வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 4, 2012

தேசிய விலங்கு : பாலா

ஒரு கவிதை நூலுக்கு அதிகம் பேர் அணிந்துரை எழுதிய பிரிவு என்று கின்னஸ் சாதனையில் இருந்தால் கண்டிப்பாக இந்த நூலை பரிந்துரை செய்யலாம்.

வைகோ
பழ.நெடுமாறன்
காசி ஆனந்தன்
அறிவுமதி
சீமான்
வே.ஆனைமுத்து
கொளத்தூர் மணி
தியாகு
வ.கௌதம்
பாரதி கிருஷ்ணகுமார்
மற்றும்
நக்கீரன் கோபால்

- என்று 11 பேர் அணிந்துரை எழுதியுள்ளார்கள். கவிதைகளை விட அணிந்துரை படிக்கவே அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆண்டு மலர் படிக்கும் எண்ணம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம் எந்த கவிதையும் குறை சொல்லுவதற்கு இல்லை.

பிரபாகரனின் அட்டைப்படம், தலைப்பும் இந்த கவிதை நூலை வாசிக்க வைத்தது. நக்கீரனின் அவ்வபோது ‘நச்’ கவிதைகளில் பாலா எழுதியுள்ளார். அதன் பிரபதிபலிப்போ என்னவோ ஒவ்வொரு கவிதைகளும் ‘நச்’ என்று ஐந்து, ஆறு வரிகளில் எழுதியுள்ளார்.

முன்னொரு காலத்தில்
முறத்தால்
புலி விரட்டிய
தமிழச்சி…
இன்று புலியாகிவிட்டாள்…!

ஈழ கனவு சிலருக்கு பேச்சாகவும், வீரமாக வரும்... தோழர் பாலா கவிதையாக வந்துள்ளது. கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பிணம் தின்னும் தேசம்’ ஈழ கவிதை நூலுக்கு பிறகு நான் வாசித்த ஈழ கவிதை நூல் இது தான்.

தமிழர்களின் ஒற்றுமையின்மை ஒற்றுமையின் சின்னமான காக்கை வைத்தே சொல்லியிருக்கிறார்.

காக்கைகள்
காலி செய்து விடும்
தமிழகத்தை விட்டு,
ஒற்றுமையில்லாத
தமிழனை பார்த்து
ஒரு வேளை நாமும்
கெட்டுப் போவோம் என்று… !

இனப்படு கொலையில் ராஜபக்சே ஹிட்லருக்கு குருவாக இருக்கிறார் என்பதை இந்த வரி கவிதைகள் சொல்லும்.

இனவெறியில்
ஹிட்லருக்கு கொடுக்கலாம்
ராஜபக்சே
பட்டம்…!

ஹிட்லரும் வல்லரசு உதவியோடு இனப்படு கொலை செய்திருந்தால் அவருக்கு இந்த உலகம் கதாநாயகன் பட்டியலில் சேர்த்திருக்கும். இன்று ராஜபக்சேவுக்கு தெரிந்தது ஹிட்லருக்கு தெரியாமல் போனது.

கள்ளத்தோனி இறந்த உயிர்களை எட்டு வார்த்தை கவிதையில் உருக்கமாக சொல்லியிருக்கிறார் பாலா.

படகுகளில்
சில சமயம்
சவாரி
பல சமயம்
சமாதி…!

ஒரு முறை வனப்புலி அழிந்து வருவதை பற்றின ஆவணப்படம் ஒன்று அறிவுப்பு பார்த்தவும், என் நண்பர் ஒருவர் ‘விடுதலைப் புலிகள்’ பற்றின படமா ? என்று கேட்டார். இந்த கேள்வி கேலியாக இருந்தாலும், அதனுள் ஒழிந்து இருக்கும் உண்மை எவ்வளவோ இருக்கிறது.

வனப்புலிகளுக்காக
வருந்தும் தேசமே
எம்
இனப்புலிகள்
அழிப்பிற்கு மட்டும்
உன் துப்பாக்கி
உதவியோ ?

காட்டில் மான் வேட்டை அனுமதியில்லை. புலிகளை கொன்றால் சட்டப்படி குற்றம். கடலுக்கு மீன் பிடிக்க 45 நாட்கள் தடைக்கூட உள்ளது. ஆனால், மூன்று வருடங்களாக இடைவேளை இல்லாமல் ஈழ தமிழர்கள் கொடுமைப்படுத்து வருதை மட்டும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழர்கள் !!!

மனிதர்கள் மதம் மாறும் மத்தியில் கடவுளை மதம் மாற்றியது போன்ற கற்பனையை கண்டிப்பாக பாராட்டலாம்.

கண்ணை மூடிக்கிடக்கும்
புத்தனே !
கண்களைத் திற
உன்னை
யுத்த மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்

அதிக பக்கங்கள் கொண்ட அணிந்துரையும், விலையும் மட்டுமே என்னை முகம் சுழிக்க வைத்தது. மற்றப்படி இந்த கவிதைகளை அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம். ஒவ்வொரு கவிதைகளும் ஈழ உணர்வை பதிவு செய்ததோடு இல்லாமல் வாசகர்களையும் உணர வைத்திருக்கிறார்.

***
நூல் விபரம் :
 
தேசிய விலங்கு
பாலா

பக். 62, விலை. ரூ.60/-
விசை பதிப்பகம்
98652 80440

1 comment:

தமிழ்மகன் said...

USB Diskய் பாதுக்கப்போம்!

http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

LinkWithin

Related Posts with Thumbnails