வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 29, 2013

பெரியார் ரசிகன்


மூன்று வருடங்களுக்கு முன் எழுதிய நாவல். “அந்த மூன்று பெணகள்” என்ற பெயரில் எனது வலைப்பதிவில் தொடராக எழுதியிருந்தேன். முழுமையாக கூட பதிவில் போடவில்லை. தொடரை படித்து பார்த்த நண்பர் உதயகண்ணன் தனது பதிப்பகத்தில் வெளியிட விருப்பம் தெரிவித்தார். அப்போது நானே வெளியிடுவதாக கூறியிருந்தேன். ஆனால், மற்ற வேலைகளுக்கு நடுவே எனது புத்தகத்தை பற்றி யோசிக்க நேரமில்லை.

சமீபத்தில், இந்த நாவலைப் பற்றி உதயகண்ணன் மீண்டும் கேட்க, என்னால் மறுக்கமுடியவில்லை. நாவலின் தலைப்பை “பெரியார் ரசிகன்” மட்டும் மாற்றி வெளியிடுங்கள் என்றேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

பெரியார் ரசிகன்.
 உதயகண்ணன் பதிப்பகம் விரைவில்....

Wednesday, August 21, 2013

பதிவர் திருவிழா அழைப்பிதழ்..அனைவரும் வருக !



சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என கடந்த வார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.நிர்வாகக் குழுவின் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.பணத்தை செலுத்திவிட்டு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும் tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA.
S Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam ,
Chennai, City Pin - 600093
Contact :044- 24849775

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

நன்றி..

ஒருங்கிணைப்புக்குழு , தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

Tuesday, August 13, 2013

பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ

உலகின் தலை சிறந்த நாவல். வாசித்திக்க வேண்டிய நாவல். மனிதனின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் கதை. என்று எந்த பெரிய வார்த்தைகள் மூலம் இந்த புத்தகத்தை அலங்கரிக்க போவதில்லை. மிக சிறந்த நாவல் பட்டியலிலும் இது இடம் பெற போவதில்லை. அதற்கு மாறாக உங்கள் ஆள் மனதை எதோ ஒன்று செய்யும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்.



முன்னால் இராணுவ வீரனான ஹெர்வே ஜான்கர் தன் புதிய தொழிலுக்கான பட்டு வியாரத்துக்காக தன் மனைவி ஹெலனை விட்டு பிரிந்து உலகின் கடைசியான ஜப்பானுக்கு செல்கிறான். அங்கு, விலைமாதுவான பிளான்ச்சி என்ற பெண்ணை பார்க்கிறான். அவளை தொடாமலே அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளிடம் இருந்து ஜப்பானிய மொழியில் ரகசியமான கடிதம் ஜான்கருக்கு கிடைக்கிறது. அந்த கடித்தத்தின் வார்த்தைகள் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த கடிதம் அவனை மீண்டும் கடல் கடந்து செல்ல வைக்கிறது. அந்த கடிதத்தின் அர்த்தம் புரிந்ததும், ஹெர்வே ஏற்பட்ட குற்றவுணர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ஆரம்பத்தில், யாரோ ஒருவரின் டைரிக் குறிப்புகளில் அனுமதிப் பெற்று கொண்டு நுழைந்த உணர்வு இருந்தது. ஹெர்வே பயணிக்கும் போது, நாம் அவனுடன் பயணிக்கவில்லை. ஆனால், அவனுள் பிளான்ச்சி மீது காதல்/காமம் மட்டும் நம்மிடம் தோன்றிவிடுகிறது. பிளான்ச்சி கடிதம் படிக்க படிக்க…. நாமும் ஹெர்வேவாக மாறிவிடுகிறோம். கடிதத்தின் ரகசியத்தை பிளான்ச்சி சொல்லும் ஹெர்வேவுக்கு இருக்கும் நமக்கும் வருகிறது.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். குறிப்பாக கீழ் இருக்கும், வாசகங்கள் நம்மை பாதிப்புள்ளாக்குகிறது.

உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறவைகளைக் கூண்டில் நிரப்பு. உனக்கு நல்லது ஏதாவது நடக்கும் நாளில் அவற்றைத் திறந்து விட்டு அவை பறந்து போவதை பார்.

என்னால் அவனை தடுக்க முடியாது. போக வேண்டும் என்று அவன் வற்புறுத்தும் போது என்னால் செய்யக்கூடியது அவன் திரும்பி வருவதற்கான இன்னொரு காரணத்தை அவனுக்குக் கொடுப்பதுதான்.

போர் விலையுயர்ந்த விளையாட்டு. உங்களுக்கு நான் தேவை. எனக்கும் நீங்கள் தேவை. 

ஏதோ ஒன்றைத் தீவிரமாக விரும்பி அதற்காக உயிரை விடுவதை நான் ஒரு போதும் அனுபவித்ததில்லை

நம் அருகில் இருப்பவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு, காதலை அவர்கள் மரணத்திற்கு பிறகு தெரிந்துக் கொள்ளும் வலியைத் தான் இந்த கதை உணர்த்துகிறது.

இந்நாவல் பிரெஞ்சு – கனடிய இயக்குநரான ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் ‘SILK’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.


நூல் வாங்க 

விலை. ரூ. 95. பக். 120
காலச்சுவடு பதிப்பகம்

Monday, August 12, 2013

லிங்கூ (கவிதையும் ஓவியமும்) - லிங்குசாமி

சமிபத்தில் கவிதை புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்து வருகிறேன். விதி விளக்காக ஹைக்கூ கவிதைகளை மட்டும் வாசிக்கிறேன். மூன்று வரியில் கொடுக்கும் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹைக்கூ என்ற வார்த்தையை மாற்றி புதிய வார்த்தையாக ‘லிங்கூ’ என்று லிங்குசாமி பெயிரிட்டதால் என்னை புத்தகம் வாசிக்க வைத்தது.

பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதைகள். ஆர்வக் கோளாறுகள் முதல் கவிதை நூலாக காதல் கவிதைகளை படம் போட்டு வெளியிட்டு சக்கைப் போடு போட்டது ஒரு காலம். இப்போது, எல்லோரும் படமும், காதல் கவிதகளும் கொண்டு வருவதால் இந்த நூல் அதில் இருந்து வேறுபடவில்லை. படத்திற்கு மாறாக புரியாத ஒவியத்தை லிங்குசாமி வரைந்திருக்கிறார். மற்றப்படி முதல் கவிதை நூல் சராசரி கவிஞனிடம் இருந்து எப்படி படைப்பு வருமோ அப்படி தான் இயக்குனர் லிங்குசாமியிடம் இருந்து வந்திருக்கிறது.



இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் காதல் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை இது மட்டும் தான்.

சுஜாதா
கவிதா பத்மா உஷா 
அப்புறம் கீதா 
இவை எல்லாம் 
வெறும் பெயர்கள் அல்ல.

சமூக கவிதைகள் ஹைக்கூ இலக்கணத்தில் எழுதவில்லை என்றாலும், சிறப்பாக எழுதியிருக்கிறார். குறிப்பாக ஒரு சில கவிதைகள்.

இஸ்திரி போடும் தொழிலாளியின் 
வயிற்றில் சுருக்கம் 

பூச்சி மருந்தில் பூச்சி 
உயிரோடு 

அசோகர் இத்தனை மரங்களை நட்டார் 
அதில் ஒன்று கூட போதி மரமில்லையா 

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் 
பிச்சைக்காரன். 

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில் 
நியூட்டன் 

லிங்கு சார், படத்திற்கு ‘சுபம்’ கார்ட் போட்ட பிறகு ஆடியன்ஸ் தியேட்டரில் இருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் புத்தகம் முடிந்த பிறகு, பத்தி பேர்கள் அறிமுக உரையை, இருபது பக்கங்கள் மேல் இடம் பெற்று இருக்கிறது. இதை விகடன் பிரசுரம் சரிப்பார்த்திருக்க வேண்டும். பாராட்டிய பிரபலங்கள் திரும்ப திரும்ப நான்கைந்து கவிதைகளே சொல்வதால் எல்லா கவிதைகளும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது.

ஒரு அறிமுக எழுத்தாளருக்கு இருக்கும் ஆர்வம் தான் இயக்குநர் லிங்குசாமியிடம் தெரிகிறது. வெற்றிப்பட இயக்குநருக்கு இருக்க வேண்டிய முதிர்ச்சி அவர் எழுதிய புத்தகத்தில் தெரியவில்லை.

விகடன் மார்க்கெட்டிங் திறமையால் நான்கு பதிப்புகள் வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறந்த கவிதை புத்தகம் என்று சொல்ல முடியாது. 

இணையத்தில் வாங்க.....

விலை. 90, பக் : 120
விகடன் பிரசுரம்

Monday, August 5, 2013

சார்லி சாப்பிளின் “A Dog’s Life”

தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கை நாய்யின் அன்றாட வாழ்க்கையை விட மிக வேதனையானதாகவே இருக்கிறது. குப்பையில் உணவை தேடும் நாயின் சராசரி குணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதே உணவை ஒரு மனிதன் பசிக்காக தேடினால் அவனை பரிதாபமாக கூட பார்க்கப்படுவதில்லை. குப்பைகளை கலைத்துப் போடும் தேச விரோதியாக தான் தெரிகிறான். அவனின் பசியை விட தெருவின் சுத்தம் கேட்டு விட்டதே என்று பலரின் எண்ணமாக இருக்கிறது. இப்படி தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக எண்பது ஆண்டுகள்ளுக்கு முன் தனது “A Dog’s Life” மூலம் பதிவு செய்தவர் சார்லி சாப்பிள்.



தெருவோரம் வாழும் சாப்பிளின் பல நாய்களுக்கு நடுவில் மாட்டி தவிக்கும் ஒரு குட்டி நாயை காப்பாற்றுகிறார். ஓடிய கலைப்பில் நாய்யும், சாப்பிளும் ஒரு உல்லாச விடுதிக்குள் நுழைய அங்கு வேலை செய்யும் பெண்ணை பார்த்து மயங்குகிறார். அவளுக்கு விருப்பமில்லாத வேலையாக இருந்தாலும், தன் வேலைக்காக அவரிடம் பேசுகிறாள். ஆனால், பணம் இல்லாத காரணத்தால் சாப்பிளின் அந்த உல்லாச விடுதியில் இருந்து விரட்டப்படுகிறார். அந்த பெண்ணின் வேலை பரிக்கப்படுகிறது.

வெளியே வந்த சாப்பிளின், நாய்யும் தெருவில் உறங்குகின்றனர். நாய்யின் உதவியால் சாப்பிளுக்கு பண பர்ஸ் கிடைக்கிறது. அந்த பணத்தை கொண்டு மீண்டும் அந்த உல்லாச விடுதிக்கு செல்கிறார். அப்போது அவன் பார்த்த பெண் தன் துணிமணிகளை எடுத்து கிளம்புவதாக இருந்ததாள். அந்த பெண்ணை விடுதியின் வாடிக்கையாளராக உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் தரச் சொல்கிறான். தன்னிடம் பணம் இருப்பதை காட்டுகிறான். அப்போது, அங்கு இருக்கும் சில கயவர்களால் பரிக்கப்படுகிறது.

மீண்டும் அந்த பணத்தை அடைந்து, அந்த பெண்ணுடன் தோட்டம் அமைத்து உல்லாசமாக வாழ்க்கிறான். அவனுடன் இருந்த நாய்யும் தன் குட்டிகளுடன் உல்லாசமாக ஒரு குழந்தைப்போல் சாப்பிளின் வீட்டில் இருப்பதை படம் முடிகிறது.

சாப்பிளின் உலக அளவில் ஏன் பேசப்படுகிறார் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. சாப்பிளின் முதல் தேசியப்படம் இது தான். சினிமாக்காரர்களுக்கு உலக இயக்குனர்கள் பலரை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சாமான்யனுக்கு கூட தெரிந்த இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் சார்லி சாப்பிள்.

ஆரம்பக் காட்டியிலே, தன்னையும் நாய்யும் ஒப்பிட்டு இரண்டு பேரும் ஒரே வாழ்க்கை வாழ்வதை சுட்டிக் காட்டிவிடுகிறார். அதேப் போல், அவர் வேலைக்கு செல்ல விரும்பதாவனாக கூட காட்டவில்லை. வேலை தேடும் போட்டியில் வெற்றி பெற முடியாமல் விரக்தியில் திரும்புகிறார். செல்வம் புழங்கும் அமெரிக்காவில், வேலை தேடி அலயும் அபலத்தை இந்த காட்டியில் காட்டுகிறார் சாப்பிளின்.

நாயை உள்ளே அனுமதிக்காத விடுதியில் தன் பெண்ட்டுக்குள் நாயை போட்டு செல்வதும், தன் பணத்தை திருடபவனிடம் இருந்து பணத்தை திரும்ப பெருவதும், தன்னை பார்த்து கண்ணடிக்கும் பெண்ணை அப்பாவித்தனமாக கைக்குட்டையால் துடைக்க செல்வதும் என்று சாப்பிளின் நகைச்சுவை முத்திரைகள்.

சாப்பிளினின் திரைப்படங்கள் விவாதிக்கப்பட்ட அளவிற்கு, அவரது குறும்படங்கள் விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த காலத்தில் ஒரு படம் இருபது நிமிடம் தான் எடுத்தனர். இன்றைய காலக்கட்டத்தில் இதை நாம் குறும்படமாக பார்க்கிறோம். தன்னுடைய திரைப்படங்களை விட குறும்படத்தில் தான் அதிக விஷயத்தை முன் வைத்திருக்கிறார் என்பதை அவரது ஒரு சில குறும்படங்களின் புரிந்து கொண்டேன்.

சார்லி சாப்பிளின் குறும்படங்களை பற்றி மேலும் பார்க்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails