வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 6, 2011

சென்னை புத்தக கண்காட்சி(2).... உறுப்பினர் உள் அரசியல்

சென்னை புத்தக கண்காட்சி நுழைந்த்தும் நேராக ஆண்டாள் திரிஷக்தி (ஸ்டால் எண்.176)க்கு சென்றேன். கேபிளும், கே.ஆர்.பி.செந்திலும் போட்டோ செக்‌ஷனலில் பிஸியாக இருந்தனர். நாகரத்னா பதிப்பக புத்தகங்களை ஆண்டாள் திரிஷக்தி (ஸ்டால் எண்.176)யில் இறக்கிவிட்டு கே.ஆர்.பி.செந்திலுடன் பேசிக் கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் ஸ்டால் போடவில்லை என்று கேட்டார் ? செந்தில்

இந்த முறை நான் வாடிக்கையாக ஸ்டால் போடுபவர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட கதையை சொன்னேன். ஸ்டாலுக்கான அனுமதி தொகை, உறுப்பினர்களுக்கு இந்த முறை முக்கியத்துவம் போன்ற தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டோம்.

பேசாமல் நீங்களும் மெம்மர் அயிடுங்க என்றார் செந்தில்.

அதில் தான் இருக்கு ஏகப்பட்ட உள் குத்து. நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்றால் ரூ.5000 டி.டி. எடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் ரூ.5000 டி.டியை திருப்பி அனுப்புவார்கள். எனக்கு தெரிந்த நண்பரின் டி.டி.யை ஆறு மாதம் கலித்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு வேளை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டாலும், முதல் மூன்று வருடங்களுக்கு உறுப்பினர் அல்லாத தொகையை தான் ஸ்டாலுக்கு செலுத்த வேண்டும். இப்போது, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரூ.16,500/-, உறுப்பினர்களுக்கு ரூ.9500/- என்று உள்ளது. அதாவது, நான்காவது வருடத்தில் இருந்து தான் உறுப்பினரானது போல் உங்கள் பதிப்பகத்தை கருத்துவார்கள்.

பாபாஸி தேர்தலில் நிற்க விரும்பினால் இன்னும் மூன்று வருடம் உறுப்பினராக நீங்கள் இருந்திருக்க வேண்டும். அதாவது ஆறு வருடம் உறுப்பினராக இருந்தால் தான் தேர்தலில் நீங்கள் நிற்க முடியும் என்றேன்.

செந்திலுக்கு ஏன் தான் பதிப்பக தொழிலுக்கு வந்தோம் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது உண்மைத் தமிழர் வந்தார். ( நான் எழுதிய நடைபாதை, என்னை எழுதிய தேவதைக்கு இரண்டு சிறுகதை தொகுப்புகளை வாங்கினார்... ஒரு விளம்பரம்).

உண்மை தமிழர் சென்றதும் பா.ரா தன் இரண்டு தளபதியோடு (ஆதிஷா, லக்கி) வந்தார். பிரபல பதிவர் என்று திட்டி எழுதிய பா.ரா அவர்கள் கேபிளை பார்த்தது பிரபல பதிவர் என்றார். (இதில் ஏதாவது உள்குத்து உண்டா என்று தெரியவில்லை.) காலையில் பல் விளக்கும் முன் கேபிள் பதிவை தான் பார்ப்பேன் பா.ரா கேபிளை பாராட்டினார் (?). ( நாங்க தான் வாஷ் பேஸினுக்கு தான் போவோம் என்றேன்.)

அங்கிருந்து, அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் ஸ்டாலுக்கு (எண்.272) சென்றேன். இன்னும் பல உறுப்பினர் புத்தகம் வந்து சேரவில்லை. பலர் கண்காட்சியில் புத்தகம் வைக்க இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். உறுப்பினர்களுக்காக ஒரு சங்கம் ஸ்டால் எடுத்திருக்கும் போது அதில் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருந்தது. என்னுடைய பையை அங்கு வைத்துவிட்டு புத்தகம் வாங்க சென்றேன்.

இன்று வாங்கிய புத்தகங்கள்.

எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் – வ.உ.சி நூலகம்
ரெட் சன் – சுதீப் சக்ரவர்த்தி – எதிர் வெளியீடு
ஸ்பெக்டரம் – பத்ரி – கிழக்கு பதிப்பகம்
காஷ்மீர் – பா.ராகவன் – கிழக்கு பதிப்பகம்

புத்தக கண்காட்சி தொடங்கும் முன்பே வாங்க நினைத்த புத்தகங்கள் ( பட்டியல் கீழே) வாங்கிவிட்டதால் எந்த புத்தகத்தையும் குறிப்பிட்டு தேடி வாங்கவில்லை.

வஞ்சக உளவாளி – நந்திகா ஹக்சர் – கிழக்கு
தேகம் – சாரு நிவேதிதா - உயிர்மை
ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – நளினி ஜமீலா - காலச்சுவடு
பரத்தை கூற்று – சி.சரவணகார்த்திகேயன் – அகநாழிகை
ஞாயிற்றுகிழமை மதியப்பூனை – பொன்.வாசுதேவன் – உயிர்மை
வெயில் தின்ற மழை – நிலா ரசிகன் – உயிர்மை
வெள்ளைத் தீ – அறிவுமதி – தமிழ் அலை

புத்தக கண்காட்சியை விட்டு செல்ல இரவு 8.40 மணியானது. வரும் நாட்களில் முன்பை விட கூட்டம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள். வார நாட்களில் இந்த அளவிற்கு கூட்டம் வந்ததே பெரிய விஷயமாக எனக்கு தெரிந்தது. டூ விலர் பார்க்கிங் 90% வரை நிரம்பி இருந்தது. இதை விட அதிகமாக தொடர வேண்டும் என்பது தான் என் ஆவா....!

1 comment:

Anonymous said...

அணைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கம் – ஸ்டால் எண். 272.//
என்று தங்கள் வலைப்பூவின் இடது பக்கத்தில் உள்ளது.. 'அனைத்திந்திய' என மாற்றவும் நண்பரே!!

LinkWithin

Related Posts with Thumbnails