வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, October 6, 2010

சவால் சிறுகதை : உளவாளி

உயிர் போகும் ஆபத்தான வேலை தான். ஆனால், இதில் இருக்கும் த்ரில் எதிலும் இல்லை. சேஸிங், டபிள் க்ராஸ், கொலை எல்லாம் இந்த மூன்று மாதத்தில் கிடைத்த அனுபவம் எந்த பெண்ணுக்கும் கிடைத்திருக்காது. காமினிக்கு கிடைத்திருக்கிறது. ஆண்களுக்கு இணையாக சண்டை போடக் கூடியவள். சாகசத்திலும் கெட்டிக்காரி. ஆதானலே பரந்தாமன் கள்ளக்கடத்தல் கூட்டத்தில் முக்கியமான ஆளாக கருதப்பட்டாள்.

காமினி சீக்கிரம் அந்த கூட்டத்தில் முக்கிய அங்கமாக கருத்தப்பட்டதற்கு இன்னொரு காரணம். சிவா. பரந்தாமனுக்கு அடுத்து அந்த கூட்டத்தில் தலைவனாக இருப்பவன். காமினியை பார்த்த மாத்திரத்தில் அவள் அழகால் கவரப்பட்டவன். ஒரே வாரத்தில் அவளிடம் காதலை சொல்லி, அவள் சம்மதம் பெற்றவன்.

வருடக்கணக்கில் அந்த கூட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு கூட தெரியாத ரகசியம் எல்லாம் சிவா மூலம் காமினிக்கு தெரிந்தது. சில சமயம் சிவா சொல்ல மறுத்தாலும், காமத்தின் உச்சத்திற்கு அவனை அழைத்து சென்று உண்மையை வாங்கிவிடுவாள்.

இருவருக்கும், திருமணம் தான் நடக்கவில்லை என்றாலும் இருவரும் கணவன், மனைவியாக தான் இருந்தனர். பரந்தாமனின் அன்புக்கு பாத்திரமாக சிவா இருந்ததால் இன்றைய முக்கியமான கொள்ளையில் சிவாவுடன் காமினியை அனுப்பியிருந்தான். அந்த டைமண் மட்டும் வந்துவிட்டால் கொள்ளையடிக்கும் தொழிலே முழுக்கு போட்டுவிடலாம். அதை வாங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து தனது க்ளைட் எல்லோரையும் வரவேற்கும் விழாவில் பெரிய தொகையை ஏலத்திற்கு விட வேண்டும் என்ற திட்டம் போட்டான் பரந்தாமன்.

சிவா என்றைக்கும் எந்த விஷயத்திலும் சொதப்பியதில்லை என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு இருந்தது. கூடவே, காமினி சென்று இருக்கிறாள். எந்த கவலையும் இல்லாமல் பரந்தாமன் வெளிநாட்டு விருந்தாளிகளை கவனிப்பதில் இருந்தான்.

ஆனால், நேரமாக ஆக பரந்தாமனுக்கு பயம் பற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டைமண்ட் வரவில்லை என்றால் வெளிநாட்டு வியாபாரிகள் சென்றுவிடுவார்கள். இதை விற்க சிரமப்பட வேண்டும். சிவாவின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இரண்டு முக்கிய வியாபாரிகள் வேலையிருப்பதாக சொல்லி வெளியே சென்றனர்.

இனி அந்த டைமண்டை விற்க முடியாது என்ற நம்பிக்கை இழக்கும் போது காமினி அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால், அவளுடன் சென்ற சிவாவும், மற்றவர்களும் வரவில்லை.

" காமினி ! டைமண்ட் என்ன ஆச்சு ? சிவா எங்கே ?? " என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடியது.

" டைமண்ட் எடுத்து வரும் போது சிவாவையும், மத்தவங்களையும் போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க... நா மட்டும் டைமண்ட்டோட தப்பிச்சேன் " என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை ஆசையாய் வாங்கி பார்த்தான். தன்னை இன்னும் சில நிமிடங்கள் இந்த டைமண்ட் கோடிஸ்வரனாக்க போகிறது என்ற பூரிப்பில் இருந்தான்.

தீடிர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒளித்தது.

அந்த அறையை சுற்றி போலீஸ் வலைத்தனர். காமினி, பரந்தாமனோடு அவனின் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

காமினி மட்டும் தனியாக பெண் போலீஸ் அழைத்து சென்று ஐ.ஜி முன் நிறுத்தினர்.

" கமான் காமினி ! யூ டன் ஒன்ஸ் அகேன்"

" தாங்க் யூ ஸார் !"



"எவ்வளவு வருஷம எத்தன உளவாளி வச்சும் கண்டுப்புடிக்க முடியாத கொள்ள கூட்டத்த மூனு மாசத்தில கண்டு புடிச்சு கொடுத்துட்ட..."

" அதுக்கெல்லாம் சிவா என் மேல வச்சிருந்த பைத்தியக்கரமான காதல் தான் காரணம்"

"குட்... எப்படி அவன் உன் மேல இந்த அளவுக்கு காதல் வளர்த்துக்கிட்டான் "

" வெரி சிம்பிள். ஐ ஹெட் செக்ஸ் வித் ஹிம். அது தான் அவன் என் மேல் அதிக நம்பிக்கை வளர்த்துக்கிட்டான்"

" ஒரு கொள்ளக்காரனோடு உன் கற்ப இழக்குற அளவுக்கு நீயும் அவனும் பழகுன..."

" வெரி பன்னி... இந்த காலத்துல கற்பு பத்தி பேசுறீங்க. எந்த உளவாளிக்கும் இல்லாத ஆயுதம் பெண் உளவாளிக்கு இருக்குதுனா அது அவளோட அழகு தான். அத பயன்படுத்துனா தான் மதிப்பு" என்று புன்னகையோடு காமினி கூறினாள்.

" ஓ.கே. அது உன்னோட சொந்த விஷயம். உன்ன அரஸ்ட் பண்ணும் போது தப்பிக்க முயற்சி பண்ண. சுட்டுட்டோம்னு சொல்லி உங்க கூட்டத்த நம்ப வைக்கனும். இல்ல உனக்கு பிண்ணாடி பிரச்சையை வரும்.”

" அவங்க அத நம்புவாங்கனு நினைக்கிறீங்களா.."

" கொஞ்சம் கஷ்டம் தான். பரந்தாமனுக்கு உன் மேல சந்தேகம் வர வாய்ப்பிருக்கு"

"நாளைக்கு சிவாவோட என்னையும் கோர்ட்க்கு கூட்டிட்டு போகும் போது நான் தப்பிக்கிறேன். ஒரு போலீஸ் வச்சு என்ன சிவா முன்னாடி சுட சொல்லுங்க..."

"குட்...இதுவும் நல்ல ஐடியா தான்."

" இன்ஸ்பெட்டர் வெங்கட் கிட்ட நம்ப திட்டத்த பத்தி சொல்லுறேன். அவர் தான் நாளைக்கு உங்களோட கோர்ட்டுக்கு வராரு..."

" ஓ.கே.."

மீண்டும் காமினி கையில் விலங்கு மாட்டி கைதி போல் அழைத்து சென்றனர்.

அடுத்த நாள்.

சிவா, பரந்தாமனோடு காமினியும் கையில் விலங்கு மாட்டி சைதை கோர்ட்டுக்கு அழைத்து செல்ல வேனில் ஏற்றினர். மவுன்ட் ரோட் சிக்கலில் ஐ.ஜி திட்டப்படி காமினி கையில் விலங்கோடு ஓட தயாரானாள். சிவா, பரந்தாமன் போலீஸ் சுற்றியிருந்ததால் காமினியிடம் எதுவும் பேச முடியவில்லை.

நந்தனம் சிக்னல் வந்தது. காமினி ஓட தயாராக இருந்தாள். பச்சை விளக்கு வரும் இரண்டு நொடி இருக்கும் போது ஓடினாள்.

டமால்.... தூப்பாக்கி வெடித்தது.

துப்பாக்கி தோட்டா காமினி மார்பில் பாய்ந்தது. வெங்கட்டை அடித்து சிவா அவனின் துப்பாக்கியால் காமினியை சுட்டான். சிவாவும், பரந்தாமனுக்கு துப்பாக்கி காட்டி தப்பித்தனர்.

காமினியின் உயிருக்கு ஆபத்தில்லை. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

" ஒண்ணும் பிரச்சன இல்ல... மார்பு குறிப்பார்த்து சுடுற நினைச்சு தோள் பட்டையில தான் சுட்டிருக்கான். ஒரு மணி நேரத்து கண் முழிச்சிடுவாங்க..." என்று டாக்டர் ஐ.ஜியிடம் சொன்னார்.

" தப்பிச்சு போன கொள்ளக்காரங்களால எந்த நேரத்துலையும் இவளுக்கு ஆபத்துவரலாம். போலீஸ் புரட்டக்ஷன் கொடுக்க நீங்க அனுமதிக்கனும்.

" ஓ.. ஷுர்..." என்றார் டாக்டர்.

காமினியின் மயக்கம் தெளிந்தது.

மூன்று மாதமாக சிவாவோடு நெருங்கி பலகியவள். அவன் தன்னை கொள்ளாமல் விடமாட்டான். மருத்துவமனை காவலை மீறி தன்னை எளிதாக கொன்றுவிடுவான். இங்கு இருப்பது எந்த நேரத்திலும் ஆபத்து என்று நினைக்க தொடங்கினாள்.

ஐ.ஜி, டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

இரண்டு வருடங்களாக உளவாளி வேலை செய்திருக்கிறேன். காட்டிக் கொடுத்தது நான் தான் என்ற சந்தேகம் யாருக்கும் வந்ததில்லை. சிவாவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்ற குழப்பத்தில் ஒரு ஆட்டோவில் ஏறினாள்.

"பெஸ்ட் நகர் போப்பா " என்ற போது அதிர்ந்து விட்டாள் காமினி.

ஆட்டோ டிரைவர் வேடத்தில் சிவா.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

பத்தடி தூரத்தில் பரந்தாமனிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இருந்தான் இன்ஸ்பெட்டர் வெங்கட்.

2 comments:

Esha Tips said...

மிகவும் அருமை

தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோடத்திலும் உங்கள் படைப்புகளை வெளியிடலாமே...

http://tamilparks.nsguru.com

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

LinkWithin

Related Posts with Thumbnails