வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 22, 2015

மகன் தந்தைக்கு எழுதும் கடிதம் ! (நகைச்சுவைக்காக மட்டுமே)

ஒரு மகன் தன் பெற்றோருக்கு இப்படி கடிதம் எழுதுகிறான். 

 Disclaimer : நகைச்சுவைக்காக மட்டுமே.... 

** 

வணக்கம், 

உங்கள் அன்பு மகன் எழுதுகிறேன். 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தீர்கள். என்னை படிக்க வைக்க நீங்கள் அடைந்துள்ள கஷ்டத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். 

இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ’படிப்பே வேண்டாம்’ என்று முடிவு செய்திருக்கிறேன். நான் உங்கள் மகன். எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். அதனால், வீட்டு வாடகைக்கு வைத்திருந்த ரூ.10000 பணத்தை பீரோ உடைத்து சீட்டு விளையாட எடுத்திருக்கிறேன். 

உங்களுக்காக நான். உங்களோடு எப்போதும் நான் இருப்பேன். இப்போதைக்கு இரண்டு நாள் வீட்டுக்கு வர மாட்டேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி. 

உங்கள் மீது கொண்ட அன்பின் அடிப்படையில், நான் வீட்டு செலவுக்காக ரூ.1000 விட்டு வைத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் ரூ.10000யை ரூ.20000 மாற்ற முழு வீச்சில் செயல்படுவேன். 

என் அரிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் நண்பர்களாக நாய் சேகர், ப்ளேட் பக்கிரி, போகிரி ராஜா, புது நண்பனான அசால்ட் சேது என்னுடன் அயராது உழைப்பார்கள். அவர்களை முழுவதுமாக நம்புகிறேன். 

அதில் வெற்றிப் பெற்ற பிறகு, உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமப்பேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. 

எனக்குச் பொதுநலம் அறவே கிடையாது. என் உறவு நீங்கள் தான். நான் வைத்திருக்கும் அனைத்து பொருட்களும் நீங்கள் வாங்கிக் கொடுத்தது. என் இல்லமும் உள்ளமும் என் பெற்றோராகிய நீங்கள் தான். 

நீங்கள் வைத்த பெயரை மறந்து போகும் அளவுக்கு, ’தண்டச்சோறு’, ’தருதலை’, ’உதவாக்கரை’ என்று அழைக்கின்ற சொல்லுக்காகவே என் வாழ்நாட்கள் முழுக்க வாழ விரும்புகிறேன். 

இது போன்ற சம்பவங்களில் பல முறை நான் மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை மீண்டு வந்து, உங்கள் புகழை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தனயன் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். 

நன்றி! 

உங்கள் அன்பு மகன் 
தருதலை.

Friday, December 18, 2015

’இலக்கியச் சவடுகள்’ நூலை வெளியிட்ட ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் !

பெரம்பூரில் நண்பர் உதயகண்ணன் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் நடத்தி வருகிறார். எங்கள் பகுதிக்காரர் என்பதாலோ என்னவோ இது என்னுடைய ‘பதிப்பகம்’ போன்ற உணர்வு. உரிமையாக எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வேன். 

ம.காமுத்திரை எழுதிய ‘மில்’ நாவலுக்கு ’சுஜாதா’ விருது கிடைத்ததும், அதைப் படித்து விமர்சனம் எழுதிய முதல் ஆள் நானாக இருப்பேன். எஸ்.ஷங்கர்நாராயணன் நூல்களை பலருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். இன்றைய இலக்கிய பதிப்புலகத்தில், இலக்கிய புத்தகத்திற்கு நியாயமான விலை வைத்து பதிப்பவர் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகத்தின் உதயகண்ணன். 



நான் ‘நண்பன்’ என்பதால் என்னுடைய நூல்களை பதிப்பிக்க கேட்டால் ‘முடியாது’ என்று தான் சொல்வார். நான் எழுதும் வாழ்க்கை வரலாறு, அரசியல் நூல்களுக்கு அவர் பதிப்பகத்தில் இடம் கிடையாது. கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கே முன்னுரை. படைப்பில் கொஞ்சமாவது இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகே சென்ற வருடம் நான் எழுதிய ‘பெரியார் ரசிகன்’ (நாவல்) பதிப்பித்தார். 

தற்போது, ம.காமுத்திரை நூல்களை வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு பதிப்பகங்கள் வெளியிடுகிறது. மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ நாவலை காலச்சுவடு வெளியிட்டுயிருக்கிறது. இவர்களின் முதல் நூலை வெளியிட்டது ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் தான். 

 பதிப்புலகத்தில் பதினைந்து வருடம் மேல் இயங்கி வருகிறார். இவர் பதிப்பித்த பல நூல்களுக்கு தமிழக அரசு விருது, பாரத் ஸ்டேட் வங்கி விருது, கவிதை உறவு விருது கிடைத்திருக்கிறது. ஆனால், இன்னும் இவருக்கு பாபஸி உறுப்பினர் வழங்கப்படாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம். 

இப்படி, One-Man Army யாக செயல்ப்பட்டு வரும் உதயகண்ணனுக்கு நேற்று அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும். காரணம், ஆ.மாதவன் எழுதி உதயகண்ணனின் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பித்த ‘இலக்கியச் சுவடுகள்’ நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பல வருடங்கள் பதிப்பகம் நடத்திய உதயகண்ணனுக்கு நேற்று தான் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. 


ஆ.மாதவனை பலர் பாராட்டியிருப்பார்கள். பலருக்கு அந்த நூலை பதிப்பித்தவர் யார் என்று கூட தெரிந்திருக்காது. இந்த பதிவின் மூலம் ‘இலக்கியச் சுவடுகள்’ நூலை பதிப்பித்த பதிப்பாளர் உதயகண்ணனை நான் வாழ்த்துகிறேன். 

Monday, December 14, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 10

அடர்ந்த காடு.

புலி தனது இறையை தேடும் போது ஒரு நரியை தனியாக இருப்பதை பார்த்தது.

மறைந்திருந்து புலி நரியை தாக்கி உண்ணும் போது நரி கோபமாக “எவ்வளவு துணிவு இருந்தால், இந்த காட்டின் அரசனை தாக்குவாய்” என்றது.

புலிக்கு திகைப்பாக இருந்தது. எப்படி ஒரு நரி காட்டின் அரசனாக இருக்க முடியும். “நீ ஒரு நரி. எப்படி இந்த காட்டின் அரசன் என்று நம்புவது” என்று புலி கேட்டது.

“என் பின்னால் வா. நா நிருபித்துக் காட்டுகிறேன்” என்றது நரி.



நரி முன்னே செல்ல, புலி பின்னால் வந்தது.

இருவரும் மான் கூட்டம் விளையாடிக் கொண்டு இடத்தில் சென்றார்கள். மான் கூட்டம் நரி பின்னால் புலி இருப்பதை பார்த்து அஞ்சி ஓடியது.

“பார்த்தாயா ! என்னைப் பார்த்து எல்லா மான்களும் பயந்து ஓடியது.” என்றது. இதை புலியால் நம்ப முடியவில்லை.

”என்னோடு வா. மீண்டு நிறுபித்துக் காட்டுகிறேன்” என்று குரங்குகள் இருக்கும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

 குரங்குகளும் புலியைப் பார்த்து மிரண்டு மரத்துக்கு மரம் தாவி ஓடியது. “இப்போது புரிந்ததா ! நான் தான் காட்டின் அரசன்” என்று நரி கூறியது.

“மன்னித்து விடுங்கள் அரசே ! உங்கள் பெருமை தெரியாமல் உங்களை தாக்கிவிட்டேன்” என்றுது புலி.

Management நீதி : 

நிர்வாகத்தில் பெரிய ஆளாக இருக்க  நாம் புலியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘புலி’ யை வேலைக்கு நியமித்தால் போதும்.

Sunday, December 13, 2015

பல கேள்விகளை உருவாக்கும் விளம்பர நோட்டீஸ் !

[ Disclaimer (என் நலன் கருதி): இதில் நான் யாரையும் குறைக் கூறவில்லை. நோட்டீஸில் இருக்கும் கணக்கைப் பற்றி கேள்விக்கேட்கிறேன். பதில் தெரிந்தவர்கள் கூறலாம். ] 


1. 600+1200+1400+1920+45000+300000 = மொத்தம் 3,50,120... 80120 அல்ல (யாரு போட்ட கணக்கோ !!). 

2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 பாதுகாப்பு மூகாம் = 5554 சென்னை (14), காஞ்சிபுரம் (6), கடலூர் (6) = மொத்தம் 26 தொகுதிகள். 

அப்படியென்றால், ஒரு தொகுதியில் 214 மூகாம் (5554 / 26 = 213.615) அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் (13,80,461 / 5554 = 248.55) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு பள்ளி / சமூகக்கூடம் / தனியார் திருமண மண்டபங்கள் என்று கணக்கு வைத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் 214 மூகாம் அமைக்க முடியுமா ? ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் இருக்க இடம் இருக்கிறதா ? 

3. உணவு பொட்டலம் = 72, 64, 353 மூகாம்மில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கை. மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 ஒருவருக்கு 5.26 பொட்டலம் வழங்கப்பட்டிருக்கிறது. 

அப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு நாள் (ஒரு நாளுக்கு 3 வேளை உணவு) மட்டும் தான் மூகாமில் தங்கியிருக்கிறார்கள். அதற்கு மேல் தங்கவில்லையா ? அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு உணவு வழங்கியது யார் ? 

அப்படியென்றால் மூகாமுக்கு வராமல் வெள்ளத்திலும் வீட்டில் இருந்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்க வில்லையா ? உதவியை எண்ணிக்கை வைத்து செய்தால் இப்படி தான் கணக்கு தவறாக வரும். 

இப்படி பல கேள்விகளை இந்த நோட்டீஸ் உருவாக்குகிறது. 

கடைசி கேள்வி, உண்மையிலேயே இந்த நோட்டீஸ்யை அதிமுக ஐ.டி விங் தயாரித்ததா ? அல்லது எதிர்கட்சி ஐ.டி விங் சதியா ?

Thursday, December 10, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 9

நாம் சிறு வயதில் படித்த கதை தான். 

நூறு பறவைகள் கூட்டமாக வானில் பறந்துக் கொண்டு இருக்கும் போது கீழே தானியங்கள் பரவி கிடப்பதைப் பார்க்கிறது. தானியங்களை உண்ணும் போது, வேடனின் வலை அவர்களை சிறைப்படுத்துகிறது. வேடன் வருவதை பார்த்த பறவைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பறக்க முற்படுகிறது. ஆனால், யாராலும் பறக்கமுடியவில்லை.

அப்போது, ஒரு பறவை தலைமை ஏற்று, “ நாம் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக முழு பலத்தோடு பறக்க வேண்டும்” என்றது. 

அப்படியே, எல்லா பறவைகளும் பறக்க முயற்சிக்கும் போது வலையோடு சேர்ந்து வானத்தில் பறந்தது. பறவை தப்பித்ததோடு இல்லாமல் வேடன் தனது வலையை இழந்தான். 

”ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு” என்ற நீதிக்கு இந்த கதையை படித்திருப்போம். ஆனால், இந்த கதை இத்தோடு முடியவில்லை. 



வேடனிடம் இருந்து பறவைகள் தப்பித்தாலும், காலில் சிக்கிய வலையோடு முன்பு போல் சுதந்திரமாக பறக்க முடியவில்லை. தங்கள் காலில் மாட்டிய வலையை அருக்க யாருடைய உதவியை நாடலாம் என்று பறந்தப்படி பறவையின் தலைவன் கேட்டான். 

“எலியின் உதவியை நாட்டலாம்” என்று ஒரு பறவைக் கூறியது. 

ஒரு சில பறவை அந்த கருத்தை ஆதரித்தாலும், “நாம் கூட்டமாக வருவதை பார்த்து எலி பார்த்து பயந்து ஓடிவிடும். இது சாத்தியமாகாது” என்றது. 

“சிங்கம், நரி போன்ற பெரிய மிருகங்களிடம் உதவிக் கேட்கலாம்.” என்று இன்னொரு பறவைக் கூறியது. 

இந்த கருத்தை ஒரு சில பறவைகள் ஆதரித்தாலும், “வேடனிடம் மாட்டியிருந்தால் ஒரு சிலராவது தப்பித்திருக்க முடியும். சிங்கம், நரி போன்ற கொடிய மிருகத்திடம் இருந்து யாரும் உயிருடன் தப்பிக்க முடியாது” என்றது.

பறவைகளின் தலைவன், “நம்மால் நீண்ட நேரம் இப்படியே பறக்க முடியாது. அதனால், முதலில் எலியிடம் உதவிக் கேட்போம்” என்றது. 

 ஆனால், 30 பறவைகள் அந்த கருத்தை ஏற்கவில்லை. சிங்கத்தின் உதவி பெறலாம் என்பதில் முடிவாக இருந்தார்கள். தங்கள் கருத்துக்கு அதிக பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், அவர்களின் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள். 

நேரமாக ஒவ்வொரு பறவைகளின் காலில் வலு குறைந்துக் கொண்டே வந்தது. “தறையில் இறங்கிய பிறகு, யாருடைய உதவிப் பெறலாம்” என்று தலைமை பறவை கூறியது. 

 “முடிவெடுத்த பிறகு தரையில் இறங்கலாம்” என்று இன்னொரு 20 பறவைகள் கூறியது. 

இப்படியே பறந்தப்படி பேசிக் கொண்டு வரும் போது கடல் மத்தியில் பறந்துக் கொண்டு இருந்தது. ஒரு சில பறவையால் பறக்க முடியவில்லை. வலையில் இருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ இறங்கி கடலில் விழுந்தது. 

தப்பிக்கும் போது இருந்த ஒற்றுமை தங்களை விடுவித்துக் கொள்ளும் போது இல்லாததால் எல்லா பறவைகளும் மடிந்தது. 

 Management நீதி : 

 ஒரு குழு (Team) ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயமில்லை. அந்த ஒற்றுமையை கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொண்டால் தான் எடுத்த வேலையை சரியாக முடிக்க முடியும்.

Tuesday, December 8, 2015

பலரின் உழைப்பை உரிந்த சென்னை மழை !

நேற்று மாலை, மழையில் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் வீட்டு செல்லும் போது அவருக்கு உதவியாக ஏதாவது பொருள் வாங்க நினைத்தேன். ஐந்து நாட்களாக தனது வீட்டில் மின்சாரம் இல்லை என்று சொன்னதால், ஒரு Emergency Lamp வாங்கலாம் என்று ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு சென்றேன்.

அங்கும் மின்சாரம் இல்லை. 

மாலை 6 மணி என்றாலும் இரவு 8 மணிக்காக இருள் இருந்தது. ஒரு சிறிய விளக்கில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். Emergency Lamp கேட்டப் போது, மூன்று, நான்கு விளக்குகளை எடுத்துக்காட்டினார். ஒன்று பார்ப்பதற்காக நன்றாக இருந்தது, விலையை கேட்டேன்.

“ரூ.500” என்றார். 

ரூ.300 இருக்கும் என்று நினைத்தேன். அதிகப்படியாக ரூ.400 கொடுக்கலாம்.


“இந்த விலை மழைக்கும் சேர்த்தா ?” என்றேன். 


“சார் ! இது முப்பது வருஷம் கடை. அதிக லாபம் வச்சு வீக்கிறதில்ல.” என்று சொல்லி மழையில் அழிந்த எலக்டிரிக் பொருட்களை தூக்கி வீசிக் கொண்டு இருந்தார். இந்த இருட்டில் தன் உழைப்பை தொலைத்தவரின் குரல் என்னை எதோ செய்தது. 

நான் பேரம் பேசினால் ரூ.100 குறைக்கலாம். ஏனோ ரூ.500 கொடுத்து பொருளை வாங்கி, பலர் உழைத்து வாங்கிய பொருட்கள் குப்பையாக கொட்டி வைத்த தெருவில் நடந்து வந்தேன். 



இறந்தவர்களின் உயிரை எப்படி மீட்டுத்தர முடியாதோ, அதேப் போல் இழந்த அவர்களின் உழைப்பை திருப்பி கொடுக்க முடியாது. 

இந்த மழை… 
எத்தனை பேரை வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திற்கு தள்ளியிருக்கிறதோ ? எத்தனைப் பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்தார்களோ ? 
இதில் இருந்து எத்தனை பேர் மீண்டு வரப்போகிறார்களோ ? 
தெரியவில்லை. 

உணவு, பொருள், உடை என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம். அன்பு காட்டலாம். இழந்த அவர்களின் உழைப்பை எப்படி கொடுப்பது ? விடையில்லை. 

இந்த மழை… பல பணக்காரர்களை ஒரு பாட்டில் தண்ணீரை கையேந்தி வாங்க வைத்தது. எதுவும் நிறந்தரம்மல்ல என்ற உண்மை உணர்த்தியது. மனித நேயத்துக்கு உயிர் கொடுத்தது. அதேப் போல் பலரின் உழைப்பை உரிந்திருக்கிறது. 

’எல்லாம் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில், எல்லாவற்றையும் மனதில் சுமந்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை தான் நாம் வாழ வேண்டியதாக இருக்கிறது.

Monday, December 7, 2015

காமராசர்

லட்சக்கணக்கான
புகழ்ப் பெற்ற பணக்காரர்கள் 
வாழும் நாட்டில்
புகழ்ப் பெற்ற ஏழை
காமராசர் ! 

சமான்யனாக பிறந்து
சாம்ராஜ்ஜியத்தை அமைத்த 
முதல்வர்களுக்கு மத்தியில்
ஏழையாக பிறந்து
ஏழையாக இறந்தவர் !


வரும் தலைமுறையினருக்கு
வழிக் காட்டியாய் இருந்து
வழி வகுத்து
முதல் அமைச்சர் பதவியில்
விளகியவர் !

எடுத்த காரியங்களை
கர்மமென முடித்ததால்
“கர்மவீரர்”
என்ற பெயருக்கு
சொந்தக்காரர் !

காந்தியின் பிறந்த நாள் அன்று
காந்தியின் திருவடி அடைந்தவர் !

முதல்வர்கள்
எப்படி இருக்க வேண்டும் 
என்பதற்கு
பல்கலைக்கழகமாக
வாழ்ந்த
எங்கள் காமராசர் !

Wednesday, November 25, 2015

இரண்டு கவிதை : மழை, புகைப்படம்

மழை
----------

வானம் மழை சிந்தினால்
விவசாயி கண்ணீர் சிந்த தேவையில்லை !

வீட்டுக்கு மழைநீர் சேகரித்தால்
குடம் ஏந்தி சாலையில் நிற்க தேவையில்லை !

கடலுக்குள் கலக்கும் முன் மழைநீரை சேமித்தால்
 தண்ணீருக்கு அண்டை மாநிலத்தை நம்ப வேண்டியதில்லை !

பண சேமிப்பு எதிர்காலத்திற்கு நல்லது
மழைநீர் சேமிப்பு பூமிக்கு நல்லது !!

மழை
நம் வாழ்க்கைக்கு தேவையானது மட்டுமல்ல
நமக்கு சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கை !

**

புகைப்படம் 
------------------- 

நரைத்த முடி
தோல்வியடைந்த கனவுகள்.

நிகழ்கால வலி
இறந்தக்கால நினைவுகள்.

நட்பின் கொண்டாட்டம்
நட்பின் சுயநலம்.

ஆறு வித்தியாசங்களை
கடந்து செல்கிறது
கல்லூரிக்கால புகைப்படத்திற்கும்
தற்போதிய புகைப்படத்திற்கும் !!

Tuesday, November 3, 2015

குற்றம் கடிதல் - திரை விமர்சனம்

எத்தனையோ நல்ல படங்கள் வந்ததும் தெரியாமல் தோல்வியடைந்து பெட்டிக்கு போன பிறகு ’தேசிய விருது’ என்று அறிவிப்பு வரும். படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சென்ற வருடம் வரை ‘தேசிய விருது’என்பது தோல்வியடைந்த படங்களுக்கு ஊக்க மருந்தாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த வருடம் தான் ‘தேசிய விருது’ ஊக்க மருந்தாக இருந்ததோடு இல்லாமல் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. 

’காக்கமுட்டை’ படத்தை அடுத்து தேசிய விருதால் அதிக எதிர்ப்பார்ப்போடு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்றப்படம் ’குற்றம் கடிதல்’. 



இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்விமுறையின் அவசியத்தை பிரச்சார நெடியில்லாமல் சொல்லும் படம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

ஆறாம் வகுப்பு மாணவன் செழியன் சக மாணவியை பிறந்த நாள் வாழ்த்து சொல்வதாக நினைத்து முத்தம் கொடுக்கிறான். அந்த மாணவனை ஆசிரியர் மெர்லின் கேள்விக் கேட்க, அதற்கு ‘உங்கள் பிறந்தநாளுக்கும் முத்தம் கொடுப்பேன்’ என்று சொல்ல, ஆசிரியர் மெர்லின் கோபத்தில் அடிக்கிறார். அதிர்ச்சியில் மயங்கி விழும் மாணவன் செழியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறான். 

ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியில் இருக்கும் ஆசிரியர் மெர்லினை காப்பாற்ற அவளது கணவன் மணி வெளியூருக்கு அழைத்துச் செல்கிறான். இன்னொரு பக்கம் அடித்த ஆசிரியர் தண்டிக்க வேண்டும் என்று செழியனின் மாமா மெர்லினை தேடுகிறார். இதற்கிடையில் செழியனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பள்ளி முதல்வர் போராடுகிறார். மகனுக்கு இப்படியானதில் அதிர்ச்சியில் உறைந்து போய் செழியனின் அம்மா இருக்கிறார். 

அவரவர் தங்கள் பிரச்சனை குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்க, ஊடகங்கள் இந்த பிரச்சனையை வைத்து விவாத நிகழ்ச்சி, கருத்துக் கேட்பது, என்று ஒளிப்பரப்புகிறார்கள். தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்யை ஏற்றிக் கொள்கிறார்கள். 

மருந்துக்கூட தெரிந்த நடிகரோ, நடிகையோ இந்த படத்தில் இல்லை. பிரபலங்கள் நடிக்காதப்படம். அதுவே இந்த படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாப்பாத்திரமாகவே நமக்கு தெரிகிறார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மை நமக்கு மிக எளியக்காட்சிகளில் இயக்குனர் பிரம்மா உணர்த்தியிருக்கிறார். 

’காக்கமுட்டை’ அடுத்து தமிழ் சினிமா ‘உலக சினிமா’ நோக்கி செல்கிறது என்பதை ’குற்றம் கடிதல்’ நிருப்பித்திருக்கிறது.

Thursday, October 8, 2015

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

சமிபத்தில் ஒரு நண்பரிடம் ஹிட்லரைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, ‘ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்று சொல்வதற்கு பதிலாக, ஒரு கிறித்துவன் யூதர்களை கொன்றதாக ஏன் யாரும் சொல்லவதில்லை தெரியுமா ?” என்று கேட்டார். யூத இனப்படுகொலைக்கு வாட்டிகன் போப்பின் ஆதரவு இருந்தது என்றார். 

அந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வாட்டிகன் மௌனம் காத்தது என்று சொல்லலாம். ஹிட்லரை எதிர்த்து கருத்துக் கூறினாலோ கண்டனம் தெரிவித்தாலோ, இத்தாலி இராணுவத்தை எதிர்க் கொள்ள வேண்டிய அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கூறினேன். பிறகு, Amen ( 2002ல் ஜெர்மன் மொழிப்படம்) படத்தில் வந்த சில காட்சிகள், வசனங்கள் பற்றி பேசினோம். எங்கள் விவாதம் தொடர்ந்துக் கொண்டே போனது. 

இன்றும், ’ஹிட்லரை’ பற்றி பேச தொடங்கினால் மர்மங்கள், விவாதங்கள், கதைகள் தொடர்ந்துக் கொண்டே போகும். வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், வரலாற்று பிரியர்களுக்கு ஈர்க்கு காந்தசக்தியாகவே ’ஹிட்லர்’ இருக்கிறார். 



அப்படிப்பட்ட ஹிட்லரைக் குறித்து சமிபத்தில் வாசித்த புத்தகம் முகில் எழுதிய ’ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்’ 

பொதுவாக, ஹிட்லரை குறித்த வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் அவருடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் இருப்பதில்லை. 1934க்கு பின்பு நடந்த பல விஷயங்கள் தான் தமிழில் வாசிக்க கிடைக்கிறது. 

ஆனால், முகில் ஆரம்பக்கட்ட வாழ்க்கையில் இருந்து மிக விரிவாக எழுதியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தமிழில் ஹிட்லரை குறித்து இவ்வளவு விரிவாக, ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் வந்ததில்லை என்று சொல்லலாம். 

ஹிட்லர் நல்லவர், கெட்டவர் என்ற விவாதத்தை தள்ளி வைத்துப் பார்த்தால், அவர் ஒரு ‘Interesting Personality’. ஹிட்லரைக் குறித்து பல சுவையான இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்டியிருக்கிறார். 

தமிழ் புத்தகச்சந்தையில் ஹிட்லருக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்பதை இந்த புத்தகம் காட்டியிருக்கிறது. 

வாழ்த்துகள் முகில் !!

**
ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்
- முகில்
- Rs.333


Tuesday, October 6, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 2

நேரு நேதாஜியின் மரணத்தை நம்புகிறார் என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் இந்தியா நாட்டின் பிரதமர். அவர் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்புகிறார் என்றால் ‘நேதாஜி இறந்ததை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று எடுத்துக் கொள்ளப்படும். 

ஆனால், ”நேருவின் கருத்தை இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா” என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப்பாய் படேலிடம் கேள்விகள் கேட்டப்பட்டது.

”போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இந்திய அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது ?” என்று கேட்டனர். 

”போஸ் பற்றி கிடைக்கும் ஆதாரங்கள் பல வித சந்தேகத்தை எழுப்புவதால், அவரைக் குறித்து எந்த விதக் கருத்து கூற முடியாத நிலைமையில் இந்திய அரசு இருக்கிறது. ” என்றார். 

“அவரைப் பற்றி ஏதாவது விசாரணை நடத்தப்படுமா” என்று கேட்டனர்.

“இல்லை” என்றார்.

(இன்றைய பா.ஜ.கவில் ஒருவர் கருத்துக் கூறி சர்ச்சையை கிளப்பினால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று சொல்வது போல் அன்றைய பட்டேலில் பேட்டி இருந்தது.) 


காந்திஜி, நேரு இருவரும் போஸின் மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவருக்காக வெள்ளையரை எதிர்த்து யுத்தமிட்ட ஐ.என்.ஏ வீரர்கள் இதை நம்பவில்லை. 

'அவர் உயிருடன் இருக்கிறார்’ என்றே நம்பினர். அவர் மீண்டும் வருவார். எங்கள் போராட்டத்திற்கு அடுத்த திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்று கூறினர். 

ஒவ்வொரு நாளிதழும் நேதாஜி மரணத்தைப் பற்றி ஒவ்வொரு விதமாக வெளியிட்டது. “நேதாஜி மரணச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை. இதோ அந்த விபத்தில் தப்பிய ஜப்பானிய வீரரின் பேட்டி என்று United Press of India செய்தியை வெளியிட்டனர். 

”நேதாஜிவி உடலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி தாய்பே என்ற பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்று சென் பீ ஷா என்பவர் சீனாவில் இருந்து வரும் Central New Agency என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். சென் பீ ஷா ஒரு மருத்துவ செவிலியர். 



நேதாஜி மரணத்தை பத்திரிக்கையை உறுதி செய்துக் கொண்டு வெளியிட Hindustan Times story பத்திரிக்கை ’’Netaji is Not dead என்ற தலைப்பில் நேதாஜி சென்ற விமானம் வெடிக்கவில்லை. அதே விமானம் திட்டப்படி ஹாங்காங் வந்திறங்கியது. விமானம் வெடித்ததற்கான எந்த ஆதாரம் இல்லை என்று கூறியது. 
*

போஸ் சென்ற விமானத்தில் அவருடன் சென்றவர் கர்னல் ஹபிபூர் ரஹ்மான். விமான விபத்து நடந்ததாக சொல்லப்படும் பயணத்தில் கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் காயம் ஏற்ப்பட்டிருக்கிறது. அவருடன் பயணம் செய்ததால் இவருடைய சாட்சியம் மிகவும் முக்கியம். 

“போஸ் இறந்தது உண்மை தான். அந்த விமான விபத்தில் நான் சில காயங்களோடு தப்பித்தேன். பலத்தக் காயங்களோடு போஸ்யை மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு தான் அவர் உயிர் பிரிந்தது.” என்று கூறினார். ( இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில், கர்னல் ஹபிபூர் ரஹ்மான் பாகிஸ்தான் குடியேறினார்.) 

ஆனால், அவரின் சக ஐ.என்.ஏ வீரர்களான தர், சந்திரா குமார் போன்றவர்கள் போஸ் கர்னல் ஹபிபூர் ரஹ்மானை அப்படி பொய்ச் சொல்லச் சொல்லியிருப்பார் என்று கூறினர். அப்போது தான் போஸ்ஸால் சுதந்திரமாக செயல்ப்பட முடியும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. 

** 
போஸ் நிஜமாகவே தப்பித்திருந்தால் ஜப்பானின் உதவியில்லாமல் நடந்திருக்காது. பல ஆயிரம் கதைகள் சொன்னாலும், போஸின் போர் நடவடிக்கை, திட்டம் அனைத்தும் ஜப்பானுக்கு தெரிந்திருக்கும். போஸின் அனைத்து யுத்த நடவடிக்கைகளுக்கு ஆயுதம் வழங்குகிறோம் என்று ஜப்பான் உறுதி அளித்திருந்தது. 

ஆதலால், போஸ் தன் திட்டத்தை ஜப்பானுக்கு சொல்லாமல் இருந்திருக்க மாட்டார். ஆனால், இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஜப்பான் தனது யுத்த ஆவணங்களை அனைத்தும் அழித்திருக்கிறது. செம்படைகளிடம் இருந்து யுத்தக் குற்றவாளி பட்டியலில் தங்கள் இராணுவ தளபதிகளையும், கூட்டணியில் இருப்பவர்களையும் காப்பாற்ற இப்படி செய்ததாக கருதப்படுகிறது. ஒரு வேளை தப்பித்தது உண்மையென்றால், போஸ் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அழித்திருப்பார்கள் என்ற நினைக்கத் தோன்றுகிறது. 

ஒரு வேளை போஸ் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் அதை ஆய்வு செய்து வெளியிட ஜப்பானிடம் கொரிக்கை வைப்பது இந்தியாவின் கடமையாகும். இந்தியாவிடம் இருக்கும் ஆவணங்களே முழுமையாக வெளியிடாதப் போது மற்ற நாடுகளுடன் கொரிக்கை வைக்கமாட்டார்கள் என்பது நிதர்சண உண்மை. 

** 
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தைப் போல நேதாஜி இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை கூறினர். ஆளுக்கு ஒரு கதை, ஆளுக்கு ஒரு ஆதாரத்தை கூறினர். எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்த்து கூற முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அதே சமயம் எதையும் நிராகரிக்க முடியவில்லை. 

போஸ் இறந்தாரா ? இல்லையா ? மாறு வேடத்தில் வாழ்ந்தாரா ? பல யூகங்கள், கதைகள், கருத்துக்கள் என்று உலவிக் கொண்டு இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. 

எல்லாவற்றிருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஒரே வழி ! போஸ் மரணத்தை குறித்து விசாரிக்க வேண்டும் !! 

கட்டுரைக்கு உதவியது :

Wednesday, September 23, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 1

“சுபாஷ் போஸ் மீது நான் கொண்டிருந்த உறவு, மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமாகும். அவரது தியாக சக்தியை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். ஆனால், லட்சியத்தில் பலம் திரட்டும் திறமையும், போர்முறையில் துணிந்து நிற்கும் வீரமும் அவருக்கு எல்லையென்றிருந்தனவென்பதை, இந்தியாவிலிருந்து அவர் வெளியேறிய பின்னர் தான் தெள்ளத் தெளியத் தெரிந்து கொண்டேன்”


– காந்திஜி ( 15.1.47)


**
ஆகஸ்ட் 28, 1945

மேயர் தேபேந்திரநாத் முகர்ஜி வருத்தம் கலந்த முகத்தில் கல்கத்தா முனிசபல் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். சில ஐரோப்பிய உறுப்பினர்களும் இருந்தனர்.

தேபேந்திராத் துக்கம் கலந்த குரலில், “சுபாஷ் சந்திர போஸ் நம் நாட்டுக்காக போராடியவர். அவருடைய மரணம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்காக மௌனமாக அஞ்சலி செலுத்துவோம்”

யாரும் மேயர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் இறந்தவரையா ? தன்னையா ?

“ஒரு நிமிடம் போஸ் மரணத்திற்காக அஞ்சலி செலுத்துவோம்” என்று திரும்ப கூறினார்.

காதில் வாங்கிக் கொள்ளாதவாறு அனைவரும் இருந்தனர். யாரும் அசையவில்லை.

“என்ன ஆனது. நமக்காக போராடியவருக்கு மௌன அஞ்சலி ஏன் செலுத்த தயங்குகிறீர்கள் ?”

 “போஸ் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் யாரும் நம்பவில்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார்.”

”என் உத்தரவை மதிக்காதவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டாம்.”

அரங்கத்தில் மேயரை தவிர்த்து யாருமில்லை.

**



செப்டம்பர் 21, 1945

1942ல் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், பல தலைவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

அன்றைய தினத்தில் 1942ல் இருந்து 1945 வரை காலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியது. இறந்த தலைவர்களின் பட்டியலில் ’நேதாஜி’ பெயர் இடம் பெறவில்லை.

அதற்கு காங்கிரஸ் தலைவரான அபுல் கலாம் ஆசாத், “சுபாஷ்யின் மரண செய்தி எத்தகைய சூழ்நிலையில் நமக்கு ஏட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். செய்தி வெளியிட்டவர்கள் மீது நமக்கு சந்தேகம் இருப்பதாலும், அவருடைய மரணம் உறுதி செய்ய முடியாத நிலையில் இரங்கல் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.

 இன்று வரை, இந்திய தேசிய காங்கிரஸ்யோ அல்லது வேறு அரசியல் கட்சியோ நேதாஜி மறைவிற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

**
ஜப்பான் ரென்கோலி என்ற ஆலயத்தில் போஸ் புகைப்படத்திற்கு புக்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தினர். ஜப்பானிய இராணுவத்தினர் முன்னிலையில் மொஜிசுகி என்பவர் அவரது இறுதி சடங்கை நடத்தினார் என்று கூறப்பட்டது.

இந்த செய்தி ஜப்பானில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. பலர் கண்டித்தனர். இன்னும் போஸ் மரணச் செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடத்துவது யாரும் ஏற்ற்க் கொள்ள முடியாத ஒன்று.

இந்தியாவும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. போஸ் அஸ்தியா ? இறுதி சடங்கா ? யாரைக் கேட்டு இதையெல்லாம் செய்தீர்கள் என்று கண்டித்தது.

**
”செய்தி பொய்யாக இருக்கலாம்; போய் உயிரோடு தலைமறைவாக இருக்கலாம். எந்த தருணத்திலும் அவர் வெளிவருவார் நம்புகிறேன்” என்று ஆரம்பத்தில் கூறி வந்த காந்திஜி, பிறகு நேதாஜி மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

அதேப் போல் நேதாஜி மரணத்தைப் பற்றி நேரு, “ஆரம்பத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருப்பார் என்று தோன்றியது. நானும் அதை தான் நம்பினேன். விமான விபத்தை நேரில் கண்ட சாட்சியை வைத்து பார்க்கும் போது அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக என்பதை நாம் நம்ப வேண்டியதாக தான் இருக்கிறது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்லை” என்றார்.

நேதாஜி இறந்ததாக யார் சொன்னது ? யார் யார் சாட்சியம் அளித்தனர் ? எதை வைத்து நேதாஜியின் மரணத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள் ? எதனால். அளித்த சாட்சியங்கள் மீது அவநம்பிக்கை.... விவரங்கள் அடுத்த பதிவில் !!


Tuesday, September 15, 2015

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 5 : இரண்டாம் கெய்சரின் மரணம்

1941. 

இரண்டாம் உலகப் போர் பரப்பரப்பாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். நாலாகப் பக்கமும் ஜெர்மனியின் நாஜி கொடி வெற்றிக் கரமாக பரந்துக் கொண்டிருந்த நேரம். ஹிட்லர் சாதாரண மனிதரில்லை. நிஜமாகவே ஜெர்மனியை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் குவிந்தது அல்லது அதற்கான அறிகுறியாவது தெரிந்துக் கொண்டு இருந்தது. 

ஹிட்லர் தளபதிகளுடன் யுத்தத்தை குறித்து ஆலோசனை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஒருவன் ஹிட்லரின் அனுமதிப் பெற்று உள்ளே வந்தார்.

“ஹெயில் ஹிட்லர்” என்று சொன்னப்பிற்கு தனது கையில் இருக்கும் காகிதத்தை ஹிட்லரிடம் கொடுத்தார். அதை திறந்து படிக்கும் போது ஹிட்லர் அதிர்ச்சியடைந்தார். 

அந்த செய்தி யுத்தத்தை குறித்து எதாவது இருக்கிறதா என்று ஹிட்லரின் தளபதிகள் கேட்டனர். ஆனால், அவர் அமைதியாக இருந்தார். 

சிறிது நேரம் கழித்து மௌனமாக தனது தளபதிகள், “ஜெர்மனியின் மன்னர் இரண்டாம் கெய்சர் காலமானார்” என்றார். 

ஹிட்லரோடு இருந்த தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை விட வியப்பாக இருந்தது. அதற்கு காரணம்…. கெய்சரின் மரணச் செய்தி அல்ல… ஹிட்லரின் நடவடிக்கை. 



இறந்துப் போன கெய்சருக்கு 81 வயது இருக்கும். முதல் உலகப் போர் முடிந்ததும், ஜெர்மனி முழுவதுமாக சரணந்து, பொருளாதாரத்தில் அதாளப்பாதத்தில் தள்ளி விட்டுவிட்டு நெதர்லாந்தில் குடிபெயர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் ஜெர்மன் மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் மாண்டுக் கொண்டு இருந்தனர். அந்த நிலையிலும், பிரான்ஸூக்கு முதல் உலகப்போரில் நஷ்ட ஈடுக் கொடுப்பதை பற்றி ஜெர்மனிக்கு ஆணை வந்துக் கொண்டு இருந்தது. 

