாவல்.வேகமில்லாமல் மெதுவாக நகர்கிறது. சில இடங்கள் நகர்வதாக தெரியவில்லை. சிலருக்கு இது பிடிக்காமல் போகவும் வாய்ப்புல்லது. 'ரெயினீஸ் ஐயர் தெரு' வாழும் கதாப்பாத்திரங்களை ஒவ்வொரு வீடாக விவரிக்கிறார். தன் வர்ணனை மூலம் கதாப்பாத்திரங்களின் இயல்பை சொல்ல முயற்சித்திருக்கிறார். சில சமயம் கட்டுரை நூல் படிப்பது பிம்பம் தோன்றியது. சில கதாப்பாத்திரங்கள் மனதில் பதியவில்லை.

இதனாலே கதை எந்த இடத்திற்கு நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல் இருக்கிறது. அதனால் தான் இந்த நாவலுக்கு 'ரெயினீஸ் ஐயர் தெரு' என்று பெயர் வைத்தாரோ என்னவோ !!

இரண்டு நாவலும் வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்' இணையாக சொல்லமுடியவில்லை. இருந்தாலும், இரண்டு நாவலும் படிக்க வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

விலை.70.
பக்கங்கள்.256
நர்மதா பதிப்பகம்

பின். குறிப்பு : இந்த இரண்டு நாவல்களை கிழக்கு பதிப்பகம் சமிபத்தில் புது வடிவில் வெளியிட்டுள்ளது.

Sunday, August 16, 2009

சிங்கை நாதனை காப்பாற்றுவோம் !!

சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.


பண உதவி செய்ய வேண்டிய முகவரி:

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Wednesday, August 12, 2009

பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா ??



அடையாரில் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு மருந்து இருப்ப சொல்லி சிரிச்சை செய்ய, இன்னொரு பக்கம் பன்றி காய்ச்சலுக்கு பயன் படுத்தும் 'மாஸ்க்' அசுர விலை சொல்லி விற்க, ஊடகங்களும் தலைப்பு செய்திகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லி பிரசுரம் செய்ய.... யப்பா யப்பப்பா.... எதோ சென்னையே பன்றி காய்ச்சல் தவிப்பது போல் பல பீதிகளை பரப்புகிறார்கள். ஒவ்வொரு முறை இது போன்ற செய்திகள் படிக்கும் போது எனக்கு தொண்டை வலி வருவது போல் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 'Psychologically everyone getting affected by Swine-flu.'

வைரஸ் கிருமி எப்போது காற்றில் பரவி கிடைக்கிறது. ஒரு மாஸ்க் அணிந்து விடுவதால் 'பன்றி காய்ச்சலில் இருந்து தப்பி விடலாம்' என்று கிடையாது. அந்த மாஸ்க் அணிந்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் நடந்து பாருங்கள். மற்றவர் உடல் உரசி உங்களுக்கு பன்றி காய்ச்சல் வர வாய்ப்புண்டு.

தொலைக்காட்சிகளும் சரி... பத்திரிகைகளும் சரி... ஏன் இறந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லி மக்களை பயமுருத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை ஐந்நூறு மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்கள் எடுத்துக் கொண்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ( immunity ) குறைவாக இருப்பவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். அதனால் தான் குழுந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் மருந்து, உணவு சாப்பிட்டாலே போதும். எந்த வித கவலையுமில்லை.

இரண்டு மாதம் முழுக்க பிரபாகரனின் மரணத்தை பற்றியும், அதன் ரகசியத்தை பற்றியும் சொல்லி பணம் சம்பாதித்த ஊடங்கள், இப்போது ‘பன்றி காய்ச்சல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை சொல்லி சம்பாதிக்கிறார்கள். யாராவது குணமடைந்தவர்களை காட்டி, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கலாம். அதை ஏன் யாரும் செய்யவில்லை.

பன்றி காய்ச்சல் வரமால் தடுக்க... அசைவம் முழு வேக வைத்து சாப்பிட வேண்டும், கை கழுவ வேண்டும், தும்மல், இரும்மல் வரும் போது வாய்யை முட வேன்டும்... இவை எல்லாம் நாம் அன்றாடம் செய்யும் முறைகளே ! இதுவும் நமக்கு வரும் சாதான காய்ச்சல் தான். குடுமபத்தோடு முகமுடி அணிந்துக் கொள்ளும் அளவிற்கு பயம் தேவையில்லை.

நண்பர்களே ! இறந்தவர்கள் எண்ணிக்கையை மறந்து... பிழைத்தவர்களின் எண்ணிக்கை பார்த்து தைரியமாக இயல்பு வாழ்க்கையை நடத்துவோம்.

Tuesday, August 11, 2009

சுஜாதா : இன்னும் சில சிந்தனைகள்



"'சுந்தர ராமசாமி' அவர்கள் இறந்த போது வெகுஜனப் பத்திரிகைகள் சுரா பற்றி ஒரு பாராவிலிருந்து ஒரு பக்கம் வரை குறிப்பிட்டு 'யாருய்யா இந்தாளு ?' எல்லாரும் எழுதியிருக்காங்களே !' என்று விசாரித்தனர். ஒரு பெரிய மனிதர் இறந்து போனதும் இந்த விளைவு, மாநிலம் அல்லது நாடு தழுவிய குற்ற உணர்வாக வெளிப்படுவது வழக்கமே ! அவரை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற சங்கடம் எழும்" என்று சுராவை பற்றி சுஜாதா இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுயிருக்கிறார். எனக்கும் இதே குற்ற உணர்வு இருக்கிறது. சுஜாதா உயிருடன் இருக்கும் வரை என் கண்களுக்கு ஒரு சினிமா எழுத்தாளராக தான் தெரிந்தார். அவர் மரணத்திற்கு பிறகு தான் அவர் எழுத்துக்களை வாசிக்க தொடங்கினேன்.

சுஜாதவின் எழுதிய 'கற்றதும் பெற்றதும்' நிகரான இன்னொரு படைப்பு 'இன்னும் சில சிந்தனைகள்'. பல பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரை தொகுப்பு நூல்.

"கருத்துகளுக்கு இருக்கும் மவுசு" என்ற கட்டுரை படிக்கும் போது, " ஒருவரை மூலையில் மடக்கி பிடித்து, இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீகள் ? " என்று அறியக்கேட்டு, பெரும்பாலான் சமயங்களில் ஒத்துப் போவதையே விரும்புகிறார்கள். உலகில் எந்த விதமான கிறுக்குத்தனமான கருத்தாக இருந்தாலும், அதற்கு ஒன்றிரண்டு ஆதரவாளர் தேவைப்படுகிறார்கள்." சுஜாதா குறிப்பிட்டிருந்தார். இவர் எப்போது நம் பதிவுக்கு வந்தார். நம் கிறுக்குத்தனத்தை எல்லாம் படித்து இருப்பாரா...? என்று ஒவ்வொரு பதிவர்களின் மனதில் எழும்.

'அந்நியன் அனுபவங்கள்' பற்றி சொல்லும் போது மற்ற நாட்டில் இருக்கும் மரண புத்தங்கள் ' Egyptian Book of the Dead, Tibetian Book of the Dead பற்றி அறிமுகப்படுத்துகிறார். கிரேக்கப்புராணத்தில் 'ஸ்டைக்ஸ்' என்ற நதி போல, நமக்கு வைதரணி நதியிருப்பதை அழகாக விளக்குகிறார்.

ஒரு எழுத்தாளராக அவருக்கு இருக்கும் ஏக்கமும் சில இடத்தில் பலிச்சிட செய்கிறது.

"மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.

" இங்க யாராவது போலிசை அனுப்புங்க !" என்று ஒருவர் சத்தம் போட்டார். யாராவது செய்யக் கூடாதா ! இந்திய நாட்டின் தேசிய கேள்வி"

"உண்மை ஒவ்வொரு முறை சொல்லப்படும் போது கொஞ்சம் பொய் கலக்கப்படுகிறது. இறுதியில் பெருபாலும் பொய் மட்டும் பாக்கியிருந்து உண்மை நீர்த்துப்போகிறது.

"இளங்கோவடிகளை துறவி என்று சொல்வது கொஞ்சம் சிரம்மாக இருக்கிறது. தான் துறவி பூண்டதாக அவரே 'வரந்தரு காதை'யில் தேவந்தி மேல் கண்ணகி ஆவேசமாக வந்து சொல்வது கற்பிதம்" என்று வையாபுரிப்பிள்ளை சொல்வதை சுஜாதா அவர்கள் குறிப்பிடுகிறார்.

இனி புத்தகம் வாங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளேன். அடுத்த புத்தகம் வாங்கும் வரை.



அவரின் நகைச்சுவை...

" ஹ்யூமர் கிளப் பிரசிடெண்டாக, வருஷக்கணக்காக தமிழர்களைச் சிரிக்க வைக்க முயற்சித்த முகத்தில் கவலை ரேகை தெரிந்தது" என்று ஹ்யூமர் க்ளப் தலைவரை சொல்கிறார்.

நடசத்திர உலகத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்த போது, தங்குபவர்களை விட, பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.


திரைக்கதையும் சிறுகதையும்' கட்டுரை நிஜமாகவே நல்ல பயிற்சி கட்டுரை தான். இரண்டுக்கு உள்ள வேறுப்பாட்டையும், விளக்கத்தையும் சொல்லி புரிய வைப்பதற்கு சுஜாதா அவர்கள் தான் சரியான ஆள்.

நூறு புத்தங்கள் படிப்பதும் ஒன்று தான். சுஜாதாவின் வாசிப்பு அனுபவங்களை தெரிந்துக் கொள்வதும் ஒன்று தான். அந்த வகையில் 'சுஜாதாவின் வாசிப்பு அனுபவங்களை' முழுமையாக தெரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் இந்த புத்தகத்தில் ஒரளவு தெரிந்துக் கொள்ள முடிகிறது.

விலை.85
பக்கங்கள்.144
உயிர்மை பதிப்பகம்

Thursday, August 6, 2009

மாலன் எழுதிய "ஜனகணமன"

பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது மாலன் பற்றிய பேச்சு அடிப்பட்டது. நான் அவரிடம் "இவர் ஏன் ஈழத்துக்கு ஆதரவு தெரிக்கவில்லை?" என்ற கேட்டப்போது, அந்த பதிவர் " அவர் தீவிர தேசியவாதி. அவர் எழுதிய "ஜனகணமன" புத்தகத்தை படியுங்கள் உங்களுக்கே புரியும்" என்றார்.



அந்த பதிவர் சொன்னார் என்பதற்காக "ஜனகணமன" நூலை படித்தேன். காந்தி, நாதுரம் கோட்சே என்ற இருவர் மனநிலையில் நன்றாக எழுதியிருக்கிறார். குறிப்பாக கோட்சே காந்தியை கொல்ல துடிக்கும் மனநிலையில் பேசும் வசனங்கள் இன்றும் காந்திக்கு எதிராக இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு பகுதி முடியும் வார்த்தையில், அடுத்த பகுதி தொடர்வது போல் எழுதியிருப்பது பாராட்டுக்குறியது. காந்தியை பற்றி மூன்று தலைமுறைகளின் வாதத்தை நன்றாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான பதில் தான் இல்லை.

ரமணன் ஒருவனை தவிர இந்த புத்தகத்தில் வரும் எல்லா பாத்திரங்கள் நிஜப்பாத்திரங்கள். உண்மையான சம்பவங்கள். 95% உண்மை. 5% மட்டுமே கற்பனை கலந்திருப்பதால் இதை 'நாவல்' என்று கொள்ள முடியுமா தெரியவில்லை. ஆனால், வரலாறு புத்தகமாக கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளலாம்.

கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பகாலத்தின் புத்தக பதிப்பு. Crown size, ISBN இல்லை. ஆனால், அதே எளிமையான நடையில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் இன்று வரைக்கும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகத்தில் இருக்கிறது. இப்போது இரண்டாம் பதிப்பு 'Demy Size'யில் கிடைக்கிறது.

கல்லூரி படிக்கும் காலத்தில் எனக்கு காந்தி பிடிக்கும். நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூல் முதல் கவிதையே "மகாத்மாவுக்காக அழுகிறேன்" என்ற கவிதை தான். ஆனால், பல புத்தகங்கள் வாசிப்புக்கு பிறகு காந்தி மீது எனக்கிருந்த எண்ணம் மாறிவிட்டது. அவர் எனக்கு சுயநலவாதியாக தான் தெரிந்தார். கடவுள் இருக்கிறா ? இல்லையா ? என்ற வாதம் இருப்பது போல் காந்தி மகானா ? சுயநலவாதியா ? என்ற வாதம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த புத்தகத்தை படிக்க சொன்ன பதிவரை பற்றி சொல்ல மறந்திட்டேனே...!! வேறு யார்.. நம்ப 'லக்கி' தான்.

Saturday, August 1, 2009

வரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் !

அன்பு நண்பர்களே !

இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக நான் டி.வி.யில் வருகிறேன். அதுவும் முதல் தமிழ் சேனலான பொதிகை டி.வி.யில்.

வரும் செவ்வாய் கிழமை(4.8.09), இரவு 9 மணிக்கு நான் பொதிகை டி.வி.யில் வரும் 'வாதம் விவாதம்' நிகழ்ச்சியில் அடியேனும் பேசுகிறேன். நான் ஒன்றும் பெரிய மேடை பேச்சாளன் கிடையாது. ஆள் குறைகிறது என்று சொன்னார்கள். இடத்தை நிறப்பியதோடு என் கருத்தையும் சொல்லியிருக்கிறேன்.

நண்பர்கள் பார்த்து விட்டு உங்கள் கருத்தை கூறவும்.

நன்றி,

அன்புடன்,
குகன்.

LinkWithin

Related Posts with Thumbnails