வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 11, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - முதல் 6 நாட்கள் !!

நாள் – 1 (5.1.12)

இந்த முறை F series ஸ்டால்கள் எல்லாம் முன் பக்கமே அமைந்திருக்கிறது.

சிறு பதிப்பாளர்களுக்கு யானை சாப்பிட்ட மிச்சத்தை ஏறும்புக்கு கிடைப்பது போல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கலைஞர் தொடங்கி வைக்கவில்லை. அம்மா ஆட்சியில் (சென்ட் ஜார்ஜ் பள்ளியில்) நடக்கும் முதல் புத்தகக் கண்காட்சி. எப்படி விற்பனையாக போகிறது என்று வரும் சனி, ஞாயிறு கூட்டத்தை வைத்து கணித்து விடலாம்.

முதல் நாள் வாங்கிய புத்தகங்கள்:
1. ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன் ( குமரன் பதிப்பகம்)
2.திரைச்சீலை - ஓவியர் ஜீவா (திரிசக்தி பதிப்பகம்)

நாள் – 2 (6.1.12)

போகவில்லை.

நாள் – 3 (7.1.12)

பிணம் தின்னும் தேசம் மற்றும் விழிப்பறி கொள்ளை கவிதை நூல் வெளியீட்டு புத்தகக் கண்காட்சியில் சிறப்பாக நடைப்பெற்றது.

”விழிப்பறி கொள்ளை” நூலை இயக்குனர் சற்குணம் (களவாணி, வாகை சூடவா) வெளியீட எழுத்தாளர் சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்) முதல் பிரதி பெற்றுக் கொண்டார்.

”பிணம் தின்னும் தேசம்” நூலை இயக்குனர் அழகப்பன் ( வண்ணத்துப்பூச்சி) வெளியீட “ழ” பதிப்பக உரிமையாளர் கே.ஆர்.பி.செந்தில் முதல் பிரதி பெற்றுக் கொண்டார். கவிதைப் புத்தகம் விற்பனையாகாது என்பதை இந்த நூல் பொய்யாக்கிவிடும் என்று நினைக்கிறேன். வெளியீட்ட தினமே ஐம்பது பிரதிகள் மேல் விற்றுள்ளது.

நூல் வெளியீட்டுக்காக அலைந்துக் கொண்டு இருந்ததால், எந்த நூல்களையும் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை. வாங்கிய ஒரே புத்தகம், “அண்ணா ஹசாரே” – ஜெயமோகன் (கிழக்கு பதிப்பகம்).

நாள் – 4 (8.1.12)

மனைவி, மகனுடன் புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். மகனுக்கான இன்று அலைந்தாலும், எனக்காகவும் கொஞ்ச புத்தகம் வாங்கினேன்.

ஐந்தினை பதிப்பகத்தில் (ஸ்டால். 283/284) , தி.ஜா நாவல்கள், சிறுகதைகள் மலிவாக கிடைக்கின்றன. தி.ஜா நூல் வாசிக்க விரும்புபவர்கள் நூல்களை அள்ளிக் கொள்ளலாம்.

நான் வாங்கிய புத்தகங்கள்.

தி.ஜானகிராமன் படைப்புகள் சிறுகதைகள்
அடி – தி.ஜானகிராமன் (ரூ.10/- மட்டுமே)
அன்னை கிரேசியா டெலடா - தி.ஜானகிராமன் (நோபல் பரிசுப் பெற்ற நாவலின் மொழிப்பெயர்பு).
மௌனியுடன் கொஞ்ச தூரம் – திலீப்குமார் (வானதி)
நோபல் பரிசுப் பெற்ற 5 நாவல் (ரூ.213 மதிப்புள்ள நாவல் ரூ.145க்கு கிடைத்தது)
ஒரு காக்கிசட்டை பேசுகிறது – A.P. முகம்மது அலி I.P.S (Retrd) (புத்தக பூங்கா. ஸ்டால் 415)
பின் நவீனத்துவம் என்றால் என்ன ? – எம்.ஜி.சுரேஷ் – (புதுப்புனல். ஸ்டால் 442)
செம்மொழித் தமிழ் – ஆய்வுக்கு இன்று என்ன தேவை - (புதுப்புனல். ஸ்டால் 442)
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – (டிஸ்கவரி புக் பேலஸ். ஸ்டால். 334)

நாள் – 5 (9.1.12)

போகவில்லை

நாள் – 6 (10.1.12)

திங்களன்று (9.1.12) புத்தகக் கண்காட்சிக்கு செல்ல முடியாததால், நேற்று (10.1.12) தலைவலிக் கூட பொருட்படுத்தாமல் புத்தகக கண்காட்சிக்கு சென்றேன். பூவுலக நண்பன் ஸ்டாலில் இரண்டு புத்தகம் வாங்கிவிட்டு சென்றுக் கொண்டு இருக்கும் போது லக்கி, ஆதிஷா, நேசமித்திரனை சந்தித்தேன். தலைவலியில் எந்த புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தேனோ எதுவுமே ஞாபகமில்லை. ஆதிஷா பேசும் போது ‘சாஹித்தியா’ சென்ற சொன்னவுடன் வாங்க நினைத்த இரண்டு புத்தகம் நினைவுக்கு வந்தது.

புத்தகங்களை பார்க்க பார்க்க தலைவலியை மறந்துவிட்டேன். மெல்ல ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்துக் கொண்டு கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு சென்றேன். கம்யூனிச புத்தகத்தைப் பற்றி பிரசன்னா பதிவை படித்தவுடன் கண்டிப்பாக இந்த புத்தக (பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்) வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பிறகு சாருவின் "எக்ஸைல்" மற்று "வில்லாதி வில்லன்" புத்தகங்களையும் வாங்கினேன்.

பல வருடங்களாக சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறாமல் இருந்த கௌரா ஏஜென்ஸிஸ் இந்த முறை சீதை பதிப்பகம் பெயரில் நான்கு ஸ்டால் (F - 4) எடுத்துள்ளார்கள். அரசுடையாக்கப்பட்ட எல்லா புத்தகங்கள் இங்கு கிடைக்கும். குறிப்பாக கல்கி, அண்ணா படைப்புகள் தரமான காகிதத்தில், மலிவான விலையில் உள்ளது. நான் கல்கியின் "தியாக பூமி" வாங்கினேன்.

அதற்கு மேல் நடக்க முடியாததால், டிஸ்கவரி புக் பெலஸ் ஸ்டாலுக்கு சென்றேன். அங்கு இரண்டு புத்தகம் எடுத்த வாசகரை, என் வாய் திறமையால் பத்து புத்தகம் வாங்க வைத்தேன். (எனக்கே தெரியாமல் என்னுள் ஒரு மார்க்கெட்டிங் மனிதன் ஒழிந்திருக்கிறான்).

வேடியப்பன் தினமும் தன் ஸ்டாலுக்கு வர சொன்னார். இன்று வேடியப்பன் கடையில் (334) புத்தக வெளியீட்டு விழா நடப்பதால் கண்டிப்பாக செல்ல வேண்டும்.

இயக்குனர் வெற்றிமாறன், கவிஞர் தேவந்திர பூபதி வருகிறார்கள். வாசகர்கள் அவசியம் வருக !!!

வாங்கிய புத்தகங்கள்

கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் ( Stall. 71)
ஈழம் : பொது ஜன வாக்கெடுப்பு - ஜெ.பிரபாகரன் ( Stall. 71)
கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி (Stall 166-167 )
கு. அழகிரிசாமி கதைகள் - கு.அழகிரிசாமி (Stall 166-167)
தூக்குக் கொட்டையிருந்து ஒரு முறையீட்டு மடல் - அ.ஞா.பேரறிவாளன்.
பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - அரவிந்த் நீலகண்டன் (F-007)
வில்லாதி வில்லன் -பாலா ஜெயராமன் (F-007)
எக்ஸைல் - சாரு நிவேதிதா (F-007)
இந்தியா ஒரு வல்லரசு - அருந்ததி ராய் (Stall 221-222)
தியாக பூமி - கல்கி (F-4)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails