வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 30, 2011

ஒரு நாடகம் அரங்கேறியது !!



2009ல் ரெஸிஷன் நேரத்தில் “ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?” என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகம் எழுதி பதிவிட்டிருந்தேன். அதை, சென்ற வருடம் எங்கள் அலுவலக 'Humour Club' க்காக அரங்கேற்றினோம்.

ஹோட்டல் முதலாளியாக வருவன் அடியேன் தான். ஹோட்டல் சரக்கு மாஸ்டராக சுஜய் நடித்தார். அவருடைய உடல் மொழி, டயலாக் டெலிவரி நாடகத்திற்கு மேலும் நகைச்சுவையுட்டியது.

பதிவியிடும் போது இல்லாத நகைச்சுவை வசனங்களை கூடுதலாக சேர்த்துள்ளோம். அதன் (சுமாரான) வீடியோ தற்போது தான் யூட்யூப்பின் ஏற்றினோம்.

நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும். நன்றி.

Tuesday, September 27, 2011

சுயமுன்னேற்ற நூலின் அவசியம்

ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியிலும் அதிகமாக விற்பனையாகும் நூல் என்றால் ஜோதிடம், சமையல் என்பார்கள். ஆசிரியர் யாராக இருந்தாலும் இந்த இரண்டு பிரிவு நூல்களை வாங்கும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கும். இந்த இரண்டை தவிர்த்து அடுத்து அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் சுயமுன்னேற்றம் தான். குட்டி கதை, தன்னம்பிக்கை தரும் வரிகள், உத்வேகம் தரக்கூடிய தலைப்பு இருந்தால் போதும் சுயமுன்னேற்ற நூல்கள் விற்பனையாகிவிடும்.

ஒரு முறை ஆதிஷா, லக்கியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு நடிகர் சுயமுன்னேற்ற நூலை கடுமையாக சாடினார் என்பதை கூறிப்பிட்டார்கள். ”சுயமுன்னேற்ற நூல் எழுதுபவர்கள் எல்லோரும் என்ன சாதித்துவிட்டார்கள் ? பணம் சம்பாதிப்பது எப்படி ? என்று புத்தகம் போட்டு பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். புத்தகம் வாங்குபவன் அப்படியே தான் இருக்கிறான்” என்பதை அந்த நடிகர் குறிப்பிட்டதாக கூறினார். அப்போது அவரிடம் பதில் கூறும் நிலையில் இல்லை. ஆனால், அதற்கு பதில் இந்த கட்டுரையில் சொல்லியாக வேண்டும்.

வாழ்க்கையில் முன்னேறி அதிகம் பணம் சம்பாதித்தவர்கள் தான் சுயமுன்னேற்ற நூல் எழுத வேண்டும் என்றால் அம்பானி, பில் கேட்ஸ் மட்டுமே நூல் எழுத முடியும். ஆனால், அவர்கள் வாழ்க்கையை படித்து, அறிந்து எத்தனையோ பேர் தன்னம்பிக்கை வளர்த்திருக்கிறார்கள். அப்படி பலரது தன்னம்பிக்கை வளர்த்த அம்பானி, பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் பங்கு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சுயமுன்னேற்ற நூல் எல்லாம் பேத்தல் என்று சொல்லும் அந்த நடிகர் எத்தனை வெற்றிகளை குவித்துவிட்டார். சோர்வு பெற்ற மனதிற்கு குடி, தற்கொலை என்று காட்டிலும் தன்னம்பிக்கை தரக் கூடிய சுயமுன்னேற்ற நூல்கள் மிகவும் நல்லது.

பொதுவாக, சுயமுன்னேற்ற நூல் ஒரு பொழுதுபோக்கு நூல் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பத்திரிகை செய்திப் போல் அல்லது சிறுகதை, நாவல் போல் பரபரப்பாக வாசிக்க முடியாது. வாசிக்கவும் கூடாது. தோல்வி அடைந்தவர்களுக்கு வெற்றி அவர்கள் காலடியில் ஒளிந்திருப்பதை காட்டுவது சுயமுன்னேற்ற நூலின் தலையாத கடமை.

உண்மையில், சுயமுன்னேற்ற நூலை வாசிக்கும் போது ஏற்கனவே நமக்கு தெரிந்து விஷயத்தை வாசிப்பது போல் தான் இருக்கும். புதிதாக இல்லாத ஒன்றுக்காக பணம் கொடுத்து புத்தகம் வாங்கினோம் என்று கூட தோன்றும். ஆனால், ஒன்று நாம் மறந்துவிடுகிறோம். இந்த புத்தகம் படிக்கும் வரை நமக்கு தெரிந்த விஷயம் ஏன் ஞாபகத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது நமக்கு தெரியாத புதுசா என்ன சொல்லிவிட்டான் ? என்ற எண்ணத்துடன் எந்த புத்தகத்தை அணுக்க கூடாது.

சுயமுன்னேற்ற நூல்களை நல்ல நண்பனாக அணுக வேண்டும். கருத்துக்கள் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ முழுமையாக படித்துவிட வேண்டும். அதன் பிறகு அதற்கு எதிர்வாதங்கள், கேள்விகளும் கேட்கலாம். மன சோர்வு அடையும் போது தன்னம்பிகையுட்டும் நண்பர்கள் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி அமையாதவர்களுக்கு சுயமுன்னேற்ற நூல் ஒரு வரப்பிரசாதம்.

ஆரம்பக்காலத்தில் எனக்கு அதிகம் தன்னம்பிக்கைம் கொடுத்தது ‘You Can Win’ புத்தகம் தான். இதுவரை, நானே பதினைந்து பேருக்கு பரிசாக இந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன். இதை விட சிறந்த தன்னம்பிக்கை புத்தகங்கள் (Neopolean Hill, Richard Templar புத்தகங்கள்) பல இருந்தாலும், நான் தோல்வி விலும்பில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ‘You Can Win’ புத்தகத்தை தான் வாசிப்பேன்.

ஒவ்வொரு பூஜையறையில் பகவத் கீதை, குரான், பைபிள் என்று இருப்பது போல் உங்கள் புத்தக அலமாரியில் உங்கள் விருப்பமான சுயமுன்னேற்ற நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நல்லது மட்டும் சொல்லி, நல்லதே செய்யக் கூடிய நண்பர்கள் அமைவது கடினம். நல்ல சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பது சுலபம். உங்கள் வாழ்க்கைக்கான விடை உங்களிடம் இருக்கிறது எனபதை உணர உதவுவது சுயமுன்னேற்ற புத்தகங்கள் தான்.

Tuesday, September 6, 2011

நாகரத்னா பதிப்பக இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் !

கவியரங்க அமர்வு

கனியம் செல்வராஜ், பாண்டி மு.வேலு, மாம்பலம் சந்திரசேகர், பாண்டுரங்கன், ’நம்ம ஊர்’ கோபிநாத், கோ.கணேஷ்





”கலாம் கண்ட கனவு” நூல் வெளியீடு

குகன், அரிமா இளங்கண்ணன்,அமுதா பாலகிருஷ்ணன், மாம்பலம் சந்திரசேகர், கார்முகிலோன், அரிமா ராசரத்னம், மோகன் பாலகிருஷ்ணன்





கலைஞரின் நினைவலைகள் - 100 நூல் வெளியீடு
குகன், அரிமா இளங்கண்ணன்,அமுதா பாலகிருஷ்ணன், மாம்பலம் சந்திரசேகர், கார்முகிலோன்




கேபிள் சங்கர் தனது ராயல்டி தொகையை அமுதா பாலகிருஷ்ணனிடம் இருந்து பெறுகிறார்



சுரேகா தனது ராயல்டி தொகையை அரிமா இளங்கண்ணனிடம் இருந்து பெறுகிறார்




கனியன் செல்வராஜ் தனது ராயல்டி தொகையை ’யோசன்’ மோகன் பாலகிருஷ்ணனிடம் இருந்து பெறுகிறார்



”யோசன்” மோகன் பாலகிருஷ்ணன்




சுரேகா




”கேபிள்” சங்கர்



குகன்

Monday, September 5, 2011

தினமணியில் நாகரத்னா பதிப்பகம் !



இன்று (5.9.11) தினமணியில் (சென்னை பதிப்பு), நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவின் பற்றிய புகைப்படம் மூன்றாவது பக்கத்தில் வெளிவந்துள்ளது. பார்க்கவும்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நிகழ்வு குறித்த புகைப்படங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.

Friday, September 2, 2011

மங்காத்தா - விமர்சனம்



மூன் மூர்த்திகளில் இரண்டு மூர்த்திகள் ஒருவர் தயாரிக்க, இன்னொருவர் வெளியீட்டுயிருக்கும் படம் ‘மங்காத்தா’. ஆட்சி மாற்றத்தால் படம் இவ்வளவு நாள் வாங்க பயந்து ஒரு வழியாக வெளியீட்டுயிருக்கிறார்கள். இத்தனை போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றுயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐ.பி.எல் பைனல் மேட்ச் பிக்ஸ்க்காக மும்பையில் 500 கோடி வருவதை அறிந்த நான்கு பேர் கொள்ளை அடிக்க திட்டம் போட, இடையில் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அஜித்தும் திட்டத்தில் சேர்ந்துக் கொள்கிறார். இதற்கு இடையில், அர்ஜூன் புக்கிங் பணத்தை கைப்பற்ற ஒரு குழுவோடு அலைகிறார். ஐந்து பேரும் கொள்ளை அடித்த பணத்தை பிரித்துக் கொண்டார்களா ? அர்ஜூன் அவர்களை கைது செய்தாரா ? என்பது தான் இரண்டாவது பாதி கதை.




அஜித்துக்கு நாயகன் வேஷத்தை விட வில்லன் வேஷம் தான் கச்சிதமாக பொருந்துகிறது. வாலி, வரலாறு, பில்லா என்று நெகட்டிவ் பாத்திரத்தில் பட்டை கலப்பியது போல் இதிலும் செய்திருக்கிறார். அதுவும் இடைவேளைக்கு முன்பு சேஸ் போர்ட் வைத்து தனியாக பேசும் காட்டி கொஞ்சம் நீளம் என்றாலும், சூப்பர். தல Rocks again.

மேட்ச் பிக்ஸ்சிங் புக்கர்ஸ்யை கைது செய்யும் போலீஸ் பாத்திரத்தில் அர்ஜூன். பழக்கமான வேடம் என்றாலும், இதில் கொஞ்சம் ஸ்டைலாக தெரிகிறார். அஜித்துக்கும், அர்ஜூனுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் ரசிக்க முடிகிறது.

த்ரிஷாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. அஞ்சலி, அண்டிரினா வில்லன்கள் மிரட்ட பயன்பட்டிருக்கிறார்கள். மற்றப்படி லஷ்மி ராய் ஆட்டம் கொஞ்ச நேரம் திக்கமுக்கு ஆட வைக்கிறது.

ராபரி படம் என்றதும் முதல் பாது வேகமாக போகாமல் கொஞ்சம் மெதுவாக தான் போகிறது. இரண்டாவது பாதில், யார் யாரை டபுள் க்ராஸ் செய்கிறார்கள் என்ற காட்சியும், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வம் படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது.

ஆடிப்பாரு மங்காத்தா, ஆடாம ஜெய்சோமடா பாடல்களை தவிர மற்ற எல்லா பாடல்களும் மொக்கை தான். பாடல்கள் நடுவில் அப்பா ட்யூனை சுட்டுயிருக்கிறார் யுவன்சங்கர்.

வழக்கம் போல் ஆங்கில படத்தை காபி அடித்து, தமிழுக்கு பொருந்துவது போல் படம் எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஓசன் 11, இட்டாலியம் ஜாப் போன்ற படங்களை பார்த்தவர்கள் இந்த படம் பெரிய பாதிப்பு இருக்காது. தமிழ் படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கண்டிப்பாக சூப்பர் படம்.



படத்தின் குறை என்று சொன்னால், நாற்பது வயது போலீஸ் ஆபிசரை எப்படி த்ரிஷா காதலித்தார் ? மும்பையில் நடப்பதாக கதை சொன்னாலும் முக்கிய பாத்திரங்கள் ஹிந்தி பேசவில்லை. இப்படி சின்ன ஓட்டைகள் இருந்தாலும் இரண்டாவது பாதியின் ‘ரேஸ்’ திரைக்கதையில் படம் போவதே தெரியவில்லை.

மங்காத்தா – New Game for Tamil movie

LinkWithin

Related Posts with Thumbnails