வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 16, 2013

RAW (7) : காலிஸ்தான் - சீக்கியர்களின் கனவு தேசம்

“கோபம் என்பது இருளாய்யும். அழிவையும் பிரயோகிப்பவர் மீதே திரும்பச் செலுத்தும் ! தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்."
-குருநானக் தேல், ராக் கான்ரா, 1299

“பஞ்சாப் இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” என்று பெயர் பெற்ற மாநிலம். வடமேற்குப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பில் ஒரு மாதம் விளைவதை ஒரு வருடம் இந்தியர்கள் சாப்பிடலாம் என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் அவர்களது உழைப்பு இருந்தது. தெற்கே ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களும், கிழக்கே உத்தராஞ்சலும், வடக்கே ஜம்மு மற்றும் காஷ்மீரும், மேற்கே பாகிஸ்தானும் உள்ளது.

உணவுக்கு மட்டுமல்ல, அவர்கள்து வீரமும் உலகறிந்தது. அந்த வீரமும், அவர்களது கோபமும் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் போது தான், இந்திய பாதுகாப்புக்கு சவாலானது. இன்று, இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியா எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு என்பதுகளிலும், தொன்னூறு தொடத்திலும் சீக்கிய தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டது. இந்தியாவை எதிர்த்து பேசும் சீக்கியனை ‘காலிஸ்தான் போராளி’ என்ற சந்தேகத்துடன் பார்த்தது.

‘காலிஸ்தான்’ சீக்கியர்களின் கனவு தேசம். காலிஸ்தான் என்றால் தூய்மையின் தேசம் என்று பொருள். சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை ‘காலிஸ்தான்’ என்று தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்பது தான் காலிஸ்தான் போராளிகள் கோரிக்கை.

இந்திய அரசாங்கம் இவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவோ, உரிமைகளை மறுக்கும் அளவிற்கு நடந்துக் கொண்டதில்லை. இந்திய பாதுகாப்பும் முக்கிய பங்காக இராணுவம், ராவில் சீக்கிய கணிசமானவர்கள் பணிபுரிகிறார்கள். அப்படி இருந்தும் இவர்களுக்கு ‘தனி நாடு’ கோரிக்கை எப்படி தோன்றியது ?

1909ல் ஹிந்து – முஸ்லீம் மத அடிப்படையில் தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டும் போதே லேசாக சீக்கியர்களுக்கு ‘தனி தொகுதி’ என்ற எண்ணம் தோன்றியது. 1944ல் ஜின்னாவுடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியாவின் வட மேற்கில் ( பஞ்சாப்) மற்றும் வடகிழக்கில் முஸ்லிம்கள் வாழும் பகுதி, சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் விருப்படி தனிநாடாகவோ அல்லது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்தனர். அப்போது, ‘ஆஸாத் பஞ்சாப்’ என்ற தனி நாடு வேண்டுமென்று அகாலி தள் தலைவர் தாரா சிங் அறிக்கை விட்டார். 1946 ஜூலையில், ‘இந்தியாவின் வடக்குப் பகுதியில் சீக்கியர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க ஒரு தனி பகுதி ஒதுக்கப்படும்’ என்று நேரு உறுதி அளித்தார். ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை யுத்தம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என்று ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். அந்த சமயத்தில் சீக்கியர்களுக்கு தனி தேசம் அவர்களுக்கும், இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று கைவிடப்பட்டது. அது அகாலி தளத்தினருக்கு அதிருப்தியாக இருந்தது.

பஞ்சாப்பில் நடந்த பொது தேர்தலில் 1952, 57, 62 ல் காங்கிரஸ் தான் வெற்றிப் பெற்றது. அதுமட்டுமில்லாமல், ‘தனி தேசம்’ கேட்கும் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்படும் என்று நேரு அறிவித்திருந்தார் (தென்னகத்தில், ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கை இதனால் கைவிடப்பட்டது). இதனால், ‘பஞ்சாபி சுபா’ என்ற தனி மாநில கோரிக்கையை முன் வைத்தனர்.

1966ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ் என்று மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, ‘பஞ்சாபி சுபா’ கோரிக்கை வெற்றிப் பெற்றது. அதன் பின் அங்கு நடந்த தேர்தலில் அகாலி தள் தலைமையிலான கூட்டனி தான் வெற்றிப் பெற்றது. ஆனால், அவர்களால் முழுமையாக ஆட்சி செய்ய முடியவில்லை.



அகாலி தளத்தினரை ஒடுக்க பிந்த்ரன்வாலே என்ற தீவிர சீக்கிய மதவாதியை காங்கிரஸ் பயன்படுத்த நினைத்தது. சீக்கிய மத போதகர். சீக்கியர்களின் மறுமலர்ச்சிக்கு காரணமாக கருதப்பட்டவர் தான் பிந்த்ரன்வாலே. இவர் காலிஸ்தான் கொள்கையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவுமில்லை. .அதுமட்டுமில்லாமல் இவர் அகாலி தளத்தினத்தின் செயல்பாடுகளோடு ஒத்துப்போகவில்லை.

காங்கிரஸ் ஆதரவாக 1980ல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அகாலி தள் தங்கள் செல்வாக்கை உயர்த்த நினைத்து செயல்பட்டது எல்லாம் தோல்வியில் முடிந்தது. பிந்த்ரன்வாலே ஆதரவாளர்கள் அவர்களை ஏளனமாக பார்த்தனர். 

இருவருமே பொற்கோயிலை மையமாகக் கொண்டு அரசியலில் ஈடுப்பட்டனர். ‘யார் பெரியவன்’ என்று இவர்களுக்குள் நடந்த சண்டையில் பல வன்முறை சம்பவங்கள் நடந்தது. இதில், பிந்த்ரன்வாலே செல்வாக்கு உயர்ந்தது. பின்னாளில், தன் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பிந்த்ரன்வாலே 'காலிஸ்தான்' கொள்கை கையில் எடுக்க வேண்டியதாக இருந்தது.

சீக்கியர்களில் ஒரு பிரிவாக நிரங்காய்கள் தங்களின் மதகுரு பிறந்த நாளை கொண்டாடும் போது பிந்த்ரன்வாலே தனது ஆதரவாளர்களுடன் அவர் மீது தாக்குதல் நடத்தினார். சீக்கிய தீவிரவாதத்தின் முதல் தாக்குதல் என்று அப்போது தெரியவில்லை. அதன் பின், பல வன்முறைகள் பிந்த்ரன்வாலே ஆதரவாளர் ஈடுப்பட்டனர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், பிந்த்ரன்வாலே எதிராக எழுதிய லாலா ஜெகத் ( பஞ்சாப் கேசரி ஆசிரியர்) அவரது ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டது, அவரை கைது செய்ய வேண்டியதாக இருந்தது. 

பிந்த்ரன்வாலே செப்டம்பர் 20ம் தேதி ஒரு மணிக்கு சரணடைவதாக கூறினார். கைதாகவதற்கு முன் ஒரு மதக்கூட்டத்தை நடத்தவும் அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை ஏற்க்கப்பட்டது. அவர் கூறிய நேரத்தில் போலீஸ் கைது செய்ய சென்ற போது, அவரது ஆதரவாளர்கள் கையில் துப்பாக்கி, வாள், ஈட்டி என்று பல ஆயுதங்களுடன் திரண்டு இருந்தனர். போலீஸ் பிந்த்ரன்வாலே ஆதரவாளர்களை தாக்க தொடங்க, அங்கு பெரிய கலவரம் வெத்தது. இதில் 11 காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.

அன்று மாலையே ஜலந்தர் மார்கெட்டில் மூன்று ஹிந்துக்கள் சீக்கியர்களால் கொல்லப்பட்டார்கள். கைதான பிந்த்ரன்வாலேவும் சிறைசாலையில் அடைக்காமல் அரசு மாளிகையில் வைக்கப்பட்டார். அடுத்த 25 நாள்களில் பல வன்முறைகள் சம்பவங்கள் நடந்தது. செப்டர் 29ல் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு பிந்த்ரன்வாலேவை விடுதலை செய்ய மிரட்டல் விடுத்தனர்.

அக்டோபர் 15 அன்று , பிந்த்ரன்வாலே விடுதலை செய்யப்பட்டார். லாலாஜி கொலை வழக்கில் பிந்த்ரன்வாலேவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அப்போதைய உள்துறை அமைச்சர் ஜையில் சிங் தெரிவித்தார். பிந்த்ரன்வாலே இந்தியாவுக்கு பெரிய அச்சுருத்தலாக இருப்பார் என்பது அப்போது தெரியாமல் போனது.

மேம்போக்காக பார்த்தால், உள்துறை விவகாரமாக தான் தெரியும். சீக்கியர்கள் என்ற மதவாதிகள் செய்ய வன்முறை தாக்குதல். போலீஸ், சிபிஐ அதிகப்படியாக ஐ.பி அமைப்பு கவனிக்க வேண்டும். இதில் பெரிய அளவில் அச்சுருத்தல் இல்லை என்ற தோன்றும். ஆனால், ரா இவர்களை உளவு பார்க்க வேண்டிய அவசியமாக இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் வலுவாக இருந்தது.

1947ல் இந்திய பிரிவினைப் போது சீக்கியர்கள் பலர் வெளிநாடுகளில் குடியெறினர். குறிப்பாக, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பல சீக்கியர்கள் சென்றனர். அங்கு பணியாற்றுபவர்கள் சந்தித்த மிக பெரிய சவால் தாடியை மழிக்க வேண்டும் மற்றும் டர்பன் அணியக் கூடாது என்று இருந்தது. குறிப்பாக, பிரிட்டன் போக்குவரத்து நிறுவனத்தில் இப்படி வற்புறுத்தினர். இந்திய தூதரகத்திடம் முறையிட்ட போது, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு இந்தியா தலையிடுவதில்லை என்றது.

வெளிநாட்டில் வாழும் யூத மக்களின் மத உணர்வுகளுக்கு குறுக்கிட்டு வந்தால், இஸ்ரேல் அந்த நாட்டோடு பேசி பிரச்சனை தீர்க்கும். ஆனால், இந்தியா அப்படி நடந்துக் கொள்ளவில்லை என்பது சீக்கியர்களுக்கு வருத்தம் தந்தது. யூத மத நம்பிக்கை தார்மீக பொறுப்பு ஏற்க்கும் இஸ்ரேல், இந்தியா தங்கள் மத நம்பிக்கையை மதிக்கவில்லை என்று நினைத்தனர்.

 பாகிஸ்தானில் உள்ள 'நான்கானா சாஹிப் குருத்வாரா' போன்ற சீக்கியப் புனிதத் தலங்களுக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் சீக்கியர்கள் சென்று வர இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். ஆனால், இந்தியா பேச்சு வார்த்தை நடத்த தயக்கம் காட்டியது. இதனால், காலிஸ்தான் என்ற தனி தேச பிரச்சாரத்தை வெளிநாட்டில் வாழும் சீக்கியர்கள் ஆதரத்தினர். ஆதரவு குரல் மட்டுமில்லாமல் நிதி உதவி செய்தார்கள். இதனை, ரா கவனிக்க வேண்டியதாக இருந்தது.

அடுத்த காரணம், பிந்த்ரன்வாலே பின் இருக்கும் பாகிஸ்தானின் உளவுத்துறையின் ஐ.எஸ்.ஐ ஆதரவு. இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்கலால் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டதை மறந்து, பிந்த்ரன்வாலே பாகிஸ்தானோடு கைகோர்த்துக் கொண்டார்.

முக்தி ஃபௌஜ் என்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து கிழக்கு பாகிஸ்தானில் இந்தியாவின் ரா என்ன செய்ததோ, பிந்த்ரன்வாலேவைக் கொண்டும், மற்ற சீக்கிய தீவிரவாதிகளைக் கொண்டும் பஞ்சாப்பில் பாகிஸ்தான் செய்ய நினைத்தது. அந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் கே – கே ( காலிஸ்தான் – காஷ்மீர் ) என்று ஐ.எஸ்.ஐ பெயர் வைத்தனர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails