வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, November 26, 2010

இரண்டு குறும்படங்கள்

பித்தள சொம்பு

ஜெகன், வி.எஸ்.ராகவன் போன்ற திரைப்பட கலைஞர்களை வைத்து இயல்பான நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்கள். ‘ஆல்மைட்டி’ ஆங்கில படத்தை ஞாபகப்படுத்தினாலும், டைம்ங் காமெடி நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.



கடைசி தகவல்

நல்ல கதையை யோசித்து காஸ்டிங், வசனத்தில் கொட்டை விட்டுயிருக்கிறார்கள். இதுப் போன்ற கதையில் சோர்வில்லாத வசனங்கள் மிகவும் முக்கியம். ஒரு கட்டத்திற்கு என்ன சொல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிக்கிறது.

Thursday, November 25, 2010

பௌத்த சூத்திரங்கள் எப்படிப் பிறந்தன?

புத்தர் இறக்கும் போது ஞானம் பெற்றுவிட்ட அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைச் சுற்றிக் கூடிவிட்டனர்.அவருடைய உபதேசங்களை எழுதிவைக்க முடிவு செய்தார்கள் .குரு இறந்துவிடப் போகிறார்.வருங்காலத்துக்கு அவருடைய உஅபதேசங்களை எழுதி வைக்க வேண்டு மல்லவா?

பிரமாதமான சீடர்கள் இருந்தார்கள். மிகப் பெரிய ஞானியர்.ஆனால் யாரும் அவருடைய உபதேசங்களை அப்படியே திருப்பிச் சொல்ல முடியவில்லை.சிலர் முழு மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.அவர்களை கேட்ட போது தோள்களைக் குழுக்கி ,”ஏதாவது தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே.பிழைகள் இருக்கத்தான் செய்யும்.அவரிடம் நாங்கள் கண்டதை எல்லாம் அப்படியே வார்த்தைகளில் வடிக்க முடியாது “ என்று சொல்லிவிட்டார்.



எந்த ஒரு ஞானியும் புத்தரின் உபதேசங்களைத் தொகுத்துச் சொல்ல முன் வரவில்லை.கடைசியாக ஆனந்தரை அனுகினார்கள்,புத்தரோடு நாற்பத்திரெண்டு வருடங்கள் இருந்தவர் அவர் ஒருவர் தான்.ஆனாலும் ஞானம் சித்திக்கவில்லை.எல்லாமும் அவருக்கு நினைவிருந்து .வார்த்தைக்கு வார்த்தை புத்தருடைய உபதேசங்களை அவர் நினைவில் வைத்திருந்தார்.

அசாதாரணமான நினைவாற்றலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.ஒரு ஞானியின் வார்த்தைகளை அஞ்ஞானியின் வாய் வழியாகக் கேட்டு நம்ப புடியுமா?

புத்தர் இறந்த அன்று ஆனந்தாவை அழைத்து ,”ஆனந்தா!நாளைக்கு நான் இங்கே இருக்கமாட்டேன்.எனவே அவசரப்படு,இனியும் தள்ளிப் போடாதே!”என்றார்.

புத்த்ர் இறந்தப்பின் அங்கே கூடியவர்கள் கேட்டுக் கொண்ட்தற்காக ஆனந்தர் இருபத்து நான்கு மணி நேரம் கண்கலை மூடி அமர்ந்தார்.அவருடைய வாழ்வில் முதல் முறையாக அப்படி அமர்ந்தார்.எப்போதும் புத்தரோடேயே இருந்துவிட்டதால் அவருக்கு கண்களை மூடி அமர்வதே முடியாத காரியமாக இருந்தது.

தினமும் அவரை சுற்றி பல காரியங்கள் நடந்துக் கொண்டே இருந்த்தால் அவருக்கு எப்போதும் ஏதாவது செய்வதற்க்கு வேலை இருந்து கொண்டே இருந்தது இப்போதுதான் புத்தர் போய்ச் சேர்ந்துவிட்டாரே !வேறு வேலை ஏதும் இல்லை .கண்களை மூடி இருபத்து நான்கு மணிநேரம் அமர்ந்துவிட்டார்.தன் வாழ்வில் முதல் முறையாக மௌனத்தில் அமர்ந்துவிட்டார்.
இருபத்து நான்கு மணிநேரத்தில் ஞானம் பெற்றார்.நாற்பத்திரெண்டு வருடம் நடக்காத காரியம் இருபத்து நான்கு மணிநேரத்தில் நடந்துவிட்ட்து.

அவருடைய ஞானப் பிரகாசத்தை பிற ஞானியர் கண்டனர்.அவருடைய ஜோதியை கண்டனர்.பிறகு “ஆனந்தா இனி சத்சங்கத்துக்கு வரலாம் நீர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக் கொள்கிறோம் “என்றார்கள்.

அப்படித்தான் பௌத்த சூத்திரங்கள் யாவும் தொகுக்கப்பட்டன.

**

புத்தரை ஒருவர் திட்டினார்.புத்தர் கேட்டார்,தன் வழி நடந்தார்.புத்த பிட்சு ஆனந்தர்,”திட்டியவனுக்கு மறுமொழி எதுவும் கூறவில்லையே” என்று கேட்டார்.

புத்தர் “மற்றவர்களது தவற்றுக்கு என்னைத் தண்டித்துக் கொள்வதை,வெகு காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.அவன் திட்டுகிறான்.திட்டுவது அவன் செயல்,அவன் தவறு.அதில் நான் எங்கே நுழைந்தேன்”திட்டட்டும்,திட்டாதிருக்கட்டும்.மோசமாகத் திட்டட்டும்.லேசாகத் திட்டட்டும்,பலத்தைச் செலுத்தித் திட்டட்டும்,பலமற்று திட்டட்டும்,அவன் உழைத்தான்.கிராமத்திலிருந்துநடந்து,நம் பாதை வரையில்,திட்டுவதறகாக் வந்தான்.திட்டி விட்டான்.தனது வேலையை முடித்து விட்டான்,திரும்பினான்.இதில் எனக்கு என்ன சம்பந்தம்?

திட்டுவதற்க்கு,அவனை நான் தூண்டவில்லை அவனை நான் உற்ச்சாகபடுத்தவுமில்லை. எனக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை.நான் தொடர் பற்றவன்.அவனது தவற்றிற்காக ,எனக்கு ஏன் தண்டனை விதித்துக் கொள்ளவேண்டும்?நான் கோபமைடைந்தால்,அதில் எரிபடுவது நானே .தீ,எனக்குள் எழும்.எனது மயிர்கால்கள் அனைத்தும் குத்திடும்;எனது பிராணன் துடிக்கும்,எனது ரத்த அழுத்தமே அதிகரிக்கும்,இரவு எனக்கு உறக்கம் வராது;இந்த மனிதன்,திட்டி முடிதாயிற்று,வேலை முடிந்தது,என்று ஆனந்தமாக உறங்குவான்!”எனறார்.

Tuesday, November 16, 2010

சத்திய சோதனை

இந்திரா பார்த்தசாரதி

இ.பா புத்தகங்கள் என்றால் அரசியல் பகடி செய்யும் எழுத்துக்கள் தான். ’வேதப்புரத்து வியாபாரிகள்’ அபத்தங்களாக சம்பவங்களை கோர்க்கப்பட்டு தற்கால அரசியல்வாதிகளை நக்கலடித்திருப்பார்.’ஏசுவின் தோழர்கள்’ நாவலில் போலிஷ் நாட்டோடு அரசியலோடு இந்தியாவை ஒப்பிட்டு செய்திருப்பார். ‘சுதந்திர பூமி’ நாவலில் ஒரு சமையல்க்காரன் அரசியல்வாதியான கதையை சொல்லியிருப்பார். இதில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கொள்கையை பகடி செய்திருப்பார். இந்த மூன்று அரசியல் நாவலை கட்டுரையாகக் கூட எழுதியிருக்கலாம். ஏன் நாவலாக எழுதினார் படித்து முடித்த பிறகு தோன்றியது ? கட்டுரையில் சொல்ல வேண்டியதை கதாப்பாத்திரங்களின் விவாதம் மூலம் சொல்லியிருப்பார்.

மிக எளிமையான எழுத்து, அதிக வர்ணனையில்லாத நடை என்பதால் இவரின் மூன்று புத்தங்களை படித்திருக்கிறேன். இ.பாவின் ‘சத்திய சோதனை’ நான் படித்த நான்காவது புத்தகம். இதுவும் அரசியலை பற்றிய சமக்கால நாவல் தான்.

மகாத்மா காந்தி சுயசரிதையின் தலைப்பைக் கொண்ட புத்தகம் தவிர அவரின் சுயசரிதைக்கும், இந்த நாவலுக்கும் எந்த சம்மந்தமில்லை. காந்தியிருந்திருந்தால் தன் புத்தகம் பெயர் இதற்கு வைத்தற்காக மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் இந்த தலைப்பு வைத்துவிட்டார்கள் போல.

தமிழ் அகராதியில் ‘அரசியல்’ என்றால் நாட்டை நிர்வாகிக்கும் கலை. ஆனால் நாம் பயன்ப்படுத்துவது...? தந்திரம், ஏமாற்றுவது, முகமூடி, காலை வாரிவிடுவது, மாட்டிக் கொள்ளால் இருப்பதற்கு... போன்ற காரியங்களுக்கு மாற்றுப் பெயராக தான் இருக்கிறது.

பிரும்மநாயகம் என்ற அரசியல்வாதியின் சுயசரிதை எழுத கோஸ்ட் ரைட்டராக வரும் வாசுதேவன், அவர் செகரெட்டியாக சேருக்கிறான். அங்கு அவருடன் வாசுதேவனுக்கு கிடைக்கும் அனுபவம், அரசியல் தந்திரமும் அவனை பிரம்மிக்க வைக்கிறது. பிரம்மநாயகம் வேட்பாளராக நிருத்திய பிரம்மநாயகத்தின் நண்பர் தணிகை கொலைச் செய்யப்படுகிறார். தணிகையின் கொலை அரசியலுக்காக செய்யப்பட்டதா ? பிரும்மநாயகம் பங்குயிருக்குமா ? என்று பல சந்தேகங்கள் வாசுதேவன் மனதில் ஓடுகிறது. இறுதியில், கொலை பழி வாசுதேவன் மேல் படியாக சந்தர்ப்பங்கள் அமைக்கிறது. அதில் வாசு எப்படி மீண்டான் என்பதை புத்தகம் வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே சரியான குடிநீர் வசதிகூட இல்லாம இருக்கிறவங்க சதவிகிதம் தெரியுமா உங்களுக்கு ? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க ?’

‘சாராயம் கொடுங்க’

’அரசாங்கத்துக்கு உங்க சிபாரிசு இதுதானா ?’

‘என் சிபாசிசு இல்லேய்யா. அரசாங்கம் இதைத்தானே இப்போ செய்திட்டு வருது ?”


**

’படிச்சு முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டிருக்கேன்.’

வேலை தேடுவானேன் ? கட்சியிலே சேர்ந்திடு !’


’வேதப்புரத்து வியாபாரிகள்’, ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலில் இருந்த இ.பாவின் அரசியல் நகைச்சுவை இதில் குறைவு தான். எழுத்தாளன் கண்ணோட்டத்தில் நடக்கு கதை இன்னும் அரசியல் நகைச்சுவை கலந்திருக்கலாம்.

தன் முந்தைய நாவலில் திராவிட அரசியலை பகடி செய்தவர், இதில் வன்னிய அரசியலை பகடி செய்திருக்கிறார். குடி பழக்கம் இல்லாதவனாக பேசும் தலைவன் அந்தரங்க நண்பனோடு குடிப்பது போல் அமைத்திருக்கிறார்.

பார்ப்பனிய அரசியல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இவர் ஒரு நாவல் எப்போ எழுதப்போகிறார் ??

சமகால அரசியல் நாவல் வரவேற்க ஒன்று தான். இ.பா நாவல் ஒரு தலை பட்சமாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

நூல் வாங்க... இங்கே


ரூ.100 , பக் : 136
கிழக்கு பதிப்பகம்

Thursday, November 11, 2010

சில மொக்கை குறும்படங்கள்

நல்ல துணி எடுக்க நூறு துணியை எடுத்து வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அது போல தான், நல்ல குறும்படம் பார்க்க சில மொக்கை குறும்படங்களை பார்த்து தொலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி நல்ல குறும்படங்களை தேடும் போது கண்ணில் மாட்டிய சில மொக்கை படங்கள். எடுத்துக் கொண்ட கதைக் களம், மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக இயக்கியவர்களை பாராட்டலாம்.

Someone’s

பள்ளி மாணவன் இயக்கிய குறும்படம் என்பதை தவிர பெரிதாக சொல்ல இதில் இல்லை. மாணவன் என்பதால் என்னவோ கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக இறுதியில் சொல்லியிருக்கிறார்.



பலன்

நாளைய இயக்குனர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட குறும்படமா ? நகைச்சுவை படமா ? என்று ஒன்றும் புரியவில்லை. படம் எடுக்க வரும் இயக்குனரின் காட்சியை நடிகர்கள் எப்படி மாற்ற வைக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.



முதல் படி

இறுதி காட்சி வரை இந்த பெண்ணுக்கு என்ன குறை இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வசனம் ஓரளவுக்கு பரவாயில்லை. நல்ல எண்ணத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் விமர்சணத்துக்கு அப்பால் இதை பார்க்க வேண்டும்.

Wednesday, November 10, 2010

குண்டக்க மண்டக்க - 1

[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]

வடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...
பார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...?

வடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...
பார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...

வடிவேலு : நானும் வரேன்..
பார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...?

வடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..
பார்த்திபன் : சரி வந்து தொல...

வடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)

பெண் வீட்டில்......

பார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...
வடிவேலு : வணக்கம்ங்க....
'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....

பெண் வந்து காபி கொடுக்க...



வடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...
வடிவேலு : அப்போ பொண்டாடிய....
பார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...

வடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)
ரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...
'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....

வடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...
'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...
ரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...

பார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..
வடிவேலு : சரிப்பா... பொண்ணுங்க கிட்ட எனக்கு பேச தெரியாதா....

'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....

'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...?
வடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..

'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...
வடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...

'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...

வடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...

'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...
வடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...

'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....
வடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )

வடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...
'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...

'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...

வடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...
'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...

வடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...
'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...

வடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...
'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....

வடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....

(இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)

பார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...

கடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...
வடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...

பார்த்திபன் : அப்படியா…! பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...
வடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....

பார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....
வடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...

பார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...
ரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..
பார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...
ரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...

வடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...
ரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...



வடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...
ரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...

வடிவேலு : ஐயோ..அடிக்காதிங்க..அடிக்காதிங்க...பார்த்திபா...காப்பாத்து...
பார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...

வடிவேலு : அப்படி நியாயம் கேளு...
பார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...

வடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்காம விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)
வேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.
ரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....

வடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...

வேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...
வடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....
ரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......

(இது ஒரு மறுபதிவு)

Tuesday, November 9, 2010

இலக்கியச் சோலையில் "சாப்பாட்டு பிரியன்"



அக்டோபர் மாதம் இலக்கியச் சோலை மாத இதழில் நான் எழுதிய "சாப்பாட்டு பிரியன்" சிறுகதை.

Thursday, November 4, 2010

ஹைக்கூ கவிதைகள் - 4

தங்கத்தில் இருந்து
வெள்ளி வந்தது
ஏழையின் வேர்வை !

**

ஓசோனின்
ஓட்டையைப் போல்
ஏழையின் குடை !

**

என்னுள் இருந்து
என்னை ஆட்டிவைக்கிறது
தலைகனம் !

**

ஆணுக்கு இருந்திருந்தால்
பரத்தையை தேடியிருக்க மாட்டான்
கற்பு !

**

நீண்ட தூரம் பயணம்
ஓட்டியவன் கட்டிலில்
அவனை ஓட்டியது பனியில் !

**

நூறு ரூபாய் லஞ்சம்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
சான்றிதழுக்காக !

Tuesday, November 2, 2010

இரண்டு குறும்படங்கள்

நண்பா

பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் போட்டி தான் கதை. யார் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஆரோக்கிய விஷயத்தை வைத்து எடுத்ததை பாராட்டுக்குறியது. இரண்டு சிறுவர்களும் நடிப்பும் க்யூட். இந்த குறும்படத்தில் வரும் குழந்தைகளுக்கான பாடல் நம்மை சிறுவர் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.

பல விருதுகள் “நண்பா” குறும்படத்திற்கு கிடைத்துள்ளது.



தோட்டா... விலை என்ன ?

படத்தின் ஆரம்பக் காட்சியில் Perfume, SAW போன்றா சீரியல் கில்லர்ஸ் படம் போல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துவிட்டு, இறுதி காட்சியில் தன் கருத்தை நச் என்று பதிவு செய்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்த நடிகர் மிக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

LinkWithin

Related Posts with Thumbnails