வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 17, 2011

என்னுள் ஒரு வேள்வி !

தாசி

படுத்தவனிடம் கேட்பது போல்

தினமும் கேற்கிறேன்

என் மேலாளரிடம்

" நேரமாச்சு... நான் போகனும்"


*


ஒவ்வொரு முறையும்

பேப்பரில் கை தொடைக்கும் போது

பேனாவால் எழுதும் போதும்

என்னை நானே கேள்விக் கேட்டுக் கொள்கிறேன்

"எத்தனை மரங்கள் வெட்டப்பது ?"


*


மனைவியை தீண்டும் போது

என்னையும் அறியாமல்

நினைவுக்கு வருகிறது

"பழைய காதலியை முத்தமிட்ட நினைவுகள்"


*


தெருவோரம் குழந்தைகள்

பிச்சை எடுக்குக்கும் போது

கண் முன் வந்து நிற்கும்

"என் செல்ல குழந்தை"

*

பல கேள்விகளுக்கும்

உருத்தலுக்கும் நடுவில்

பணம் சேர்த்து வைக்கிறேன்

நாளை வாழுவேன் என்ற நம்பிகையில்.....!?

2 comments:

Unknown said...

வித்தியாசமான கவிதை

சமுத்ரா said...

good one ..
"எத்தனை மரங்கள் வெட்டப்பது ?"
எத்தனை பேர் இப்படி சிந்தித்துப் பார்பார்கள் என்று தெரியவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails