வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 8, 2013

RAW (6) : சொந்த விமானத்தை எரித்த இந்தியா -2

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது ஜின்னாவிடம் கேட்கப்பட்ட கேள்வி, “ இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி தேசம் உருவானால், ஏதேனும் ஒரு முன்றாவது நாடு இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தால், பாகிஸ்தான் இராணுவம் என்ன செய்யும்?” என்று கேட்டனர்.

அதற்கு, ஜின்னா “எதிரிகளைத் தோற்கடிக்க, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவோடு கைகோர்த்து போரிடும்” என்றார். இன்றைய அரசியல் சூழ்நிலை இதற்கு நேர் எதிராக இருக்கிறது. உனக்கு இந்தியாவை பிடிக்காதா, அப்படி என்றால் எனக்கு நீ நண்பன் என்ற தத்துவத்தில் தான் பாகிஸ்தான் நடந்துக் கொள்கிறது.



பங்களாதேஷ் தேசத்தை உருவாக்க இந்தியா உதவியது என்பது சரித்திரம் மட்டுமல்ல. ரா என்ற உளவு நிறுவனத்தை உருவாக்கிய வெற்றி என்றும் கூட சொல்லலாம். காரணம், இந்தியா பாகிஸ்தான் என்ற ஒற்றை எதிரியை மட்டும் சமாளிக்கவில்லை. தெற்காசியப் பகுதியில் இந்தியா மாபெரும் சக்தியாக வளர்வதை அனுமதிக்கக் கூடாது என்ற பார்வையில் இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனுக்கும், சீனா அதிபர் மா சே துங் இடையிலான ரகசிய உறவு அப்போது தான் உதயமானது. இந்த தொடர்புகளுக்கு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்களும் உதவினார்கள். இந்திய வடகிழக்கு பகுதியில் கலவரத்தை உருவாக்கி இந்திய இராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சீனா உதவியது. கிழக்கு பாகிஸ்தானில் இந்தியா வன்முறையை தூண்டிவிடுகிறது என்று சர்வதேச அளவில் எதிர்ப்பலைகளும் அமெரிக்கா பரப்பியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தியா வெற்றிப்பெற்றுயிருக்கிறது.

ஐ.நா சபையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தானில் வன்முறையை தூண்டிவிடுவதாக அமெரிக்க, சீனா தீர்மானம் கொண்டு வந்தப் போது ரஷ்யா தனது “வீட்டோ” அதிகாரத்தை பயன்படுத்தி அதை முறியடித்து இந்தியாவுக்கு உதவியது. இதனால், அமெரிக்கா இந்தியாவை ரஷ்யாவின் நட்பு தேசமாக பார்த்ததோடு இல்லாமல், இந்தியாவை பற்றின ரகசிய தகவல்களை சேகரிக்க தனது உளவுப்பிரிவையும் பயன்படுத்தியது.

இந்தியாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த உளவு நிறுவனம் நினைத்தாலும் ஒரு தேசத்தை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. தகவலை சேகரிக்க முடியும். அதை செயல்படுத்த வழிகள் வகுக்க முடியும். செயல்படுத்த ரகசியமாக முறைகளை கையாள முடியும். ரா உளவுத்துறையும் அதை தான் செய்தது.

 1971ல் மேற்கு பாகிஸ்தான் எதிராக யுத்தத்தில் ரா கிழக்கு பாகிஸ்தானுக்கு செய்த உதவிகள் :-
1. அரசுக்கும் இராணுவத்திற்கு தகவல்களை சரியான நேரத்தில் கொடுத்தது.
2. வங்கதேசப் போராட்ட வீரர்களுக்கு ரகசியமான பயிற்சி முகாமில் பயிற்சி அளித்தது.
3. மேற்கு பாகிஸ்தானில் பணியாற்றிய வங்க மொழி பேசும் அரசு ஊழியர்களை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வங்கதேசப் போராட்ட வீரர்களுக்கு உதவுவதாக கூறி ரகசிய தகவல் பெற்றது.
4. கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்படும் வங்காளிகள், இந்தியாவுக்கு அகதிகளாக வெளியேறுபவர்கள் போன்றோர்களை ஊடகத்திற்கு முன் நின்றுத்தி மேற்கு பாகிஸ்தான் எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது.

அதுமட்டுமில்லாமல், மேற்கு – கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையான ரகசிய தகவல் பரிமாற்றத்தை இந்தியாவின் மானிட்டரிங் பிரிவு வெகு சிறப்பாக இடைமறித்து கேட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொலைத்தொடர்பில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் ரகசிய குறியீடுகள் சர்வ சாதாரணமாக உடைக்கப்பட்டன. இன்னும் சில தகவல்கள் ராவை தேடி வந்துக் கொடுத்தார்கள். தங்களிடம் இருக்கும் தகவலை இந்திய உளவுத்துறைக்கு கொடுப்பது தங்கள் கடமை என்று வங்க தேச மக்கள் முன்வந்தார்கள்.

பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிக்கு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பங்கு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. வங்கதேசத்திற்கு விடுதலையை இந்தியா வாங்கித் தந்தது என்று சொல்லுவது தவறு. இந்தியா உதவியது என்று தான் சொல்ல வேண்டும். சுதந்திரமாக இருக்கும் ஆசையும், உறுதியும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு இல்லாவிட்டால் அவர்களால் இதை அடைந்திருக்க முடியாது.

1968ல் உருவான ரா, இரண்டரை வருடத்தில் ரகசிய நடவடிக்கைகளில் திறமைப் பெற்றுவது என்பது குறைவான காலம். இருந்தும் ரா அமைப்பு மிக சிறப்பாக செயல்ப்பட்டது.

அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளின் மறைமுக பகையையும், பாகிஸ்தான் என்ற நேரடி எதிரியை சமாளித்து தான் இந்திய வங்க தேசத்திற்கான போரில் வெற்றிப்பெற்றது.

'பங்களாதேஷ்' என்ற தேசத்தை உருவாக்கியதோடு பிரச்சனை முடிந்ததுவிட வில்லை. அமெரிக்காவின் நிக்ஸன் நிர்வாகத்தின் நல்லாசியுடன் யாஹ்யா இந்தியாவை சிதறடிக்கும் ரகசிய முயற்சியில் இறங்கியது. அதற்கு தோதாக பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ என்ற தனி தேசக் கோரிக்கை இருந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails