வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 17, 2010

படித்ததும் பார்த்ததும் 17.5.10

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று (16.5.10) ஞாயிறு அன்று காலமானார். இதுவரை 1000 மேற்பட்ட சிறுகதைகள், 800 மேற்பட்ட நாவல் எழுதுயுள்ளார். பல இல்லத்தரசிகள் விரும்பி வாசித்த நாவல்களில் அனுராதா ரமணனின் நாவல் மிக முக்கியமானது.

இவர் எழுதிய ஒரு சில படைப்புகள் திரை வடிவமும் பெற்றள்ளது. அதில் குறிப்பாக...

சிறை , கூட்டுபுழுக்கள் - ஆர்.சி. சக்தி இயக்கியுள்ளார்.
ஒரு மலரின் பயணம் - முக்தா சினிவாசன் இயக்கியுள்ளார்.
ஒரு வீடு இரு வாசல் - கே. பாலசந்தர் இயக்கியுள்ளார்.

இன்னும் சில படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது. 1976 ஆண்டு, எம்.ஜி.ஆர் திரு கரங்களால் 'சிறை' சிறுகதைக்கு தங்க பதக்கம் வாங்கியுள்ளார்.

பதிவர்களின் சார்ப்பாக அனுராதா ரமணன் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்போம்.

***

உலக சினிமா - பாகம் I & II

வில்லனை அடித்து வீழ்த்துவது, நாற்பது வயதில் கல்லூரி செல்வது, அறுபது வயதிலும் இருபது வயது பெண்ணுடன் டூயட் பாடுவது போன்ற மசாலா படங்களை சாபமாக பார்ப்ப்பவர்களுக்கு 'உலக சினிமா' ஒரு வர பிரசாதம். உலக சினிமாவை தமிழ் படுத்தும் போது கதையை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால், உணர்வுகளை கொட்டை விடுகிறார்கள்.

ஒரு எழுத்து படம் பார்க்கும் தொற்றத்தை கொடுக்க முடியும் என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. பார்க்காத பல படங்களை காட்டியுள்ளது.

முதல் பாகத்தில், E.T குறிப்பிட்டதை உலக சினிமாவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு ‘Science Fiction' படமாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இரண்டாவது பாகத்தில், Moolaade, Where is my fiend's home, The day I become woman, Postman போன்ற படங்களை பற்றிய கட்டுரைகள் படத்தை பார்த்து ஏற்ப்படுத்தும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது.

தமிழ் சினிமாவில் இருந்துக் கொண்டு எப்படி உலக சினிமாவை பற்றி இவ்வளவு அழகாக எழுதிருக்கிறார் என்று ஆரம்பத்தில் படிக்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால், படிக்க படிக்க தான் உண்மை புரிந்தது. பசிப்பவனுக்கு தான் உணவின் அருமை தெரியும். அதே போல் ஒரு சராசரி ரசிகனை விட தமிழ் சினிமாவில் வேலை செய்பவருக்கு தான் ஆதங்கம், ஏக்கம், நல்ல படம் எடுக்க முடியாத கவலை இருக்கும். அந்த ஆதங்கத்தை செழியன் உலக சினிமா புத்தகத்தில் தனது எழுத்து மூலம் தீர்த்து உள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு பாகமும் ரூ.105. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

***

கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட இங்கிலாந்து இது வரை சொல்லிக் கொள்ளும்படி பெரிய கோப்பையை வெல்லவில்லை. 92 உலக கோப்பை, குட்டி உலக கோப்பை (world knock-out championship) போட்டிகளில் இறுதி சுற்று வரை வந்து கோட்டை விட்டது. நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20/20 உலக கோப்பை போட்டியின் வெற்றியின் மூலம் இங்கிலாந்து தன்னை முன்னிலை படுத்தியுள்ளது.

மார்கன், பிட்டர்சன், கோலிங்வுட் போன்ற வீரர்களுக்கு ஐ.பி.எலை நல்ல பயிற்சி களமாக இருந்ததுள்ளது என்பது குறிப்பிடதக்கது..

***

இந்தியா உட்பட 17 வளரும் நாடுகள் உருபினர்களாக கொண்ட 'G-15' அமைப்புக்கு புது தலைவராக ராஜபாக்ஷே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொறுப்பில் இருந்தவர் இரான் அதிபர் முகமத் அகமதினாஜாத். அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் ஒரு சில அதிபர்களின் இவரும் ஒருவர். நான் படித்த வரை இவர் மிக எளிமையானவர். இவர் இடத்தை ராஜபாக்ஷே நிரப்ப போகிறார்.

போதுவாக எதிரி வெற்றி பெற்றால் கூட வாழ்த்துபவன் நான். ஆனால், இந்த விஷயத்தில் என்னால் முடியவில்லை.

***

5 comments:

அன்புடன் அருணா said...

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அனுராதா.அஞ்சலிகள்.

நாளும் நலமே விளையட்டும் said...

எழுத்துப் பிழைகளை நீக்கி எழுதுங்கள். நீங்கள் எழுதுவதை பல பேர் படிக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் திருத்திப் படிப்பதை விட நீங்களே திருத்தி எழுதினால்?

Dhavappudhalvan said...

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் ஒருவராவார். தினமலர் வாரமலரில் வெளிவரும் அவருடைய "அன்புடன் அந்தரங்கம்" ஆலோசைனை பகுதியை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

Dhavappudhalvan said...

அவரை சந்திக்க விரும்பி, ஒரு கவிதையும் எழுதி, வாரமலர் மூலமாக அனுப்பி வைத்தேன். ஆனால் சந்திக்க முடியாமலே ஆகிவிட்டது. மிக்க வருத்தத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கதையுலகில் ஒரு நட்சத்திரம் அனுராதா ரமணன்.

LinkWithin

Related Posts with Thumbnails