வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 31, 2010

பா.ரா மற்றும் மார்ச் மாத ஜூரம்

மார்ச் மாதம் என்றால் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல் மாத சம்பள வாங்கும் எல்லா ஊழியர்களும் ஜூரம் வரும். ஆண்டு முழுக்க சந்தோஷமாக வேலை செய்யும் நிறுவனத்தின் பணத்தை செலவு செய்தவர்களுக்கு, இந்த மாதத்தில் கணக்கில் கொண்டு வர வேலை செய்ய வேண்டும். கொடுக்கல், வாங்கல், பில் என்று எல்லாம் இப்போது தான் கண்ணில் பட்டு தொலையும். இவ்வளவு நாள் என்ன கிழிச்ச என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இந்த மாதத்தின் உழைப்பு தான் அடுத்த வருட வளர்ச்சிக்கான திட்டத்திற்கு உதவுகிறது.

இப்படி, மாத கடைசி என்பதை விட வருட கடைசி என்பதில் மார்ச் மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்த மாதமாக இருக்கிறது.

மார்ச் வந்தது, நாகரத்னா பதிப்பகத்தின் ஆண்டு அறிக்கை தயார் செய்யும் பொது தான் கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்த விபரம் தெரிந்தது. நூல் விறபனை மூலம் வந்த வருமானம் செலவு செய்த தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட வரவில்லை. இத்தனைக்கும் கேபிள், பரிசல் புத்தகங்கள் வெளியிட்ட ஒரு மாதத்தில் 350 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. நான்கு மாதத்தில் 'என்னை எழுதிய தேவதைக்கு' 180 பிரதிகள் மற்றும் 'காந்தி வாந்த தேசம்' 200 பிரதிகள் வரை விற்றுள்ளது.

கழிவு, கடைகளுக்கு கமிஷன் என்று போக கைக்கு வந்த பணம் எப்படி மூன்றில் ஒரு பங்கு கூட ஏட்டவில்லை ?

இத்தனைக்கும் பதிப்பகத்திற்காக தேவையில்லாத எந்த செல்வும் செய்யவில்லை. இன்னும், அடிப்படை தேவைகளுக்காக பல செலவுகள் செய்ய வேண்டியதுள்ளது.

இதை என் நண்பனிடம் சொல்லும் போது, "ஆரம்ப ஆண்டு நிதி அறிக்கையே நஷ்டமா ! நா அப்பவே சொன்னேன் பாஸ்ட் புட் வைக்கலாம்னு" என்று கேலியாக சொன்னான்.

கண்டிப்பாக இதை நான் நஷ்டம் என்று சொல்ல மாட்டேன். எந்த புத்தகமும் நான் நஷ்டத்தில் விற்கவில்லை. இன்னும் விற்க வேண்டிய பிரதிகள் என் கையில் இருக்கிறது. இந்த வருடம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் விற்பனையாகும். இருந்தாலும் இது போன்ற கேலி பேச்சு மனதை புண் படுத்தாமல் இருப்பதில்லை.

எந்த தொழிலில் நஷ்டம் ஏற்ப்பட்டாலும் ஆறுதல் கூறும் நன்பர்கள் பதிப்பக தொழிலுக்கு மட்டும் ஏன் கேலியாக நினைக்கிறார்கள். எந்த முயற்சியையும் வீட்டில் ஆதரிப்பவர்கள் எழுதுவதையும், படிப்பதையும் மட்டும் ஏன் எதிர்கிறார்கள் என்று புரியவில்லை.

“நமக்கு எழுத வராதா !” என்று நினைக்கும் போதெல்லாம் எஸ்.ரா, சுஜாதா இல்லை கையில் கிடைக்கும் புத்தகத்தை படித்தால் போதும். மனது உற்சாகமாகிவிடும். அதே போல், எழுத்து மூலம் பொருளாதாரரிதியாக மன உலைச்சல் எற்பட்டால் நான் தேடிப்படிப்பது பா.ராவின் எழுத்துக்கலை தான். எழுத்தை எப்படி வியாபாரமாக்க வேண்டும் என்பதை அவர் கட்டுரையில் இருந்து கற்றுக் கொள்ளலாம். எழுத்தை சேவை என்று சொல்லுபவர்கள் அதற்காக அதிகம் உழைப்பதில்லை. ஆனால், அதை தொழிலாக கொண்ட எழுத்தாளரின் உழைப்பு சராசரி மனிதனின் உழைப்பை விட மிக பெரியது. இவரின் எழுத்து சிற்றிதழில் வந்து நான் பார்த்தில்லை. இவர் எழுதினால் ஜனரக பத்திரிக்கையில் வரும்.

இவரிடம் நான் பேசிய தருணங்கள் மிகவும் குறைவு. பேசிய கொஞ்ச நேரத்தில் என்னை எதோ யோசிக்க வைத்துவிடுவார். இவரிடம் பேசும் போதெல்லாம் எழுத்தை ஏன் தொழிலாக எடுத்துக் கொள்ள கூடாது என்று மனுஷன் யோசிக்க வைத்துவிடுவார். அந்த அளவிற்கு என்னை ஏகலைவனாக மாற்றிய துரோனர். (இவர் கண்டிப்பாக கட்டை விரல் கேட்க மாட்டார்)

சரி.. ! எதற்கு பா.ரா புராணம் என்கிறீர்களா.....??

நண்பனின் கேலி பேச்சாலும், நஷ்டத்தாலும் மன முடைந்த போது பா.ரா கிழக்கில் வெற்றி கதையை தனது பதிவில் எழுதியதை படித்தேன். மொத்தம் 10 கட்டுரைகள். முழு வீச்சில் படித்து முடித்தேன். அடுத்து, நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய கட்டுரையும் படித்தேன். மனது தெளிவு பிறந்தது. என் தவறுகள் புரிந்தது.

தவறுகளை ஏற்றுக் கொண்டால் தான் அதை திருத்த முடியும்.என் தவறுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதில், பதிப்பகம் தொடங்க இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

பா.ரா கட்டுரையில் கிழக்கில் வெற்றியை தனது குழுவில் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தார். ஆம் ! அது தான் என் பதிப்பகத்தின் மிக பெரிய குறை. அவ்வபோது, நிலா சில ஆலோசனை வழங்குவார். கேபிள் தன்நம்பிக்கை கொடுப்பார். பதிப்பகத்திற்கு என்று ஒரு குழு உருவாக்காமல் இருக்கிறேன். அதை செய்ய வேண்டும்.

புத்தகக் கண்காட்சி முடிந்து தேர்வு சமயத்தில் இரண்டு புத்தகம் வெளியிட்டிருக்க கூடாது. கண்காட்சிக்கு முன்பு கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Non-fiction புத்தகங்கள் சக்கை போடும் நேரத்தில் 'Fiction' புத்தகம் போட்டிருக்க கூடாது. இனி ! ' Non-fiction புத்தகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை, திருச்சியில் மட்டுமே நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற வெளியூரிலும் மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.வெளியூரில் புத்தகம் விற்பனை செய்து தரும் நண்பர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இடை தரகரர்களிடம் புத்தகம் போடும் வேலை வாங்குவதை நேரடியாக நானே களத்தில் இறங்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு பணியாள் வைக்க வேண்டும். இரண்டும் என்னால் இப்போதைக்கு செய்ய முடியாது.

பதிப்பகத்திற்கு என்று Shopping Cart' இணையதளம் உருவாக்க வேண்டும். 'EZee BookShop' தளத்தில் கேபிள், பரிசல் புத்தகங்கள் பெஸ்ட் செல்லராக இருப்பதால், சொந்தமாக இணையதளம் இருந்தால் இன்னும் லாபம் கொடுக்கலாம்.

குறைந்த அளவில் புத்தகம் வெளியீட்டு இருப்பதால் மார்க்கெட்டிங் செய்யும் போது மற்ற புத்தகங்கள் விற்பனை உரிமை வாங்கி அதனுடன் சேர்த்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.

எந்த தொழிலிலும் முதல் வருடத்திலேயே லாபம் கண்டவர்கள் யாருமில்லை. அப்படி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிக நாள் நிலைத்திருப்பதில்லை. கண்டிப்பாக வரும் நிதியாண்டு தவறுகளை திருத்தி லாபகரமாக்க வேண்டும்.

இதுவும் கடந்து போகும் !!

Tuesday, March 30, 2010

நாகரத்னா பதிப்பகத்தின் சிறுகதை - காம்போ பேக்



நாகரத்னா பதிப்பகத்தின் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் இப்போது ரூபாய்.180 மட்டுமே.
மற்றும் தபால் செலவு இலவசம்.

Book no.1 - என்னை எழுதிய தேவதைக்கு - குகன்
Book no.2 - நடைபாதை - குகன்
Book no.3 - லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண்
Book no.4 - டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா

எப்படி புத்தகம் வாங்கலாம் ?

1.

பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.

2.

M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

1 & 2 தபால் செலவு இலவசம் !!!

3.

இணையத்தில் புத்தகம் வாங்க விரும்புபவர்கள் http://ezeebookshop.com/ மூலம் வாங்கலாம்.ஆனால், இந்த இணையதளத்தில் வாங்குபவர்களுக்கு தபால் செலவு உண்டு.

Monday, March 29, 2010

ஹோமர் எழுதிய இலியட் மற்றும் ஒடிஸி

கிரேக்கத் தத்துவ ஞானியான பிளாட்டோ ஹோமரை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

" எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. அது தான் எனது வார்த்தைகளுக்கு ஒரு கட்டுகோப்பையும், தொடர்ச்சியையும் அளிக்கிறது. அவர் மகத்தான ஒரு தலைவரும், ஆசார்யனும் கூட !"

இந்தியாவின் மகத்தான இரண்டு இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைக் கொண்ட மற்றொரு நாடு உலகில் உண்டென்றால் அது கிரேக்கம் தான் ! இலியட், ஒடிஸி என்ற இடண்டு கிரேக்க இதிகாசத்தை எழுதியவர் ஹோமர். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. கண் பார்வையற்றவர். இதில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களையெல்லாம் ராகத்துடன் தெருவில் பாடிக் கொண்டே சென்றதாக வரலாற்றுக் குறிப்பு ஒன்று தெரிக்கிறது.

அதே சமயம், இப்படி ஒரு கவிஞரே பிறக்கவில்லை. இது அவரால் இயற்றப்படவுமில்லை என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால், பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கை ஹோமர் இயற்றிவை என்பது தான்.

அச்சிடும் இயந்திரங்கள் இல்லாத காலத்தில், கவிதைகளை படைத்து உடனுக்குடனே சபைகளில் அரங்கேற்றும் கவிஞர்களுக்கு கிரேக்கத்தில் அந்த நாளில் உயரிய மதிப்பு இருந்தது. மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் பாடல்களைப் பாடித்திரிந்த அப்படிப்பட்ட ஒரு கவிஞராக ஹோமர் இருந்திருக்கலாம்.

ஹோமர் பாடிய இந்தக் கவிதைகளை, பிற்காலத்தில் தலைநகரான அலெக்ஸாண்ட்ரோ நகரில் வாழ்ந்த புலவர்கள் தொகுத்து வரைமுறைப்படுத்தினர். அவர்கள் தான் இதற்கு இதிகாசங்களின் வடிவத்தை வழங்கியவர்கள். பிற்காலத்தில் உருவான வீரசாகச கதைகளுக்கெல்லாம் இந்த இரண்டுமே முன்னோடியாக விளங்கின. மேலைநாட்டுக் கதைகளில் இவற்றின் தாக்கம் தெளிவாகவோ புலப்படுகிறது.

இலியட் சுருக்கம் :

பிரயாம் என்ற மன்னரின் பிள்ளைகளில் ஒருவானான பாரிஸ் மிகவும் அழகானவன். அவன் அதீனிதேவியின் அன்புக்குப் பாத்திரமானவனும் கூட. அவன் பேரழகியான ஹெலனைப் பற்றிக் கெள்விப்பட்டு, அவளை காதலித்து, அவளது கணவரிடமிருந்து கடத்திச் தன் நாட்டுக்கு அழைத்து வருகிறான். கிரேக்கர்கள் இதை ஒரு மானப் பிரச்சனையாகக் கருதி, டிராய் வீரர்களுடன் போரிட்டு ஹெலனைக் கைப்பற்ற முயன்றனர். அதற்காக ஒன்பது வருட காலம் கடுமையாகப் போர் நடக்கிறது. இதில் தேவர் கூட்டத்தைச் சேர்ந்தவர், இரண்டு பக்கத்திலுள்ளவர்களையும் அணி பிரிந்து ஆதரிக்கிறார்கள். டிராய் போரின் வீரர்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களின் தொக்கு தான் இலியட்.


ஒடிஸி சுருக்கம் :

ஆங்கில மொழிப்பெயர்ப்பில் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு பக்கங்கள் கொண்ட இலியடின் தொடர்ச்சி தான் - ஒடிஸி.

டிராய் நகரப் போருக்குப் பிறகு, அந்த போரில் கலந்து கொண்ட ஒடிஸியஸ் தனது தாய்நாட்டுக்கு திரும்புவதை விவரிக்கும் பகுதி. இதில் கடற்பயணத்தில் இன்னல்கள் மற்று தேவகோபங்களும் இடம் பெறுகின்றன. கிரேக்கர்கள் வீரத்துக்கும் மானத்துக்கும் அந்த காலத்தில் அளித்த மதிப்பை விளக்கும் சம்பவங்களை உள்ளக்கியது.

ஹோமர் எழுதிய இரண்டு இதிகாசங்களை சிவன் தமிழில் மிக எளிமையாகவும், சுருக்கமாவும் எழுதியிருக்கிறார். உலக இதிகாசத்தை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இதை படிக்கலாம். வாசிப்பு அனுபவத்திற்காக படிப்பவர்களுக்கு இந்த மொழியாக்கம் பிடிக்காமல் போகலாம்.

புத்தகம் கிடைக்குமிடம் :

கலா நிலையம்
244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 4

'இலியட்' புத்தகத்தை கிழக்கு மொழியாக்கம் செய்த்துள்ளது. வாசிப்பு அனுபவம் இந்த புத்த்கத்தை வாங்கலாம்.

Friday, March 26, 2010

தெரு கூத்து …



என் முகத்தில் காலை சூரியன் வெளிச்சம் பலிர் என்று அடித்தது. இரவு நேரம் காற்றோட்டமாக இருக்கும் என்று ஜன்னலோர சீட்டு பார்த்து பஸ்ஸில் அமர்ந்தேன். அதுவே என் தூக்கத்திற்கு எதிரியாக இருக்கும் என்று காலையில் தான் தெரிந்து கொண்டேன். ஐந்து நாட்கள் பெட்ரோல், டீசல் புகையில் இருந்து விடுதலை பெற்று என் பூஞ்சோலை கிராமத்துக்கு வந்தேன். ஒரு மாதத்தில் சனி, ஞாயிறு என்று சேர்ந்தால் போல் தான் எனக்கு விடுமுறை கிடைக்கும். எந்த அரசாங்க விடுமுறை என்றாலும் விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு மாதத்தில் கிடைக்கும் இந்த இரண்டு நாள் தான் என்னை ரீஸார்ஜ் செய்யும் சார்ஜர். என் கிராமத்தின் பயிர், மரங்கள், வாய்கால் வரப்பு என்று என் நகர வாழ்க்கையை மறக்க செய்துவிடும். என் கிராமத்தில் கால் பதித்தவுடன் சுதந்திரமாக இயற்கை மூச்சை சுவாசித்தேன். என்னை அழைத்து செல்வதற்காக மாடசாமி அண்ணன் மாட்டு வண்டியுடன் தயாராக இருந்தார். எனக்கும், மாடசாமி அண்ணனுக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்கும். சிறு வயதில் இருந்து என் வீட்டில் இருக்கிறார். எங்கள் வீட்டில் யாரும் அவரை வேலைக்காரராக நடத்தியதில்லை. அவர் என் குடும்பத்தில் ஒருவர். என்னை சின்ன வயதில் இருந்து வளர்த்தவர் அவர் தான்.

" வாங்க ராமு தம்பி ! பிராயாணம் எல்லாம் எப்படி இருந்தது ?"

" நல்லா இருந்தது அண்ணே ! நீங்க எப்படி இருக்கீங்க...? வீட்டுல அண்ணி, பையன் எப்படி இருக்காங்க ?"

" எல்லோரும் நல்லா இருக்கோம் ! பைய கொடுங்க..."

" வேண்டாம் அண்ணே ! நானே எடுத்திட்டு வரேன்" என்று கூறி என் பையை மாட்டு வண்டியில் போட்டேன்.

என் கிராமத்தில் பெட்ரோல் வண்டிகள் அதிகம் இல்லை. பெட்ரோல் பன்க் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், பலர் சைக்கிலும் , மாட்டு வண்டியும் தான் வைத்திருக்கிறார்கள். பலருக்கு ப்ளாஸ்டிக் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். அதனால், எங்கள் கிராமத்து இயற்கை இயற்கையாகவே இருந்தது.

இயற்கை அழகை ரசித்ததில் என் வீடு வந்ததை கவனிக்கவில்லை.

" ராமு தம்பி ! வீடு வந்திருச்சி இறங்குங்க..." - மலர்ந்த முகத்துடன் மாடசாமி கூறினான்.

ஒரு மாதத்திற்கு பிறகு என் கால்கள் வீட்டில் பதிந்தது. அப்பா என் வரவை எதிர்பார்த்து இருந்தார். எனக்காக அம்மா கோழி கறி சமைத்து வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா கையால் கோழி கறியை ஒரு பிடி பிடித்தேன். மாட்டை கட்டி விட்டு மாடசாமி அண்ணன் விட்டுக்குள் வந்தார்.

" வா மாடசாமி ! வந்து ஒரு வாய் சாப்பிடு" என்றாள் என் அம்மா.

" இல்லம்மா ! வீட்டுக்கு போனும். என் பையனுக்கு காய்ச்சல். எத பார்த்து பயந்தான் தெரியல்ல. மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கான்." என்று கவலையாக மாடசாமி கூறினார்.

" பையனுக்கு என்ன ஆச்சு...? எப்போ இருந்து காய்ச்சல்...?" என்றேன்

" நம்ப கூத்து நாடகம் ஆரம்பிச்சதுல்ல இருந்து காய்ச்சல்..." என்றார்.

" என்ன கூத்து...?"

" நம்ம ஊர் திருவிழாவுல.... சஷ்டிக்கு முருகன் அசுரர்கள வதம் பண்ணுற கூத்து நடக்குது. அதுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசுரன நான் நடிக்கிறேன். அத பாக்குறதுக்கு என் பொண்டாட்டியும், பிள்ளையும் வந்தாங்க. என்ன காத்து பட்டுச்சோ தெரியல்ல. அதுல இருந்து காய்ச்சல் இருக்கு ?"

" டாக்டர் கிட்ட காட்டுனீங்களா...?

" காட்டுனேன் தம்பி. பையன் எதோ பார்த்து பயந்திருக்கிறான் சொன்னாரு. மருந்து கொடுத்திருக்காரு. கொடுத்து பார்த்தேன். குணமாகல்ல. வேப்பிலை அடிச்சி பார்த்தாச்சி. என்னனு தெரிய மாட்டிங்குது.."

" நான் சாப்பிட்டு பையன பார்க்க வரேன்..." என்றேன்.

" பரவாயில்ல தம்பி. இப்போவே ரொம்ப மணி அயிடுச்சு. ஆறு மணிக்கு கூத்து ஆரம்பிச்சிடும். அங்க வந்திங்கனா என் பையனையும், பொண்ணாட்டியும் பார்க்கலாம்."

" சரி அண்ணே..! நான் ஆறு மணிக்கு கூத்து பட்டறைக்கு வந்துடுறேன்"

மாடசாமி அண்ணன் தன் வீட்டுக்கு சென்றார். பயண கலைப்பு வேறு. மதியம் சாப்பாடு அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டேன். பஸ்ஸில் சரியாக தூக்கம் இல்லாததால் தூக்கம் என் கண்ணை சொக்கியது. நன்றாக படுத்து உறங்கினேன்.

அப்போது தான் தூங்கியது போல் இருந்தது. அதற்குள் மணி ஐந்திரை ஆகிவிட்டது. மாடசாமி அண்ணனின் கூத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதே சமயம் அவர் பையனையும் பார்க்க வேண்டும். சீக்கிரமாக என் முகத்தை அலம்பி கொண்டு கூத்து பட்டறைக்கு சென்றேன்.

கூத்து பட்டறையில் ஒவ்வொருவரின் முகத்திலும் முக சாயம் புசிக் கொண்டு இருந்தார்கள். யார் மாடசாமி அண்ணன் என்று எனக்கு தெரியவில்லை. உடனே மாடசாமி அண்ணன் குரல் கேட்டது.

"தம்பி ! நான் இங்க இருக்கேன் "

திரும்பி பார்த்த போது பச்சை சாயமும், பய முறுத்தும் கருப்பு மை அப்பிய விழிகளுடன் இருந்தார்.

" என்ன அண்ணே. அடையாளமே தெரியல்ல. நீங்க நடிக்கும் போது அண்ணியாள கூட கண்டு பிடிக்க முடியாதுனு நினைக்கிறேன்."

" அசுரனா நடிக்கிறது நான் தான்னு முன்னாடியே பொண்டாட்டி, பையன் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அந்த சந்தேகம் வராதுல்ல.." - சிரித்துக் கொண்டு கூறினார்.

சரியாக 6:30 மணிக்கு கூத்து தொடங்கியது. அண்ணியும், அவர் பையனும் கூத்து பார்ப்பதற்காக முன் வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். நான் என் அண்ணி அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணியிடம் இருந்து பையனை வாங்கி என் மடியில் வாங்கி கொண்டேன். அவனுக்கு ஆறு வயது இருக்கும். ரொம்ப சுட்டியாக திரிபவன் காய்ச்சல் வந்ததில் இருந்து துவண்டு போய் இருந்தான். அவன் உடல் அனலாய் கொதித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

கூத்து தொடங்கியது. என்ன தான் ஏ.சி அறையில் அமர்ந்து படம் பார்த்தாலும், தெரு கூத்தை தரையில் அமர்ந்து பார்ப்பது போல் வரும் சுகம் கிடையாது. இந்த சுகம் கிராமத்தினருக்கு மட்டுமே தெரியும்.

" வந்தேன் வந்தேன்...மன்னன் வந்தேன்..." - என்று மாடசாமி அண்ணன் அரிதாரம் புசிய முகத்தோடு எங்கள் முன் தோன்றினார். மாடசாமி அண்ணன் வந்ததும் பலர் கைதட்ட தொடங்கினர். சிறு வயதில் இருந்தே அவருக்கு நடிப்பு ஆர்வம் அதிகம். தெருகூத்து நடிப்பில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம்.

கூத்து தொடங்கி ஒரு மணி நேரம் மேல் ஆகிவிட்டது. கூத்தின் இறுதி கட்டம் நெருங்கியது. முருகர் கடவுள் அசுரனை கொள்ளும் கட்டம். முருகராக நடித்தவர் அசுரரை... அதாவது மாடசாமி அண்ணனை வேலால் கொல்ல வேண்டும். மாடசாமி அண்ணன் மீது வேல் படும் போது பலர் 'அரோகரா... அரோகரா...' என்று கத்தினர். ஒருவன் மட்டும் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான். அதை என்னால் நன்றாக உணர முடிந்தது. பயந்து நடுங்கியது என் மடியில் அமர்ந்த மாடசாமியின் மகன். அவன் நடுங்கியது அண்ணி கவனிக்கவில்லை. நான் அவனை தனியாக அழைத்து சென்று பேசினேன்.

" என்னடா.... ஆச்சு. ஏன்டா பயப்படுற..." என்று கேட்டேன்.

" அப்பா.. அப்பா.. கொன்னுடாங்க...." என்று பயத்தில் பிதறினான்.

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. பத்து நிமிஷத்துல வந்திருவாரு..."

"ஏன் தினமும் எங்கப்பாவ வேலால குத்துறாங்க ?" என்று மழலை கலந்த மொழியுடன் கேட்டான்.

நமக்கு தான் மாடசாமி செய்தது நடிப்பென்று தெரியும். பாவம் சின்ன குழந்தையின் பிஞ்சு மனம் அது நிஜம் என்று நம்பி ஒவ்வொரு நாளும் மாடசாமி மீது வேல் பாய்யும் போது கதறி இருக்கிறான். அண்ணி 'அரோகரா' போடும் கோஷத்தில் தன் மகன் பயப்படுவதை கவனிக்காமல் இருந்திருப்பார். நான் என்ன சொல்லியும் அந்த பையன் பயம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் மாடசாமி அண்ணன் முக சாயத்தை கலைத்து விட்டு வந்தார். அதன் பிறகு தான் அந்த பையனுக்கு உயிரே வந்தது.

மாடசாமி அண்ணன் வந்ததும் அவரை இருக்க கட்டி பிடித்துக் கொண்டான். மாடசாமிக்கு இது ஒன்றும் புதிதில்லை. ஒவ்வொரு நாளும் தன்னை பாசத்துடன் கட்டி பிடிக்கிறான் என்று நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அவன் பயத்தில் தான் கட்டி பிடித்தான் என்று என்னால் உணர முடிந்தது.

"என்ன தம்பி ! பட்டனத்துல படம் பார்த்த நீங்க கூத்து பார்க்க வந்திருக்கீங்க. கூத்து பிடிச்சிருந்ததா...?"

" என்ன அண்ண இப்படி சொல்லுறீங்க...? கூத்துல இருந்து தான் சினிமாவே வந்தது.."

" அது சரி தான். ஆனா யார் அத ஞாபகம் வச்சிருக்காங்க...!"

" உங்க கிட்ட தனியா பேசனும்" என்றேன்.

தன் கையில் இருந்த மகனை அண்ணியிடம் கொடுத்து விட்டு என்னுடன் வந்தார்.

மாடசாமி அண்ணனிடம், " பையனுக்கு காய்ச்சல் வந்ததுக்கு காரணமே நீங்க தான்" என்றேன்.

அவர் என்னை உற்று பார்த்தார். "என்ன சொல்லுறீங்க தம்பி ?" மெல்லிய குரலில் கேட்டார்.

" பையன காத்து கருப்பு ஒன்னும் அடிக்கல்ல. கூத்துல உங்கள குத்துனத பார்த்து நிஜம்னு நம்பிட்டான். ஒவ்வொரு நாளும் உங்க மேல் வேல் குத்தும் போது பயந்து போய் இருக்கிறான். உங்க மேல இருக்குற பாசம் தான் அவன் காய்ச்சலுக்கு காரணம்."

நான் பேசுவதை கேட்டு தன்னால் தன் மகன் பயப்படுவதை உணர்ந்தார். கூத்து முடியும் போது பலர் தன்னை பாராட்டியதில் தன் மகனின் பாசம் மாடசாமி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

" இப்போ என்ன தம்பி பண்ணுறது...?"

" உங்க பையன் பழையப்படி சந்தோஷமா இருக்கனும்னா ? அது உங்க கையில தான் இருக்கு " என்றேன்.

" என்ன பண்ணனும் சொல்லுங்க..?"

" நாளைக்கு கூத்துல நடிக்காதீங்க. உங்க பையனோட உக்காந்து கூத்து பாருங்க. உங்களுக்கு பதிலா வேற யாராவது நடிக்க நான் ஏற்ப்பாடு பண்ணுறேன்."

சிறு வயதில் இருந்து மாடசாமி அண்ணனுக்கு கூத்துக் கட்டி வேஷம் போடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால், தன் மகனின் பயத்தை பார்த்த பிறகு நடிப்பு அவருக்கு பெரிதாக தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலும் சொல்லாமல் கூத்து நடத்தும் தலைவரிடம் விஷயத்தை சொன்னார். தலைவரும் சற்று நேரம் யோசித்தார். அதன் பின் " பரவாயில்ல மாடசாமி ! நம்ப பையன் ஒருத்தன் ரொம்ப நாளா நடிக்குறதுக்கு வாய்ப்பு கேட்டுட்டு இருந்தான். அவன வச்சி சமாளிச்சுக்கிறேன். நீ பையன பார்த்துக் கோ."

கூத்து தலைவரிடம் பேசிய பின் தன் மனைவியிடம் இருந்து தன் மகனை வாங்கி வாரி அனைத்துக் கொண்டார். தன் கண்களால் எனக்கு நன்றி கூறினார்.

அடுத்த நாள்.

நானும், மாடசாமி அண்ணன் குடுமபத்துடன் கூத்து பார்க்க சென்றோம். அப்பா தன் அருகில் இருந்ததால் பையன் முகம் பிரகாசமாக இருந்தது. இந்த அசுரன் உடலில் வேல் படும் போது அந்த பையனும் மற்றவர்களோடு சேர்ந்து 'அரோகரா' என்று கத்தினான். அவனுடைய பழைய தெம்பு வந்தது. புது நடிகன் மாடசாமி அண்ணன் அளவுக்கு நடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் நடித்தான். மாடசாமிக்கு கிடைத்த கைதட்டல் அவனுக்கு கிடைக்காத போது தெரிந்துக் கொண்டேன் 'மாடசாமி எங்களூர் சுப்பர் ஸ்டார்' என்று !

அன்று இரவே நான் ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. மாடசாமி அண்ணன் வழக்கம் போல் என்னை பஸ் ஏத்திவிட்டார். நான் செல்லும் போது என் கையை பல முறை நன்றி கூறினார். மன நல மருத்துவராய் என் கடமையை தான் செய்தேன் என்று கூறினேன். பெட்ரோல், டீசல் காற்றை சுவாசிக்க பஸ்ஸில் ஏறி சென்னைக்கு புரப்பட்டேன்.

Thursday, March 25, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் வகைகள்

'கேஷ் பேக்' (Cash back) கிரடிட் கார்ட் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்கினால் 5 ரூபாய் நமக்கு திருப்பி கொடுப்பார்கள். அதனால் பெரும்பாலும் 'கேஷ் பேக்' வாங்க விரும்புவார்கள். இன்னும் விழாக்காலங்களில் ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் கிரடிட் கார்ட் பயன்படுத்த பல சலுகைகள் எல்லாம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். அதில் எத்தனையோ நிபந்தனைகள் எல்லாம் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளாமல் பொருளை வாங்குவார்கள். எந்த லாபமும் இல்லாமல் வங்கிகள் 30% cash back என்று விளம்பரம் செய்யாது. அந்த விளம்பரத்தை கவனித்தால் அதில் கூட Condition Apply என்று இருக்கும்.



இதிலும் கன்டிஷனா...? ஆமாம். அப்படி என்ன கன்டிஷன் ? அதை மிக சின்ன எழுத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பரும்பாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு அந்த விளம்பரத்தில் 30,000 ரூபாய் மேல் வாங்கினால் தான் 30% தள்ளுபடி கொடுப்போம் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்....?

'கேஷ் பேக்' கிரடிட் கார்ட் நடக்கும் நம் கண்ணுக்கு தெரியாத சில நிபந்தனைகள் இப்படி தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் வங்கிகள் அதிகபட்சம் தன் லாபத்தில் இருந்து 5% சதவீதம் 'கேஷ் பேக்'காக கொடுக்கலாம். 30%,50%.... இன்னும் சில கிரடிட் கார்ட் 100% (cash back) என்று சொன்னால் நிச்சயமாக சில நிபந்தனைகள் இருக்கும். கவனமாக பார்க்கவும்.

'கேஷ் பேக்' அடுத்து பலரும் வைத்திருப்பது 'பெட்ரோ கார்ட்' (Petro Card). வண்டிக்கு பெட்ரோலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக கிரடிட் கார்ட்டில் வாங்குவது தான் 'பெட்ரோ கார்ட்'. அதாவது, சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இன்டியன் ஆயில் பெட்ரோல் வாங்கினால் சர்ச்சார்ஜ் (Surcharge) கிடையாது. ஆனால், அதே இன்டியன் ஆயிலை ICICI அல்லது HSBC கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் சர்ச்சார்ஜ் போடுவார்கள். அதே போல் ஷேல் பெட்ரோல் HSBC கார்ட்க்கு சர்ச்சார்ஜ் கிடையாது.

அடுத்து இன்னொரு வகையான கிரடிட் கார்ட் பார்ப்போம். Travelling Card அடிக்கடி விமானத்தில் பயணம் / ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் பயன்ப்படும். உதாரணத்திற்கு சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்து ஜெட் எர்வேஸ்யில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தும் போது சில சிறப்பு சலுகைகள்கள் கிடைக்கும். ஆனால், டெக்கான் எர்வேஸ்யில் வாங்கினால் அந்த சலுகை கிடைக்காது. பெரும் பாலான வங்கிகள் சலுகை என்று சொல்லுவது 'கேஷ் பேக்' அல்லது 'தள்ளுபடி' தான். Travelling Card யில் டிக்கெட் வாங்கிய பணத்திற்கு தான் சலுகை பொருந்தும். எதாவது பொருளை வாங்கினால் சலுகை எதுவும் இருக்காது. பெட்ரோ கார்ட்டிலும் அப்படி தான். சலுகை எல்லாம் பெட்ரோல் வாங்குவதற்கு மட்டும் தான்.


அடுத்து நாம் பார்க்க போவது Shopping Card. பெயர கேட்டவுடனே அதிருதுல....!! இந்த கார்ட் மனைவிமார்களுக்கு மிகவும் பயன்ப்படும் கார்ட்.(கணவன்மார்களுக்கு தொல்லை கொடுக்கும் கார்ட் கூட !!) மாதம் வீட்டிற்கு என்று இவ்வளவு பொருள் வாங்க வேண்டும் எல்லோர் வீட்டில் இருக்கும். Shopping Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வங்கிகள் சில அன்பளிப்பு, சலுகை என்று கொடுக்கும்.

இதுவரை நாம் கிரடிட் கார்ட் வகைகள் மட்டும் தான் பார்த்தோம். ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் எற்றாருக்கு போல் கிரடிட் கார்ட் வைத்திருக்கும். கிரடிட் கார்ட் அம்சங்களும் மாறி இருக்கும். வாடிக்கையாளரை கவர்வதற்காக கிரடிட் கார்ட் தன்மைகளையும், சலுகைகளும் வேறுப்படும். ஒவ்வொரு கிரடிட் கார்ட் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த நீதி கிடையாது. அதனால் கிரடிட் கார்ட் வாங்கும் எது நமக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு வாங்க வேண்டும்.

Wednesday, March 24, 2010

MTC பஸ்ஸின் கஸ்டமர் சர்வீஸ்

சமிபத்தில் வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம். பஸ்ஸில் பயணம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக பயணுள்ளதாக இருக்கும்.

***

நான் சென்னை தொரைப்பாக்கத்தில் வேலை செய்கிறேன். ஜெயின் கல்லூரியில் இருந்து டைடல் பார்க் வரை பஸ்ஸில் வருவேன். அங்கிருந்து ட்ரெயின் பிடித்து வீட்டுக்கு செல்வேன். கேளம்பாக்கத்தில் ( 19B,21H) வரும் பஸ் பெரும்பாலும் டைடல் பார்க்கில் நிற்காது. அதனால், நான் T51 பஸ் மட்டும் டைடல் பார்க் நிறுத்தத்தில் நிற்பதால் அதில் ஏறி வருவேன். சமிப காலமாக 19B பஸ் கூட டைடல் பார்கில் நிற்க தொடங்கியது.



இன்று 9.28 டைடல் பார்க் ட்ரெயின் பிடிப்பதற்காக அவசரமாக 8:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன். ஜெயின் கல்லூரியில் இருந்து 19B பஸ்ஸை சரியாக 8:45 மணிக்கு ஏறினேன். கன்டக்டரிடம் டைடல் பார்க்க்கு டிக்கேட் கேட்ட போது பஸ் அங்கு நிற்காது என்றார். ஒன்று சிக்னலில் இறங்க வேண்டும் அல்லது டைடல் பார்க்கின் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும். நான் பல முறை பேசியும் வாதாடியும் கன்டக்டர் கேட்பதாகயில்லை. நான் தினமும் 19Bயில் தான் வருகிறேன் என்று சொல்லியும் அவர் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். என் மொபைலில் 'MTC' பஸ் பற்றிய கம்ப்ளைன்ட் நம்பர் (98843 01013) ஒன்றை வைத்திருந்தேன். அந்த நம்பருக்கு போன் போட்டு கன்டேக்டர் வழக்கமான ஸ்டாப்பிங்கில் பஸ் நிறுத்த முடியாது என்று கூறியதை கூறினேன்.

எதிர் முனையில் இருப்பவர் கன்டக்டரிடம் போனை கொடுக்க சொன்னார். ஆனால், கன்டக்டர் போன் வாங்கி பேச மறுத்துவிட்டார். பிறகு, என்னுடன் பேசியவர் பஸ் ரிஜிஸ்ட்ரெஷன் நம்பர் கேட்டார். இப்போது பஸ் எங்கு இருக்கிறது என்ற விபரத்தையும் கேட்டார். நான் கந்தன்சாவடியில் இருப்பதை கூறினேன். கொஞ்ச நேரத்தில் அவர்களை அழைத்து பேசுவதாக கூறினார். நான் எப்படி இவர்களை தொடர்பு கொள்வார்கள் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், Wireless transmeter மூலம் டிரைவரிடம் பஸ் நிறுத்த கத்தினார். பஸ் டிரைவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இது அவருக்கு முதல் அனுபவமாக கூட இருக்கலாம். பஸ் டிரைவர் வண்டியை நிறுத்தி transmeter யில் பேசுவதை கேட்டார்.

எதிர்முனையில் பஸ் டைடல் பார்க்கில் ஏன் நிறுத்துவதில்லை என்று கேட்டார். அதற்கு டிரைவர் டைடல் பார்க்கில் பஸ்ஸில் நிறுத்துவதாகவும், சென்ற முறை கூட நிறுத்தியதாகவும் கூறினார். பிறகு, எதிர்முனையில் இருப்பவர் கன்டக்டர் அழைத்து ஏன் பயணியிடம் அப்படி பதிலளித்ததாக கேட்டார். கன்டக்டரால் ஒன்றும் பேசமுடியவில்லை. நிலைமை புரிந்துக் கொண்ட டிரைவர் எதிர்முனையில் இருப்பவரிடம் கன்டக்டர் புதியவர் என்று சொல்லி சமாளித்தார். பிறகு, எதிர்முனையில் இருப்பவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு, பஸ் டைடல் நிறுத்ததில் நிற்கும் என்று கூறினார். நான் நன்றி கூறிவிட்டு என் இடத்திற்கு வந்தேன்.


என்னுடன் பயணம் செய்த பயணிகள், டிரைவர், கன்டக்டர் அணைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். ஒரு சிலர் என்னிடம் கம்ப்ளைன்ட் எண்ணை வாங்கிக் கொண்டனர். எனக்கும், டிரைவர், கன்டேக்டர் உட்பட இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

அரசாங்கத்தை குறை சொல்லும் நேரத்தில் இது போன்ற செயல்களை குறிப்பிட்டு பாராட்டலாமே.

Complaint Phone no. for MTC bus: 9884301013,9445030516, 9383337639

Forward மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் சிதம்பரம் அவர்களுக்கு நன்றி !!

Tuesday, March 23, 2010

வங்கி ரகசியம் - ஓர் எதிர்வினை (KATHIR = RAY)

நான் கிரடிட் கார்ட் வங்கியின் அங்கமாக வைத்தே 'வங்கி ரகசியம்' பதிவை எழுத தொடங்கினேன். முழுக்க முழுக்க கிரடிட் கார்ட்டை பற்றி தொடர் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. என் முதல் பதிவு 'சேமிப்பு வட்டி கணக்கு' கிரடிட் கார்ட்டு சம்மந்தம் இல்லாத பதிவு. பலர், வங்கி ரகசியம் தொடரில் கிரடிட் கார்ட் எழுதியதும் பலர் ‘கிரடிட் கார்ட்’ சம்மந்தமாக பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

KATHIR = RAY என்ற நண்பர் தனது பின்னூட்டத்தில் பத்து கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான என்னுடைய பதில்...

1.Credit period epdi calculate pandrange. Porul Vanganathula irunda? or Card Active la irundu every 50 days count ah?

பொதுவாக வங்கிகள் மாதம் இரண்டு கட்டமாக தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பும்.

உதாரணத்திற்கு,
முதல் கட்டம்
1.1.2010 முதல் 31.1.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 20.2.10 குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 10.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.

இரண்டாவது கட்டம்
12.1.10 முதல் 12.2.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 3.3.10 (50 நாள்) குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 22.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.

முதல் கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது கட்டத்தில் பில் வராது. அதே போல், இரண்டாவது கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் கட்டத்தில் பில் வராது.

இந்த இரண்டு கட்டமும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஒரு சில வங்கிகள் ஒரே கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பலாம். ஆனால், நீங்கள் வாங்கும் எல்லா பொருளுக்கும் 50 நாள் கடன் வசதி கிடையாது.

31.1.10 ( முதல் கட்டம்) ஒரு பொருள் வாங்கிருந்தால் 20.2.10 தேதிக்குள் பணத்தை கட்டியாக வேண்டும். உங்களுக்கு எப்போது பில் வரும், எந்த தேதிக்குள் பில் தெரிந்துக் கொண்டு கிரடிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டும்.

2. What are the Hidden charges is there?

Hidden charges கிடையவே கிடையாது என்று சொல்லி தான் கிரடிட் கார்ட் எல்லோர் தலையில் கட்டுகிறார்கள். வாங்கிய பிறகு தான் ஒவ்வொரு வங்கியின் Hidden charges ' தெரிகிறது. Hidden charges ஒவ்வொரு வங்கியின் சதம்பர ரகசியம். முழுமையாக தெரிந்துக் கொள்வது கடினம்.

3. How the service charges differ from each credit card companies?

நீங்கள் Citibank Credit card' வைத்து ஒரு பொருளை வாங்குகிறீர்கள். அந்த கார்ட்டை Citibank EDC machine யில் தேய்த்தால் உங்களுக்கு 'செர்விcஎ சர்கெச்' கிடையாது. ஆனால், Citibank Credit card' ஐ HDFC/Axis bank EDC Machine ' யில் தேய்த்தால் 2.5 % 'செர்விcஎ சர்கெச்' போடுவார்கள்.

ஒரு சில கடையில், 'service charges சேர்த்தே உங்களை பணம் கட்ட சொல்லுவார்கள்.

நீங்கள் பயன்படுத்தாத கார்டுக்கு 'service charges’ போட்டால் பணம் செலுத்த வேண்டாம். அந்த மாதிரியுடன் உறவு வைத்துக் கொள்ளுவது என்றும் ஆபத்தானது. கார்ட்டை திருப்பி கொடுத்துவிடவும்.


4. What are the solution for technical problem?
Like excess money transferred.
Like double time credit problem


இது போன்ற சமயத்தில், Customer Care ஐ தொடர்பு கொள்ள வேண்டும். double time/ Excess money யான 'Transaction' ஐ ப்ளாக் செய்ய வேண்டும். உங்களிடம் ஒரு PDF file அனுப்பி, அதை நிரப்பி பேக்ஸ் / ச்கேன் மூலம் அனுப்ப சொல்லுவார்கள். அதன் பின், வங்கி தவறு நடந்த காரணத்தை விசாரிக்கும். தங்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதிகமான பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

5.What is the service charge for monthly or yearly?
மூன்றாவது கேள்விக்கு பதில் தான் இதற்கும்.

6.What are the risk factors?
7.Details of Terms and conditions of every credit card company?

இதை பற்றி தனி பதிவு எழுதுகிறேன்.

8.Which card is best?
இந்த வம்பே வேண்டாம். நான் யாரையும் 'Promote' செய்யும் நோக்கத்துடன் இந்த பதிவு எழுதவில்லை.

ஒரு சிலருக்கு, குறிப்பிட்ட வங்கியின் சேவை பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. ‘Best or Worst’ என்பதை பெரும்பான்மையின் அனுபவம் தான் தீர்மானிக்கிறது.

9. Comparative statement of Every credit card companies Services and charges.
இந்திய அரசியல் கட்சிகளை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களின் சாதனைகளை சொன்னால் இதற்கு நான் பதில் சொல்கிறேன்.

10. Describe details statement of the good process using Credit card. Example Credit card Statement for Good Transaction and bad transaction.
முதல் கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுயிருக்கும் உதாரணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.

Wednesday, March 17, 2010

மொழியற்றவள்

விடுயற்காலை 5.45 மணி. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் எட்டி பார்க்கும் வேளை. இயற்கை அழகை ரசிக்க நேரமில்லாமல் ஆட்டோவில் இருந்து அவசரமாக தியாகு இறங்கினான்.



"பயணிகள் கனிவான கவனத்திற்கு... பெங்களூர் வரை செல்லும் சகாப்தி எக்ஸ்பர்ஸ் இன்னும் பத்து நிமிடத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் இருந்து புரப்படும்" என்று சென்ட்ரல் ரயில் அறிவிப்பை கேட்டது விரைந்தான்.

தன் பெட்டியை தூக்கிக் கொண்டு அவர அவசரமாக ஒடினான். பல பேரை இடித்து, அவர்களிடம் மின்னிப்பு கேட்க கூட அவனுக்கு நேரமில்லை. இடிப்பட்டவர்கள் திட்டியதை காதில் கேட்காதவாரு விரைந்தான்.

வேகமாக வந்ததில் இரண்டு நிமிடம் முன்னதாகே வந்தான். தன் இறுக்கை பார்த்து அமர்வதற்கும், ட்ரெயின் எடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தன் டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு ரயில் பெட்டி 'C4' வை தேடினான்.

'C1...C2...C3........C4'

"அப்பாடா வந்தாச்சு" என்று உள்ளூர நினைத்துக் கொண்டு பெட்டிக்குள் எறினான்.

ரயில் பெட்டி முழுக்க ஏ.சி. இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் அமர சீடு வரிசையாக இருந்தது. வலது பக்கம் இருந்த தனது சீட் எண்.19 நெருங்கும் போது பக்கத்து சீட்டில் ஒரு பெண் ஆறு மாத குழுந்தையோடு இருப்பதை பார்த்தான். அவள் பார்க்க வட இந்திய பெண் போல் தெரிந்தாள். கை குழந்தை சிவப்பாக அம்மாவின் நிறத்தில் இருந்தது.

தன் பெட்டியை மேலே வைத்து விட்டு, பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்தும் பார்க்காதது போல் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தான்.

தன் முன் இறுக்கையில் இருந்து ஒரு பாட்டியிடம் இந்தியில் எதோ பேசினாள். தியாகுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்தியில் இரண்டு, மூன்று வார்த்தை மட்டும் தெரியும். அந்த வார்த்தைகள் அவள் பாட்டியிடம் பேசியதில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் அந்த வட இந்திய பெண் எழுந்தாள். தியாகு எழுந்து அவளுக்கு வழி விட்டான். அந்த பெண் முன் இறுக்கையில் பாட்டி பக்கத்தில் அமர்ந்தாள். கை குழந்தையோடு ஒரு ஆடவர் பக்கத்தில் அமர அவளுக்கு பல சங்கடங்கள் இருப்பதை தியாகுவால் உணர முடிந்தது. அந்த பெண் செல்ல, பாட்டி பக்கத்தில் அமர்ந்து இருந்த பதினாறு வயது தக்க ஒரு யூவதி எழுந்து தியாகு பக்கத்தில் அமர்ந்தாள். அவள் சற்று நடுங்கிய படி தான் தியாகு சீட்டுக்கு வந்தாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பது அவள் கண்கள் காட்டிக்கொடுத்தது.

கல்லூரி படித்த காலத்தில் இது போல நடந்திருந்தால் தியாகு அந்த யூவதியை பேசிய அருத்திருப்பான். அவன் ஜோல் மழையால் ரயில் பெட்டியே நனைந்திருக்கும். இப்போது, திருமணம், குழந்தை என்று வந்த பிறகு வேலை, பணம் போன்ற விஷயத்தில் தியாகு கவனம் இருந்தது. நேரம் கிடைக்கும் கடைத்த புத்தகத்தை படிப்பான். அந்த யூவதியை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் தான் அவள் நடுக்கம் குறையும் என்று அவளை கவனிக்காத மாதிரி இருந்தான்.

ட்ரெயின் புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆண்ணும், பெண்ணும் தியாகு முன் பக்கத்தில் இருந்த பாட்டியிடம் காலை வணங்கி சிரித்து பேசினார்கள். பார்க்க இருவரும் புத்திதாக திருமணமானவர்கள் போல் இருந்தனர். தங்களை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பாட்டி காலை தொட்டு வணங்க அவர்கள் யோசிக்கவில்லை. ஒருவருக்கு மரியாதை கொடுக்க, ‘இடம்’ அவர்களுக்கு தடையாக தெரியவில்லை. அந்த தம்பதியர்கள் இருவரும் பாட்டியின் இடது பக்கத்து இறுக்கையில் அமர்ந்து, கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். அந்த ஆண் தன் பக்கத்தில் அமர்வான் என்று தியாகு எதிர்பார்த்தான். ஆனால், அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

தியாகு புத்தகத்தை படித்துக் கொண்டு அப்படியே தூங்கினான். அப்போது தான் அவனுக்கு தூங்கியது போல் இருந்தது, அதற்குள் ஒருவர் அவனை எழுப்ப காலை சிற்றூண்டி கொடுத்தனர். சிற்றூண்டியை தன் கையில் வாங்கிக் கொண்டு தன் கடிகாரத்தை பார்த்தான். கடிகாரம் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. தன் பக்கத்து இறுக்கையில் இருக்கு யூவதி குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள். அந்த குழந்தையின் அம்மா சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அந்த புதுமண தம்பதியர்கள் முன்பே சாப்பிட்டு முடித்திருந்தனர். புது தம்பதியர்களுக்கு அந்த யூவதியிடம் இருந்து குழந்தை வாங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அம்மா சாப்பிட்ட பிறகு ஒரு பால்பூட்டியை யூவதியிடம் கொடுத்தாள்.

பசி முகத்துடன் அந்த யூவதி பால்பூட்டி கழுவ எடுத்து சென்றாள். கழுவிய பூட்டியை குழந்தையின் அம்மாவிடம் கொடுத்த போது சரியாக கழுவாததிற்கு திட்டினாள். அப்போது தான் தியாகுவுக்கு தெரிந்தது அந்த யூவதி வேலை செய்யும் ‘வேலைக்கார பெண்’ என்று !

இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் ஒரு ஆடவன் பக்கத்தில் அமர ஏற்றுக் கொண்டு இருப்பார்களா ? எல்லோரும் சாப்பிடும் போது அவளை மட்டும் குழந்தையை பார்க்க சொல்லியிருப்பார்களா ? சின்ன விஷயத்துக்கு எல்லோருமுன் திட்டுவார்களா ? என்று பல கேள்விகளை தியாகு தன் மனதில் கேட்டுக் கொண்டான்.

பெங்களூர் வந்தது மேலே இருக்கும் அவன் பெட்டியை எடுக்கும் போது தெரியாமல் அவன் கை யூவதி மேல் பட்டது. அச்சத்தில் அவள் கை நடுங்கியது. இவ்வளவு நேரம் அவள் உள்ளூர நடுங்கி அமர்ந்ததை அந்த நோடியில் தியாகுவுக்கு தெரிந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும், குழந்தை பெற்ற தாய் எந்த சுமையும் இல்லாமல் தன் பாட்டியுனும், புதுமண தம்பதியர்களுடனும் பேசிக் கொண்டு நடந்தாள். அந்த யூவதி குழந்தையும், குழந்தையின் பையையும் சுமந்துக் கொண்டு செல்வதை தியாகு பரிதாபமாக பார்த்தான்.

Tuesday, March 9, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் நன்மை



நம்மிடம் பணம் இருக்கும் போது கிரடிட் கார்ட் பயண்படுத்தி ஏன் வாங்க வேண்டும் ? நீங்கள் கேட்பது சரி தான். ஆனால், எல்லா சமயமும் நம்மிடம் பணம் உள்ளதா... நிச்சயமாக இருக்காது. எதோ கடையை வேடிக்கை பார்க்க செல்கிறோம், அங்கு ஒரு புத்தகம் படித்து நமக்கு மிகவும் பிடித்து விடுகிறது.... வாங்க வேண்டும் என்று நினைகிறீர்கள். ஆனால் கையில் பணமில்லை. என்ன செய்வோம்.. வாங்காமல் வந்து விடுவோம். மீண்டும் அதை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், அதே கடையில் வாங்வோம் என்பதில் நிச்சயமில்லை. நீங்கள் ஆசைப்பட்ட பொருள் வான்க முடியாமல் போகிறது. அந்த கடைக்காரனுக்கு விற்க பட வேண்டிய பொருள் விற்கமுடியாமல் போகிறது. இரண்டு பேருமே பாதிக்க படுகிறார்கள்.

ஆனால், நம் கையில் கிரடிட் கார்ட் இருந்தால், கார்ட்டை தெய்த்து விட்டு அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு செல்லலாம். அந்த கடைக்காரனுக்கு வியாபாரம் நடக்கிறது. இதில் இரண்டு பேருக்குமே சந்தோஷம் தான்.

சரி ! கிரடிட் கார்ட் பயன்படுத்தி புத்தகம் வாங்கி விட்டீர்கள். ஆனால், அந்த பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்றால் கடைக்காரன் நம்மிடம் வந்து கேள்வி கேட்பானா..? இல்லை. நீங்கள் வந்து வங்கியின் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருள் வாங்கினீர்களோ... அந்த வங்கி கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் கடையில் பொருளை வாங்கி கிரடிட் கார்ட் தெய்து,கையெழுத்து போட்ட பிறகு உங்களுக்கு, அந்த கடைக்காரனுக்கும் சம்மந்தமில்லை. பொருளுக்கு தேவையான சர்வீஸ், வாராண்டி போன்றவைக்கு நீங்கள் கடைக்காரனிடம் கேட்கலாம். ஆனால், கடைக்காரன் அந்த பணத்தை பற்றி உங்களிடம் கேட்க மாட்டான். ஒரு மாதத்திற்குள் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை வங்கியில் செலுத்தி விட வேண்டும்.

உங்களுக்கு திடிர் என்று மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்கிறீர்கள். கையில் டிக்கெட் மற்றும் சிறிய அளவு தான் பணம் உள்ளது. விரும்புபவர்களுக்கு ஏதாவது வாங்க வேண்டும். டெபிட் கார்ட்டில் கூட பணமில்லை. அப்பொது நமக்கு ஆபத்பாண்டவனாக இருப்பது கிரடிட் கார்ட் தான்.

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். விருந்து கொடுப்பதாக சொல்லி ஹோட்டலில் இஷ்டத்துக்கு சாப்பிட்டாச்சு. பணம். கையில் இல்லை...!! இருக்கவே இருக்கிறது கிரடிட் கார்ட்.

இன்று கிரடிட் கார்ட், செல்போன் இரண்டும் தான் வேலை செய்பவர்களின் ஸ்டேடஸ் ஸிம்பில். சமிபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தனக்கு வர போகும் வருங்கால கணவன் கிரடிட் கார்ட் வைத்திருக்க வேண்டும். அதுவும் 'Add-on' கிரடிட் கார்ட். அதாவது கணவன் - மனைவி இருவரும் இரண்டு கிரடிட் கார்ட் வைத்திருப்பார்கள். ஆனால், மாதம் வரும் பில் மட்டும் ஒருவர் பெயரில் வரும். அதாவது கணவன் பெயரில் வரும். அது தான்... 'Add-on' கிரடிட் கார்ட். இன்று ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அடிப்படையாக கிரடிட் கார்ட் இருக்கிறது.

கிரடிட் கார்ட் தெய்து பொருள் வாங்கி விட்டீர்கள் ? அது ஏமாற்று பொருள் வாங்கிய பிறகு தான் தெரிந்தது. அதனால், கிரடிட் கார்ட்டுக்கு பணம் கட்டாமல் இருக்க முடியுமா ? முடியாது. வங்கியிடம் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லவும் முடியாது. வங்கி எப்படியும் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் வாங்கி கடையில் பேசி பொருளை கொடுத்து பணத்தை பெற்றால் தான் உண்டு. நீங்கள் ஏமாறியதற்கு எந்த வங்கியும் (கிரடிட் கார்ட் வங்கி) பொறுப்பு ஏற்றுக் கொள்ளாது.

கிரடிட் கார்ட்டில் செலவு செய்த பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட்டால் பண கஷ்டத்திற்கு உதவும் நண்பனாக இருக்கும். பணம் கட்ட தவறிவிட்டால் பண நெருக்கடி கொடுப்பதில் முதல் எதிரியாக இருக்கும்.

Monday, March 8, 2010

நிலாரசிகன் : ஒரு பட்டாம்பூச்சியின் கனவு



நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசித்த கவிதை புத்தகம்.

ஆரம்ப காலத்தில் கவிதை மட்டுமே படிப்பேன். கவிதை மட்டுமே எழுதுவேன். வைரமுத்து, அப்துல் ரகுமான், கண்ணதாசன், பழநிபாரதி, அறிவுமதி என்று பிரபல கவிஞர்கள் முதல் புதிதாக வந்த கவிஞர்களின் புத்தகங்கள் எல்லாம் படிப்பேன். நாளாக நாளாக என்னுடைய கவிதை வாசிப்பும், கவிதை புத்தகங்களின் மீது எனக்கு இருக்கும் பார்வையும் மாறிவிட்டது.

எந்த கவிதை நூல் எடுத்தாலும் முழுமையாக முடிக்க முடிவதில்லை. ஐந்து கவிதைகள் படித்து விட்டு புத்தகத்தை வைத்துவிடுவேன். தொடர்ந்து அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆர்வம் வராது. முழு வீச்சில் படிக்க வேண்டிய கவிதை புத்தகத்தை படிக்காமல் என் அலமாரி ஒரத்தில் எங்கோ கிடக்கும்.

பல நாட்களுக்கு பிறகு, என் வாசிப்புக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முழுமையாக வாசித்தது ஒரு பட்டாம்பூச்சியின் கனவு " கவிதை புத்தகம்.

நான் எந்த புத்தகத்தை வாசித்தாலும் எனக்கு பிடித்த வரிகளை கொடு பொடுவது என் பழக்கம். இந்த புத்தகம் விற்பனைக்கு வந்ததால் என் பேனாவை அடக்கி வைக்க வேண்டியதாக இருந்தது. ஒரு கட்டத்தின் மேல் நல்ல வரிகளை குறிக்க முடியததால் பிடித்த வரிகளை குறிப்பு எடுத்துக் கொண்டேன். இந்த புத்தகத்தில் நான் ரசித்த ஒரு சில கவிதைகள்.

மறக்கப்படுதலுக்கான உரையாடல்

மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
அழ்ல்கிறது தாத்தாவுக்கு
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல் !


சுதந்திரம்

இருநூறு வருடம்
ஆட்சி செய்தவனிடமிருந்து
பெற்றுத்தர முடிந்தது ஒரு
கிழவனால்...
அறுபது வருடம்
ஆட்சி செய்பவர்களிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...


நிலா பார்த்தல்

பிள்ளைக்கும்ச் சோறூட்டுவதற்காக
நிலவைத் தேடுகிறாள்
ஒருத்தி...
கந்தல் உடையும்
கையில் தட்டுமாய்
வாசலருகே நிற்கிறது
பசித்த பிறை நில்வொன்று !


விழி தொலைந்தவன்

கோவில் வாசலில்
சூருண்டு படுத்திருக்கும்
குருட்டுப்
பிச்சைக்காரணைத்
தாண்டிச் சென்று
இறைவனிடம்
கேட்கிறான் பிச்சை


காதல் கவிதைகளில் அதிகம் எழுதி பழக்கப்பட்ட நிலா ரசிகன் இந்த நூலில் மூலம் சமூக கவிதையிலும் தன் பார்வையை பதியவைத்திருக்கிறார். கிராமத்துக்கு கவிதைகளில் வாசிக்கும் போது வைரமுத்து குரல் கேட்பதை தடுக்க முடியவில்லை. பெரிய கவிதைகளை விட சிறு கவிதைகள் நம் மனதில் இடம் பெருகிறது. குறிப்பாக, 'ஈழ கவிதைகள்' மனதை நெருடுகிறது.

ஈழ கவிதைகள்

இக்கரைக்கு அக்கரை
சிகப்பு
ஈழம்

*

உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டி ஒடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்
குண்டுகள் வீசும் விமாங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே !


பெரிய கவிதை மிகவும் ரசித்தது "மரத்திடம் பேச்சுவார்த்தை" மனிதன் கேட்கும் மரம் பதிலளிப்பது போன்ற கற்பனை.

பெருமைப்படும் விஷயங்கள் ?
என்னிடம் ஞானம் கற்ற
புத்தர்
என்னைச் சுமந்த
கர்த்தர்


மரங்களை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த வரிகள் நினைவுக்கு வரும்.

வைரமுத்து எழுதிய கவிதை நூலாக இருந்தாலும் அதிக பக்கங்கள் கொண்ட கவிதை புத்தகங்கள் சரியாக விற்பனையாவதில்லை. பெரும்பாலான வாசகர்கள் கவிதை நூல்களை ஒரே மூச்சில் படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், 150 பக்கங்கள் கொண்ட கவிதை புத்தகத்தை வாசிக்க வாசகர்கள் ஆர்வ காட்டுவது கடினமாக இருக்கும்.

நிலா ரசிகன் தன் அடுத்த கவிதை தொகுப்பு குறைந்த பக்கங்கள் கொண்ட சிறு கவிதைகள் தொகுத்தால் நன்றாக இருக்கும்.

நூலை வாங்க... இங்கே

Discovery Book palaceயில் நாகரத்னா பதிப்பகம் நடத்து புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் உள்ளது. .

Discovery Book palace,
6, Munusamy salai,
West K.K.Nagar,
Chennai.

Sunday, March 7, 2010

வங்கி ரகசியம் : லாபம் சம்பாதிக்கும் வங்கி !



பெரும்பாலும் கிரடிட் கார்ட்டின் நன்மை என்று சொல்லும் போது பணம் இல்லாத சமயத்தில் பயன்படுத்தலாம் என்று தான் சொல்வார்கள். பணமில்லாத சூழ்நிலையை உருவாக்காமல் இருந்தால் கிரடிட் கார்ட் அவசியமில்லையே ! ஆனால் இன்றைய பொருளாதாரம் பெருகிவிட்ட சூழ்நிலையில் பணத்திற்காக பொருளை அடகு வைத்து ஒரு மாத தவனைக்குள் கட்டுவதை விட கிரடிட் கார்ட் எவ்வளவோ மேல்..!

முதல் தேதி அன்று வாங்கிய பொருளை முப்பதாம் தேதியன்று கட்டி விடுகிவதால், நம்மக்கு வங்கி வட்டியில்லாமல் ஒரு மாதம் பணம் தருவது போல் தெரியும். இதில் வங்கி எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகமும் உங்களுக்கு எழும். நியாயமான சந்தேகம் தான். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கடையில் அழகான பொருளை ஒன்று பார்த்து வாங்க விரும்புகிறீர்கள். அந்த பொருளில் மதிப்பு 200 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கியாச்சு... பிறகு என்ன பணம் ஒரு மாதத்தில் கட்ட வேண்டியது தான். நீங்கள் பொருளை வாங்கும் போது கிரடிட் கார்ட் ஒரு மிஷினில் தெய்த்து கையெழுத்து கையெழுத்து பொட்ட காகிதத்தை வைத்து வங்கியில் இருந்து கடைக்காரன் பணம் வாங்கி கொள்வார். ஆனால், வங்கி அந்த கடைக்காரனுக்கு முழுசாக 200 ரூபாய் கொடுக்காது. 160,170 ரூபாய் என்று தான் வங்கி அந்த கடைக்காரனுக்கு கொடுக்கும். அப்போ மீதி பணம்.... அது தான் வங்கி லாபம் !!

இப்படி ஒவ்வொருவரும் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் வங்கிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்...யோசித்து பாருங்கள்...!!

அது சரி ! கடைக்காரன் நமக்கு 200 ரூபாய்க்கு பொருளை கொடுத்து வங்கியிடம் இருந்து 170 ரூபாய் வாங்குகிறார் என்றால்... அந்த கடைக்காரனுக்கு லாபம் தான் என்ன ? நீங்கள் பணம் கொடுத்து வாங்குவதை விட கிரடிட் கார்ட் மூலம் வாங்கினால் அந்த கடைக்காரனுக்கு லாபம் குறைவும் தான். இருந்தாலும் தன் கடையில் இருக்கும் பொருளை விற்க கிரடிட் கார்ட் உதவுகிறதே !! அது தானே அவனுக்கு முக்கியம்.

இன்னும் தெளிவாகவே சொல்கிறேன். நீங்கள் விரும்பும் பொருள் அந்த கடையில் உள்ளது. கையில் பணமில்லை என்றால் வாங்காமல் வந்து விடுவீர்கள். ஆனால், கிரடிட் கார்ட் இருந்தால் வாங்குவீர்கள். அவ்வளவு தான். உங்கள் கையில் பணமில்லாத ஒரே காரணத்திற்காக கடைக்காரன் தன் வியாபாரத்தை இழக்க வேண்டியதில்லை. எப்படியோ அந்த கடைக்காரனுக்கு அவன் பொருள் விற்றுவிடுகிறது. கிடைத்த வரைக்கும் கடைக்காரனுக்கு லாபம்.

தீபாவளி, பொங்கள் பண்டிக்கையில் சிறப்பு சலுகை எல்லாம் கடையில் கொடுப்பார்கள். 30% தள்ளுபடி, 50% தள்ளுபடி என்று கொடுப்பார்கள். அந்த சமயத்தில் கிரடிட் கார்ட் கொடுத்து வாங்கி பாருங்கள். பெரும் பாலும் கடையில் கிரடிட் கார்ட் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி என்பார்கள். கிரடிட் கார்ட் கொடுத்து வாங்க வேண்டும் என்றால் அதே விலையில் வாங்க வேண்டும். இன்னும் சில கடையில் பணம் வாங்குபவர்கள் ஊக்கவிக்க... இன்னும் சில சலுகை எல்லாம் கொடுப்பார்கள். கிரடிட் கார்ட் மூலம் தங்கள் லாபத்தை வங்கிகளிடம் பகிர்ந்து கொள்வதை விட தன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுப்பது பரவாயில்லை என்பதால் கடைக்காரர்கள் இப்படி செய்வார்கள். வாடிக்கையாளர்களும் திருப்தி அடைந்து அந்த வாங்க வருவார்கள்.

தள்ளுபடி விளம்பரத்தை உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கே புரியும். அதில் '*' போட்டு கீழே Condition Apply என்று போட்டிருப்பார்கள். அதில் இந்த தள்ளுபடிகள் எல்லாம் கிரடிட் கார்ட் மூலம் வாங்குவதிற்கு பொருந்தாது என்று இருக்கும். கிரடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குவதை தவிர்க்க கடைக்காரன் தள்ளுபடியை கையாள்கிறான். வங்கிகளும் தான் கொடுத்த கிரடிட் கார்ட் பயன்படுத்துவதற்காக வங்கிகளுக்கு சிறப்பு சலுகை எல்லாம் கொடுக்கும்.

ஆனால், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சலுகைகளும் நமக்கு கிடைக்காது. ஒன்று பணம் கொடுத்து கடையில் கிடைக்கும் தள்ளுபடி பயன்படுத்தி கொள்ள வேண்டும் அல்லது கடை கொடுக்கும் தள்ளுபடியை வாங்காமல் கிரடிட் கார்ட் வாங்கிய பிறகு வங்கிகள் கொடுக்கும் சலுகைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(தொடரும்...)

Friday, March 5, 2010

நூல் விமர்சனம் : என்னை எழுதிய தேவதைக்கு...



காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் அவர்கள் பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறார்கள். அந்த அளவிற்கு காதல் என்பது ஒவ்வொருவரின் மனத்திலும் புதைந்து கிடக்கிறது. தங்கள் காதலை மறந்திருந்தாலும், மறைத்திருந்தாலும் உள்ளுக்குள் அது உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. யாராவது காதலைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஏதாவது காதல் பற்றிய செய்தியைப் படித்தாலோ, காதல் பற்றிய படங்களைப் பார்த்தாலோ உறங்கிக் கொண்டிருந்த உள்ளம் உற்சாகத்துடன் எழுந்து கொண்டு விடுகிறது. இப்படித்தான் நூலாசிரியர் குகன் தன்னுடைய காதலையும் நண்பர்கள் சிலரது காதல்களையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார். குகனின் கதைகள் கவிதைகளைப் போல் விளக்கம் தேடும் வகையில் சொல்லப்பட்டிருந்தாலும் பல காதல் தேவைதைகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

காதலைத் தொலைத்த பலர் தங்கள் தேவதையை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனைவி மக்கள் என்று தங்களுக்கென்று குடும்பம் ஒன்று அமைந்து விட்டாலும் காதலை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக குகன் இந்நூலை சென்னை, நாகரத்னா பதிப்பகம் மூலம் அளித்திருக்கிறார். காதலைப் பற்றித் தெரியாதவர்களும் இந்நூலைப் படிப்பதன் மூலம் காதல் அனுபவங்களை அடைய முடியும்.

நன்றி : முத்துகமலம்.காம்

நூலை வாங்க... இங்கே

Thursday, March 4, 2010

வங்கி ரகசியம் : தற்கொலை ஓர் தீர்வில்லை !!



ஒரு தனியார் தொலைக்காட்சியில் குடும்ப தலைவன் தற்கொலை செய்துக் கொண்டதை காட்டினர். அதில் தற்கொலை செய்துக் கொண்டவரின் மனைவி, குழந்தை கண்ணீர் தழுமப பெட்டி அளித்தனர். குடுமப தலைவன் தற்கொலை செய்துக் கொண்ட காரணம்...? வங்கியில் இருந்து ஐந்து பேர்கள் மிரட்டினார்கள். எதற்காக... கிரடிட் கார்ட் மூலம் செலவு செய்த பணத்தை கட்டவில்லை. அந்த சமயத்தில் அவர்களின் குடும்ப சூழ்நிலை பணம் கட்டமுடியவில்லை. வந்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்டியவுடன், பணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக வங்கியில் வாங்கிய பணம் செலுத்தவில்லை என்றால் கேட்டுப்பார்ப்பார்கள், அது நடக்காத போது வக்கில் நோட்டீஸ் விடுவார்கள். ஆனால், வங்கிகளே இப்படி அடி ஆட்கள் கொண்டு மிரட்டுகிறார்களே !! என்ன செய்வது....? என்று தோன்றலாம்.

போலீஸ்க்கு போனாலும் " பணம் செலவு பண்ண தெரியுதுல.... கட்டு " என்று தான் சொல்வார்கள். பணம் திரும்பி செலுத்த முடியாத சூழ்நிலை... கையில் பணம் கூட இல்லை... ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது... !! இந்த சமயத்தில் மிரட்டல் வந்தால்... தற்கொலை தான் தீர்வாக நினைக்கிறார்கள்.

தற்கொலை செய்த நபரை மிரட்டியவர்கள் கண்டிப்பாக அந்த வங்கியில் வேலை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி வங்கியில் வேலை செய்பவர் என்று சொல்லி மிரட்டினால் வங்கியின் அடையாள அட்டை கேளுங்கள். கட்டிப்பாக இருக்காது. ஏன் வங்கிகள் பணம் வாங்க அடியாட்கள் உதவியை நாட வேண்டும்....?

சட்டப்படி கொடுத்த பணத்திற்கு வங்கிகள் வட்டி கேட்கலாம்.ஒரு வருடத்திற்கு இவ்வளவு தான் வட்டி வாங்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்லும் போது அந்த வட்டியை கேட்பது தவறில்லை.ஆனால், மாதம் 3 சதவீதம்.... வருடத்திற்கு 36 சதவீதம் வட்டி வாங்கக்கூடாது. வங்கிகள் கிரடிட் கார்ட் பிரச்சனைகளை கோர்ட்க்கு கொண்டு போனாலும் வாடிக்கையாளருக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும். அதனால், வங்கிகள் வாடிக்கையாளருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்புவதில்லை. அதற்கு பதிலாக மிரட்ட ஆட்கள் அனுப்புகிறார்கள்.

சரி ! வீடு தேடி வந்து மிரட்டுகிறார்களே உடனே போலீஸ்யிடம் புகார் கொடுக்கலாமா...? எந்த பலனும் இருக்காது. வீடு தேடி வந்து மிரட்டியவர்கள் ரௌடிகளாக இருப்பார்கள். சில போலிஸ் நபர்களிடம் நட்பு உறவு வேறு இருக்கும். அது மட்டுமில்லாமல்... கொலை, கொள்ளை கேஸ்கள் பார்த்து கொண்டு இருக்கும் போலிஸ் நபர்களுக்கு கிரடிட் கார்ட் கேஸ் கதை புளித்து போன விஷயம். நாம் வாங்கிய பணத்தை கொடுப்பது தான் முறை என்பார்கள்.

நாம் வாங்கிய பணம் செலுத்தி தான் திர வேண்டும். வீட்டுக்கு வந்து மிரட்டுவது கொஞ்சம் ஓவர் தான். பிறகு எப்படி தான் சமாளிப்பது...? முதலில் பணம் செலுத்துவதாக சொல்லி மிரட்டும் ஆட்களை திருப்பி அனுங்கள். வங்கிக்கு சென்று உங்கள் குடும்ப சூழ்நிலையை சொல்லி பணம் கட்ட அவகாசம் கேளுங்கள். வட்டியை நீக்கி விட்டு... அசல் மட்டும் தான் கட்ட முடியும் என்றாலும் பரவில்லை. கேளுங்கள்.

பணம் செலவு செய்து நான்கு மாதம் தான் இருக்கும். யாரும் அதற்கு 12 சதவீத வட்டி கொடுக்க விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும் வங்கி ஆட்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களும் அசல் வந்து சேர்ந்தால் போது என்ற நிலையில் தான் இருப்பார்கள். அப்படியும் அவர்கள் வட்டி செலுத்த தொல்லை கொடுத்தால்....கவலை வேண்டாம்.

நீங்கள் வங்கி மீது வக்கில் நோட்டீஸ் கொடுக்கலாம். அது வேண்டாம் என்று நினைத்தால் , ஆர்.பி.ஐ இணையத்தளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். வாடிக்கையாளர் எண், வங்கி, கிரடிட் கார்ட் விவகாரம் போன்ற எல்லா விபரங்களையும் கொடுங்கள். பிறகு என்ன... வங்கி இறங்கி வந்து உங்களிடம் பேசி பார்க்கும். அசல் கட்டுவதாக இருந்தாலே போதும் என்பார்கள். நாமும் வட்டி கட்டாமல் அசல் மட்டும் கட்டலாம்.

இப்படி உயிருக்கு ஆபத்து விலைவிக்கும் அளவிற்கு கிரடிட் கார்ட் இருக்கும் போது.... அதை எதற்கு வாங்குவான் ஏன்..? என்று பலரும் நினைப்பதுண்டு. அப்படி நினைத்தாலும் தவறில்லை தான். ஆனால், 'கிரடிட் கார்ட்'டால் வங்கிகளுக்கும் சரி, நமக்கும் சரி.... நன்மைகள் இருக்கின்றன. கிரடிட் கார்ட்டில் செலவு செய்யத பணத்தை கட்டாமல் தப்பித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அதே சமயம் மாதம் 3 சதவீதம் வட்டியும் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Wednesday, March 3, 2010

சச்சினின் 'ஆப்பு' ரைசல்



சமிபத்தில் சச்சின் 147 பந்தில் 200 ரன் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை புரிந்தார். அப்படி சாதனை செய்த சச்சினை ஐ.டி துறையில் இருப்பவர்கள் அவருக்கு அப்ரைசல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை.

மேனேஜர் : 200 ரன் எப்படி எடுத்திருக்க...

சச்சின் : பேட்டுல அடிச்சு

மேனேஜர் : அது இல்ல... 200 ரன்ல எத்தன 4, 6 அடிச்ச

சச்சின் : 25 * 4 (100), 3 * 6 (18) அடிச்சேன்

மேனேஜர் : அப்போ 28 பால்ல 118 ரன் எடுத்திருக்க...! அப்புறம் எப்படி எல்லாம் ரன் எடுத்த

சச்சின் : 12 இரண்டு ரன் ( 24), 58 ஒரு ரன் (58) எடுத்தேன்.

மேனேஜர் : மொத்ததுல 98 பால்ல 200 ரன் எடுத்திருக்க..

சச்சின் : ஆமா...!

மேனேஜர் : அப்படினா 49 பால்ல ( 147 - 98) நீ வெஸ்ட் பண்ணியிருக்க... ஒரு பாலுக்கு ஒரு ரன் எடுத்திருந்தாலும் 49 ரன் இன்னும் எடுத்திருக்கலாம். நீ நல்ல வேல பண்ணியிருந்தாலும், நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பண்ணல. அதனால என்னுடைய ரேட்டிங் 3 மூனு தான். இன்கிரிமென்ட் கிடையாது.

சச்சின் : $*$**

***

எமதர்மராஜர் ஒருவனிடம் வந்து " பத்து வருடத்திற்கு எந்த நொய் நொடி வராது. நீ சந்தோஷமாக சுந்திர பறவை போல் வாழலாம்" என்கிறார்.

அவர் சொல்வதை நம்பி அவனும் வெளியே வந்து விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறான்.

நரகத்தில் வந்து தன்னிடம் "ஏன் பொய்" சொன்னதாக கேட்கிறான். அதற்கு எமதர்மராஜர் " மன்னிச்சிடுப்பா ! மாச கடைசி. பத்து பேரையாவது போட்டு தள்ளனும்" என்றார்.

***

சாப்ட்வேர் கம்பெனி புதிதாக ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவன் அமர்ந்திருக்க்கும் இடத்தில் ஏ.சி சரியாக வேலை செய்யவில்லை. போன் எடுத்து

அவன் : ஏ.சி. சரியா வேலை செய்யல்ல... என்னையா வேல செய்றீங்க...!

(எதிர்முனையில்) நீ யார் கிட்ட பேசுற தெரியுமா !

அவன் : தெரியாது !

(எதிர்முனையில்) இந்த கம்பெனி Vice President கிட்ட...

நீ யார் கிட்ட பேசுற தெரியுமா...

(எதிர்முனையில்) தெரியாது !

அவன் : நல்ல வேல... ( போனை வைத்திவிட்டான்)

(மின்னஞ்சலில் வந்த ஆங்கில நகைச்சுவையின் தமிழாக்கம் )

Tuesday, March 2, 2010

வங்கி ரகசியம் : கார்ட் வேண்டுமா ?



ஒரு காலத்தில் மாத சம்பளத்தை வேலை செய்யும் நிறுவனம் ஒரு கவரில் போட்டு கொடுப்பார்கள். அந்த கவரை பிரித்து சம்பளப்பணத்தை சரி செய்த பிறாகே அந்த இடத்தை விட்டு நகர்வோம். சம்பளக் கவரை அப்படியே வீட்டில் அம்மா, அப்பாவிடம் கொடுத்து அசிர்வாதம் பெற்று, அதன் பின் மாதம் செலவுக்கு பணம் வாங்கும் சில சென்டிமெட் சீன் எல்லாம் முதல் தேதில் நடக்கும்.

ஆனால் இப்பொது யாரும் சம்பத்தை கவரில் வாங்குவதில்லை. சம்பள பணத்தை உருவிக் கொண்டு வருகிறோம். ஆட ! ஆமாங்க...!! சம்பளப்பணத்த (ATM) உருவுறாங்கள...!! (ATM) கார்ட் வந்த பிறகு பலர் இன்று வங்கியில் நீண்ட வரிசையில் நின்று டோக்கனில் பணம் எடுக்கும் கூட்டம் குறைந்து விட்டது.

'பாஸ்புக் என்ட்ரி' கூட இன்டர்னெட் பாக்கிங் (Internet Banking) வந்த பிறகு அதுவும் குறைந்து விட்டது. கடைசி ஆறு மாத பண பட்டுவடா எல்லாமே இன்டர்னெட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

'விசிட்டிங் கார்ட்' சைஸ் அட்டை தான். பணத்தை கையில் இருந்து பொருட்களை வாங்குவதை விட நம் கார்ட்டை தெய்து பொருள் வாங்குவது பாதுக்காப்பானது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து டி.வி வாங்க வேண்டும் என்றால் பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் கையில் கொண்டு போகும் பணத்துக்கு எந்த ஆபத்து வேண்டுமானாலும் வரலாம். அந்த பணம் நம் கார்டில் இருப்பது ஒரு விதத்தில் பாதுக்காப்பானது.அதே போல் வெளியூர் பயணம் செய்யும் போது பணத்தை பெட்டியில் எடுத்து சொல்வதை விட நாம் கார்ட்யில் எடுத்து செல்வது இன்னும் பாதுக்காப்பானது.

இப்படி எல்லாம் கார்ட் மயமாகி விட்டது. இப்பொது எல்லோருமே வங்கியில் ஒரு அக்கோன்ட் ஓபன் பண்ணும் போதே டெபிட் கார்ட் வேண்டும் என்று விண்ணப்பத்தையும் சேர்த்து தான் விண்ணப்பிக்கிறார்கள். டெபிட் கார்ட் வழங்கிய பிறகு அதற்கு சேவை செய்ய வங்கிக்கு அதிகம் செல்வாகும். ஆனால், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்ட் சேவை செய்ய தான் விரும்புகிறார்கள். அப்படியென்றால் டெபிட் கார்ட் சேவை செய்யும் வங்கிகளுக்கு அப்படி லாபம் கிடைக்கும்....?

டெபிட் கார்ட் ஒரு புறம் இருக்கட்டும். கிரடிட் கார்ட் வாருங்கள். இன்று குறைந்த பட்சம் மூவாயிரம் சம்பளம் வாங்கும் நபர் கூட கிரடிட் கார்ட் வைத்திருக்கிறார். கிரடிட் கார்ட்டில் பொருளை வாங்கி ஒரு மாதத்தில் கட்டிவிட்டால் எந்த வட்டியும் கிடையாது. வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் வட்டி !! அப்படி என்றால்.... பணம் செலுத்தாமல் இருந்தால் தானே வங்கிக்கு லாபம். கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருளை வாங்கினாலே வங்கிக்கு லாபம் உண்டு அது எப்படி ?

இப்படி இந்த 'கார்ட்' விஷயத்தில் பல விபரங்களும், விவகாரங்களும் ஒளிந்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 'ஐ.டி'யை விட வங்கி எல்லாம் பெரும் அளவில் வளரும் என்பது தொழிற்வல்லுநர்களின் கருத்து.பல ஐ.டி நிறுவனத்தின் பிராஜெக்ட் வங்கி சம்மந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஏன்...? இன்னும் ஐந்து ஆண்டுகளில் வங்கி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கூட கிடைக்கலாம்...!! வங்கியின் Back-office வேளை வாய்ப்புகள் அதகமாக காணப்படும்.... பல கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

(தொடரும்...)

Monday, March 1, 2010

நாகரத்னா புக் ஸ்டால் !

நேற்று (28.2.10), உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பு தனது 26ஆம் ஆண்டு விழாவை சென்னை எல்.எல்.ஏ லைப்பரரியில் நடந்தது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சியில் ஸ்டால் போட இவர்கள் அனுமதிப்பத்தில்லை. சென்ற வருடம், வெள்ளி விழா அண்டு என்பதால் புத்தக சந்தை வைத்தார்கள். உரத்தசிந்தனை உறுப்பினர் புத்தகங்கள் எல்லாம் வைத்து கண்காட்சி நடத்தினார்கள். நல்ல வரவேற்று கிடைத்தது. இந்த வருடம் புத்தக சந்தை எடுத்து நடத்த அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

சென்ற வருடம் சாதான உறுப்பினர் என்ற முறையில் நான் தான் புத்தக சந்தையின் வேலைகளை கவனித்தேன். இந்த ஆண்டு, நான் உறுப்பினர் மட்டுமல்லாமல் செயர்குழு உறுப்பினர் என்ற கூடுதல் பொறுப்பு. எப்படியாவது புத்தக சந்தை எடுத்து நடத்த வேண்டும் என்று பொது செய்லாளர் உதயம்ராம் அவர்களிடம் அனுமதி கேட்டிருந்தேன்.

ஆண்டு விழாவுக்காக பல வேலைகள் இருந்ததால் அவரால் உறுதியான பதில் சொல்ல முடியவில்லை. நானும் அதன் பிறகு அவரிடம் கேட்பதை விட்டுவிட்டேன்.

நிகழ்ச்சிக்கு முன் தினம் இரவு, பதிவர் ஒருவர் 'ஸ்டால் போடுலையா' என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்க என்றார். இது போன்ற நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவர் நெருங்கிய நண்பர் என்பதால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தேன். இந்த முறை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு எந்த தடங்கல் வராமல் புத்தகசந்தை அமைக்க அனுமதி அளித்தார்.

ஒரே இரவில் பேனர், நாகரத்னா பதிப்பக புத்தகங்கள், நண்பர்களின் ஒரு சில புத்தகங்கள் என்று வாங்கி கண்காட்சிக்காக தயார் செய்தேன். ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது.

நான் செயற்குழு உறுப்பினர் என்பதால், ஆண்டு விழா நிகழ்ச்சியில் எனக்கு ஒரு சில முக்கிய பொறுப்புகளும் இருந்தது. என்னால் ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலும் இருக்க முடியாத நிலை. இது வேலைக்கு நண்பர்களிடம் வேலை வாங்குவதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

ஆனால், எனக்கு புத்தக சந்தை ஆலோசனை வழங்கிய நண்பரே எனக்கு உதவியாக அவரது நண்பரை வரவழைத்தார்.

நாகரத்னா பதிப்பக புத்தகங்களையும் சேர்த்து 13 தலைப்புகள் அடங்கிய புத்தகங்கள் மட்டும் தான் வைக்கமுடிந்தது. ஆனால், எதிர்பார்த்ததிற்கு மேல் நல்ல வரவேற்பு கிடைத்தது. ( குறிப்பாக, 'எனது கீதை' எடுத்து போன நூல்கள் விற்றது).

அந்த பதிவர் நண்பர் இன்னும் யார் என்று சொல்லவில்லையே....!!

'கேபிள் சங்கர்' தான்.

அவருக்கு நான் நன்றி சொல்லபோவதில்லை.

காரணம், என் பதிப்பகத்தின் சிறப்பு ஆசிரியரே இனி அவர் தானே..!!

LinkWithin

Related Posts with Thumbnails