வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 28, 2011

இத்தாலி.....முசோலினிக்கு முன்பு !

இத்தாலி... இந்தியாவை போலவே முன்று புறமும் கடல் நீர். 116,346.5 சதுரங்க நிலப்பரப்பு கொண்ட தேசம். அதன் தலைநகரம் ரோம். இவை எல்லாம் உலக வரைப்படத்தில் நாம் அறிந்துக் கொள்ளும் செய்தி. இன்று உலகவரைப்படத்தில் நாம் பார்க்கும் இத்தாலி இரண்டாம் உலக யுத்தத்து பிறகுகே உருவானது. ஆனால், அதற்கு முன்பு இத்தாலி சிறு சிறு நாடுகளாக தான் பிரிந்து இருந்தன.

வெனிடியா, லொம்பர்டி, பர்மா, மொடேனா போன்ற இடங்களை ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி நாடுகள் அதிகாரம் செலுத்தி வந்தது. அதே போல் மத்தியில் இருக்கும் பாபஸ் ஸ்டேஸ் மற்றும் ரோம் இடங்கள் போப் பாண்டவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தெற்கு பகுதியில் இருக்கும் இடங்களை சிசிலி மன்னர் ஆட்சி கீழ் இருந்தது. இப்படி இத்தாலியை ஒவ்வொருவரும் வெவ்வெறு விதமாக ஆட்சி செய்து வந்தனர். மக்களும் தலை விதியே என்று தான் வாழ்ந்து வந்தார்கள். யாரையும் எதிர்த்து ஒருவர் கூட பேசவில்லை. இச்சமயத்தில் தான் ஒரு புரட்சி பிறந்தது.... இத்தாலியில் அல்ல... பிரான்ஸ்யில்....!


1789ஆம் ஆண்டு பிரான்ஸ்யில் ஃபிரென்ட்ச் புரட்சி தொடங்கிய காலக்கட்டம். பிரென்ட்ச் புரட்சியில் பிரான்ஸ் தனி நாடாக உருவாகி , மக்கள் ஆட்சி மலர்ந்தது. ஃபிரான்ஸ் மக்கள் சந்தோஷத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் கொண்டாட்டம் இத்தாலி மக்களை ஏங்க வைத்தது. தங்கள் நாட்டிலும் மக்கள் ஆட்சி வர வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் எப்படி....?

ஒரு புறம் போப் பாண்டவரின் கட்டுப்பாடு, மறு புறம் சிசிலி மன்னரின் ஆட்சி, எல்லாவற்றிக்கும் மேலாக ஆஸ்திரியாவின் ஆதிக்கம்..... இப்படி ஒருவர் இடமிருந்து தப்பித்தாலும் இன்னொருவர் அந்த இடத்தை நிரப்பிவிடுவார். இத்தாலியில் மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றால் பிரிந்து இருக்கும் எல்லா நாடுகளும் ஒருங்கிணைக்க வேண்டும். நாடுகளை ஒருங்கிணைத்தால் மக்கள் ஒன்றாக முடியும். மக்கள் ஆட்சி கொண்டு வருவவதற்கு சுலபமாக இருக்கும். நாடுகள் ஒருங்கிணைத்து ஒரு குடைக்குள் கொண்டு வருவது என்பது இத்தாலி மக்களுக்கு கனவாக தான் இருந்தது. இதை நினைவாக்க பல இயக்கங்கள் செயல் பட்டு வந்தன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புரட்சியாளர் கரிபால்டி இயக்கத்தை சொல்ல வேண்டும். மூலைக்கு ஒரு புறம் நாடுகளை இணைக்க பல இயக்கங்கள் உருவனதோடு மட்டுமில்லாமல் பல புரட்சி செயல்களும் வெடிக்க உருதுணையாக கரிபால்டி இருந்தார்.



இத்தாலியை பெரும் பகுதியை ஆஸ்திரிய அரசு ஆண்டு வந்ததால் இந்த புரட்சி இயக்களின் செயலை ஆஸ்திரிய அரசு விரும்பவில்லை. அதே சமயம் அங்காங்கே வெடிக்கும் புரட்சிகளையும் ஆஸ்திரிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மத்தியில் இருக்கும் பாபல் ஸ்டேஸ், ரோம் ஆண்டு வந்த போப் பாண்டவரின் உதவியை நாடினார்கள். ஆஸ்திரிய ஆட்சி பகுதியில் நடக்கும் செயல்கள் தன் நாட்டிலும் நடக்கலாம் என்பதை போப் உணர்ந்தனர். அதுமட்டுமில்லாமல் இத்தாலி நாடுகள் ஒருங்கிணைத்தால் கத்தோலிக்கர்களை பாதிக்கும் என்று நினைத்த போப் ஆஸ்திரிய அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆஸ்திரிய மற்றும் போப் திட்டங்களால் புரட்சியாளர்களின் முயற்சி எல்லாம் முறியடிக்க பட்டுக் கொண்டு இருந்தது. புரட்சியாளர் கரிபால்டி நாடு கடத்தப்பட்டார்.

சில ஆண்டுகள் பிறகு நாடுகளை ஒருங்கிணைக்கும் எண்ணம் செனிடியாவை ஆண்ட விக்கடர் ஈமானுவேலுக்கும் வந்தது. தன் எண்ணத்தை நிறைவேற்றும் ஒருவரை கவர்னராக அமர்த்த முடிவு செய்தார். ஈமானுவெல் எதிர்பார்த்த தகுதியெல்லாம் கொண்ட ஒருவர் கிடைத்தார். அவர் பெயர் கேவ்வர். ஈமானுவேல், கேவ்வர் பிரிந்து இருக்கும் நாடுகளை ஒரு நாடாக்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாலும் அது சுலபமான திட்டமில்லை என்பதையும் உணர்ந்தனர். போப் பாண்டவரை தாக்கினால் பிரன்ட்ச் அரசு போருக்கு வரும். மத்தியில் இருக்கும் நாடுகளை கைப்பற்றாமல் சிசிலி நாட்டை தாக்க முடியாது. அதனால், இருவரும் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒரு யுத்தத்தின் மூலம் அமைந்தது.

1854யில் 'கிரமியன் யுத்தம்' தீவிரமாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். துருக்கிக்கும், ஃபிரன்ட்சு - இங்கிலாந்து கூட்டணிக்கும் யுத்தம் உச்சக் கட்டத்தில் நடந்துக் கொண்டு இருந்தது. இச்சமயத்தில் செனிடியா ஃபிரன்ட்சு கூட்டனிக்கு ஆதரவாக யுத்த களத்தில் தன் படைகளை அனுப்பியது. மிகவும் பரப்பரபாக நடந்த யுத்தத்தில் ஃபிரான்ஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், ஃபிரான்ஸ் மன்னரான மூன்றாம் நெப்போலியனுக்கும், கேவ்வருக்கும் நெருக்கம் அதிகமானது. இவர்களுக்குள் ஒரு ரகசிய ஓப்பந்தமும் கையெழுத்தானது. செனிடியாவுக்கு எதிராக ஆஸ்திரியா போர் தொடுத்தால் செனிடியாவுக்கு ஆதரவாக ஃபிரன்ட்சு அரசு போரில் குதிக்கும். ஃபிரன்ட்சு ஆதரவு கிடைத்து விட்டது... அடுத்தது திட்டத்திற்கு தன் காய் நகர்த்தினார் கேவ்வர். நாடு கடத்தப்பட்ட கரிபால்டி தன் நாட்டிற்கு அழைத்தார். அழைத்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு தன் இராணுவத்தில் ஜென்ரல் பதவியையும் கொடுத்தார். அது மட்டுமா.... புதிய இராணுவம் அமைத்துக் கொள்ள பொருப்பையும் அவருக்கு கொடுத்தார் கேவ்வர். தன்னை போல் கரிபால்டியும் எல்லா நாடுகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று புரட்சி செய்ததற்காகவே அவருக்கு இத்தனை பொருப்புக்கள் கிடைத்தது.

இராணுவ ஜென்ரல் பொருப்பேற்ற கரிபால்டி புதிய இராணுவ அமைக்கும் பணியில் ஈடுபட தொடங்கினார். தனக்கு உதவியாக ‘மாஜினி’ என்ற புரட்சியாளரை தன்னுடன் இணைத்துக் கொண்டு இராணுவத்தை அமைத்தார். கேவ்வர் எதிர்பார்த்தது போல் ஆஸ்திரிய- செனிடியா யுத்தம் நடந்தது. கரிபால்டி, மாஜினி தலைமையில் செனிடியா இராணுவம் ஆஸ்திரியா இராணுவமுடன் யுத்தம் செய்த்தார்கள். பெரும்பாலான லம்பார்டி பகுதியில் செனிடியா இராணுவம் வெற்றி பெற்றுக் கொண்டு இருந்தது. இத்தாலிய புரட்சியில் மாஜினி ஆத்மாவாகவும், காரிபால்டி ஆயுதமாகவும், கேவ்வர் அறிவாகவும் இருந்தார்.

முன்பே நாம் பார்த்தது போல் செனிடியாவுக்கு ஃப்ரான்ஸ் அரசு உதவுவதாக கூறின. அதனால், மூன்றாம் மன்னர் நெப்போலியன் தலையிட்டு லம்பார்டி பகுதியை செனிடியாவுக்கு வாங்கி கொடுத்தார். லம்பார்டி மக்கள் செனிடியாவுடன் இணைந்ததை கொண்டாடினர். கவர்னர் கேவ்வரின் முதல் திட்டம் மிக பெரிய வெற்றி. இனி அடுத்த திட்டம் போட தொடங்கினர்...!

லம்பார்டி செனிடியாவுடன் இணைந்ததை கண்ட பிற இத்தாலி நாடுகளும் செனிடியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பினர். ஒற்றர்கள் மூலம் இதை உணர்ந்த கேவ்வர் மற்ற நாடுகளை தங்களுடன் இணைக்க யுத்தமில்லாமல் புது மாதிரியான திட்டம் செய்தார். மற்ற நாட்டு தங்களுடன் இணைய விரும்புவதாக ஆஸ்திரிய அரசு தெரிவித்தார். ஆஸ்திரிய அரசு இதை எதிர்த்தது. அடுத்தது போர் என்று தான் கேவ்வரும் எதிர்பார்த்தார். ஆனால், ஃப்ரான்ஸ் செனிடியாவுக்கு பக்க பலமாக இருப்பதை உணர்ந்த ஆஸ்திரிய அரசு மக்கள் விரும்பினால் செனிடியாவுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றது. கேவ்வரும் மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார். பெரும்பாலான மக்கள் தங்கள் நாடு செனிடியாவுடன் இணைக்க விரும்புவதாக வாக்களித்தனர். இறுதியில் ரோம், சிசிலி, வெனிடிய நாடுகளை தவிர மற்ற பகுதிகள் எல்லாம் செனிடியாவுடன் இணைத்துக் கொண்டது. கத்தியின்றி ரத்தமின்றி கேவ்வர் தான் நினைத்ததை சாதித்தார். இதற்கு உதவியாக இருந்த ஃப்ரான்ஸ் அரசுக்கு தன் இடத்தில் ஒரு பகுதியை பரிசாக கொடுத்ததனர்.

சிசிலி நாட்டை கைப்பற்ற கரிபால்டி தலைமையில் செனிடியா இராணுவத்தை அனுப்பினார் கேவ்வர். ஆரம்பத்தில் இருந்தே செனிடியா படைகள் கையோங்கியே இருந்தது. கடும் எதிர் தாக்குதல் சிசிலி இராணுவத்திடம் இல்லாததால் கரிபால்டி எளிதாக வென்றார். இறுதில் சிசிலி நாட்டும் செனிடியாவுடன் இணைந்தது. இணைக்கப்பட்ட நாடுகளுக்கு புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிதாய் உருவான இத்தாலி நாட்டுக்கு இரண்டாம் விக்டர் ஈமானுவெல் மன்னராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தாலியை போல் பர்ஷியா ச்சான்ஸ்லர் பிஸ்மார்க்கும் பிரிந்து இருக்கும் ஜெர்மன் மாநிலங்ளை ஒன்று சேர்க்க நினைத்தார். ஜெர்மன் மாநிலங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றால் பிஸ்மார்க் ஆஸ்திரியாவை வெல்ல வேண்டும். பிஸ்மார்க் எண்ணத்தை அறிந்த செனிடியா ஒடி சென்று அவருக்கு உதவியது. 1866 ஆம் ஆண்டு பர்ஷியா அரசுவுடன் இத்தாலி கூட்டணி அமைத்தது. வலுவான பர்ஷியா- இத்தாலி கூட்டணி ஆஸ்திரியா எதிராக யுத்தம் தொடங்கியது. இதிலும் இத்தாலி தரப்புக்கு தான் வெற்றி. வெற்றிக்கு பரிசாக செனிடியா வேண்டிய பகுதியை எடுத்துக் கொண்டது.

கேவ்வர், ஈமானுவெல் நினைத்ததை தொன்னூறு சதவீதம் அடைந்து விட்டார்கள். இன்னும் மிஞ்சி இருப்பது ரோம் மட்டும் தான். இத்தாலி படை பலத்துடன் ஒப்பிட்டால் ரோம் சிறு பூச்சி தான். ஆனால், ரோம் எதிராக இத்தாலி போர் செய்தால் ரோமில் இருக்கும் ஃப்ரான்ஸ் படைகளை தாக்க வேண்டியது இருக்கும். இதனால், ஃப்ரான்ஸ் - இத்தாலி உறவு பாதிக்கப்படும் என்று உணர்ந்த இத்தாலி யோசித்தது. இப்போதைக்கு மௌனமாக இருப்பதே நல்லது என்று இத்தாலி நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர். இத்தாலி எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம் 1870ல் வந்தது.

ஃப்ரான்ஸ் அரசுக்கும், பர்ஷிய அரசுக்கும் யுத்தம் மேகம் மூண்டது. தனது இரண்டு கூட்டணி நாடுகளை சண்டை போடுவதை பார்த்து இத்தாலி கவலை படவில்லை. சமரசம் செய்து வைக்க கூட இத்தாலி முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக இந்த யுத்தத்தை பயன்படுத்தி கொண்டு இத்தாலி ரோம் நகரை கைப்பற்றியது. ஃப்ரான்ஸ் பர்ஷவுடன் யுத்ததில் தோல்வி பெற்றது இத்தாலிக்கு பெரும் லாபமாக அமைந்தது. ரோம்மை தன் தலை நகராக்க இத்தாலி மாற்றியது.



பர்ஷியர்களின் தலைமையில் ஒருகிணைந்த ஜெர்மனியும் உருவானது. ஜெர்மனியும், இத்தாலியும் ஒரே காலக்கட்டத்தில் தான் ஒருகிணைக்கப்பட்டது. பிஸ்மார்க் கொண்டு வந்த பல திட்டங்களால் ஜெர்மன் மிக பெரிய தொழில்வலம் மிக்க நாடாக முன்னேறியது. ஆனால், விவசாய நிலங்கள் கொண்ட இத்தாலி எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆரம்பித்த இடத்திலே தான் இருந்தது. இத்தாலியில் எங்கும் பஞ்சம் தலை விரித்து ஆட்டி படைத்து கொண்டு இருந்தது. மக்கள் ஒவ்வொரு நாளும் போராடி கொண்டு தான் வாழ்ந்தார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் 1883ஆம் ஆண்டு முசோலினி இத்தாலியில் பிறந்தார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails