வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 25, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் வகைகள்

'கேஷ் பேக்' (Cash back) கிரடிட் கார்ட் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்கினால் 5 ரூபாய் நமக்கு திருப்பி கொடுப்பார்கள். அதனால் பெரும்பாலும் 'கேஷ் பேக்' வாங்க விரும்புவார்கள். இன்னும் விழாக்காலங்களில் ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் கிரடிட் கார்ட் பயன்படுத்த பல சலுகைகள் எல்லாம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். அதில் எத்தனையோ நிபந்தனைகள் எல்லாம் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளாமல் பொருளை வாங்குவார்கள். எந்த லாபமும் இல்லாமல் வங்கிகள் 30% cash back என்று விளம்பரம் செய்யாது. அந்த விளம்பரத்தை கவனித்தால் அதில் கூட Condition Apply என்று இருக்கும்.



இதிலும் கன்டிஷனா...? ஆமாம். அப்படி என்ன கன்டிஷன் ? அதை மிக சின்ன எழுத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பரும்பாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு அந்த விளம்பரத்தில் 30,000 ரூபாய் மேல் வாங்கினால் தான் 30% தள்ளுபடி கொடுப்போம் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்....?

'கேஷ் பேக்' கிரடிட் கார்ட் நடக்கும் நம் கண்ணுக்கு தெரியாத சில நிபந்தனைகள் இப்படி தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் வங்கிகள் அதிகபட்சம் தன் லாபத்தில் இருந்து 5% சதவீதம் 'கேஷ் பேக்'காக கொடுக்கலாம். 30%,50%.... இன்னும் சில கிரடிட் கார்ட் 100% (cash back) என்று சொன்னால் நிச்சயமாக சில நிபந்தனைகள் இருக்கும். கவனமாக பார்க்கவும்.

'கேஷ் பேக்' அடுத்து பலரும் வைத்திருப்பது 'பெட்ரோ கார்ட்' (Petro Card). வண்டிக்கு பெட்ரோலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக கிரடிட் கார்ட்டில் வாங்குவது தான் 'பெட்ரோ கார்ட்'. அதாவது, சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இன்டியன் ஆயில் பெட்ரோல் வாங்கினால் சர்ச்சார்ஜ் (Surcharge) கிடையாது. ஆனால், அதே இன்டியன் ஆயிலை ICICI அல்லது HSBC கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் சர்ச்சார்ஜ் போடுவார்கள். அதே போல் ஷேல் பெட்ரோல் HSBC கார்ட்க்கு சர்ச்சார்ஜ் கிடையாது.

அடுத்து இன்னொரு வகையான கிரடிட் கார்ட் பார்ப்போம். Travelling Card அடிக்கடி விமானத்தில் பயணம் / ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் பயன்ப்படும். உதாரணத்திற்கு சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்து ஜெட் எர்வேஸ்யில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தும் போது சில சிறப்பு சலுகைகள்கள் கிடைக்கும். ஆனால், டெக்கான் எர்வேஸ்யில் வாங்கினால் அந்த சலுகை கிடைக்காது. பெரும் பாலான வங்கிகள் சலுகை என்று சொல்லுவது 'கேஷ் பேக்' அல்லது 'தள்ளுபடி' தான். Travelling Card யில் டிக்கெட் வாங்கிய பணத்திற்கு தான் சலுகை பொருந்தும். எதாவது பொருளை வாங்கினால் சலுகை எதுவும் இருக்காது. பெட்ரோ கார்ட்டிலும் அப்படி தான். சலுகை எல்லாம் பெட்ரோல் வாங்குவதற்கு மட்டும் தான்.


அடுத்து நாம் பார்க்க போவது Shopping Card. பெயர கேட்டவுடனே அதிருதுல....!! இந்த கார்ட் மனைவிமார்களுக்கு மிகவும் பயன்ப்படும் கார்ட்.(கணவன்மார்களுக்கு தொல்லை கொடுக்கும் கார்ட் கூட !!) மாதம் வீட்டிற்கு என்று இவ்வளவு பொருள் வாங்க வேண்டும் எல்லோர் வீட்டில் இருக்கும். Shopping Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வங்கிகள் சில அன்பளிப்பு, சலுகை என்று கொடுக்கும்.

இதுவரை நாம் கிரடிட் கார்ட் வகைகள் மட்டும் தான் பார்த்தோம். ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் எற்றாருக்கு போல் கிரடிட் கார்ட் வைத்திருக்கும். கிரடிட் கார்ட் அம்சங்களும் மாறி இருக்கும். வாடிக்கையாளரை கவர்வதற்காக கிரடிட் கார்ட் தன்மைகளையும், சலுகைகளும் வேறுப்படும். ஒவ்வொரு கிரடிட் கார்ட் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த நீதி கிடையாது. அதனால் கிரடிட் கார்ட் வாங்கும் எது நமக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு வாங்க வேண்டும்.

1 comment:

Anonymous said...

I am reading all your articles in this series. please keep writing.

LinkWithin

Related Posts with Thumbnails