தன்னால் ஜெர்மனி பெரிய நஷ்டத்தை சந்தித்தது நினைத்து கெய்சர் கவலைப்படவில்லை. நெதர்லாந்தில் சந்தோஷமாக இருந்தார். எதோ ஹில்டர் தலைத்தூக்கிய பிறகு ஜெர்மனி வேகுண்டு எழுந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. 

முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சர்வக் காலமும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஹிட்லர் கெய்சர் மீது மரியாதை வைத்திருந்தார். 

“அவர் மன்னராக இருக்கும் போது அவர் படையில் இராணுவ வீரனாக இருந்திருக்கிறேன். சரணாகதியை எந்த மன்னரும் விரும்ப மாட்டார். ஜெர்மனி சரணடைய வேண்டும் என்று முடிவு எடுக்கும் போது அவர் மனம் எவ்வளவு பாடுப்பட்டிருக்கும். பல தலைமுறைகளாக ஆண்டவர்களுக்கு மனம் துவண்டுப் போய்யிருக்கும்” என்று ஹிட்லர் அவருக்காக வருந்தினார்.

ஹிட்லருக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மீது இருக்கும் கோபத்தில் பாதிக் கூட மன்னர் மீது இல்லை. இரக்கமும், அனுதாபம் மட்டுமே இருக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் தானே அவர் போரில் சரணடைய வேண்டியதாக இருந்தது. இல்லையென்றால், மன்னர் இறுதி வரைப் போராடிப்பார் என்று ஹிட்லரின் கருத்தாக இருந்தது. 

அது மட்டுமில்லாமல், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள் யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள். மன்னர் யுத்தத்தின் ஒவ்வொரு போக்கையும் தீர்மாணித்தவர்.

 என்ன தான் இருந்தாலும், அவர் ஜெர்மனியில் மன்னர். ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் மன்னரின் குடும்பம் அரும்பாடுப்பட்டிருக்கிறது. அதற்கு ஜெர்மனியியும், நாஜி வீரர்கள் என்றும் கடமைப்ப்பட்டிருக்கிறது. 

ஜெர்மனியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும், ஜெர்மனைப் பார்த்து பல நாடுகள் அஞ்சினாலும், பெரிய சர்வதிகாரியாக ஹிட்லர் திகழ்ந்தாலும்… அவரை தன் நாட்டின் மன்னராக தான் நினைத்தார். 

”இறந்த மன்னரின் கெய்சரின் உடலை ஜெர்மனுக்கு எடுத்து, தகுந்த அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்று ஹிட்லர் கூறினார். 

 ”யுத்த வேலைகள் ஆயிரம் இருக்கிறது. எவ்வளவு இராணுவப் படை அனுப்ப வேண்டும், எங்கு என்ன ஆயுதம் அனுப்ப வேண்டும், திட்டங்கள் வகுக்க வேண்டும், தாக்குதல் பற்றி பேசியாக வேண்டும். இதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு, சராசரி அரசியல்வாதிப் போல் ஓடிப்போன மன்னரை ஜெர்மனிக்கு எடுத்து வந்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாரே. இது இப்போதைக்கு தேவையா. அவருக்காக ஹிட்லர் மரியாதை செலுத்தினாலும், அவர் மீது இருக்கும் விமர்சனம் மாறிவிடப் போகிறதா” என்பது ஹிட்லரின் தளபதிகள், வேலையாட்கள் நினைத்துக் கொண்டனர். ஒருவருக்கும் ஹிட்லர் முன் நின்று பேச தைரியமில்லை.

ஜெர்மனியில் முதல் உலகப் போரின் தோல்வியின் வஞ்சம் தான் இரண்டாம் உலகப் போர் என்று சொல்லி வந்த நிலையில், இரண்டாம் கெய்சர் மீது ஹிட்லருக்கு இருந்த மரியாதையை இதை காட்டுகிறது. 

ஆனால், இரண்டாம் கெய்சர் ஜெர்மனிக்கு செல்வதை விரும்பவில்லை. ஜெர்மன் துருப்புகள் மீது வெறுப்பு கொண்டிருந்தார். எக்காரணத்திற்காகவும் தனது உடல் ஜெர்மனுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறியிருந்தார். அவரின் விருப்பப்படி அவர் இறந்தப் பிற்கு அவரது உடலை ஜெர்மனுக்கு அனுப்பப்பாமல் நெதர்லாந்திலேயே அடக்கம் செய்தனர். இருந்தாலும், நாஜிகள் அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை செலுத்தினர். 

ஹிட்லர் ஜெர்மனியை பெரிய வல்லரசாக மாற்றப் போவதை பார்க்காமல் இரண்டாம் கெய்சர் இறந்துவிட்டார் என்ற வருத்ததை போக்க தான், அவரது உடலாவது ஜெர்மனியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதை அவர் விரும்பவில்லை என்ற வருத்தத்தை காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை இரண்டாம் உலக யுத்தம் அவரின் நேரத்தை எடுத்துக் கொண்டு இருந்தது. 

முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற ஒரு அரசியல் தலைவர் கண்ணீர் சிந்தி அழும் போது, நடிக்கத் தெரியாத மனிதர் என்று இணையதளம் புகழாரம் சூட்டினார்கள். அவர் நல்லவர் என்றால், பல வச்சரசு நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் போது தனது பழைய மன்னருக்கு இறுதி மரியாதைக் கொடுக்க நினைப்பது அதை விட பெரிய உயர்ந்த குணம்.

உதவியது :

Inside the Third Reich - Albert Speer
ஹிட்லர் : சொல்லப்படாத சரித்திரம் - முகில்

 https://en.wikipedia.org/wiki/Wilhelm_II,_German_Emperor

Friday, September 4, 2015

It IS About Islam: Exposing the Truth About ISIS, Al Qaeda, Iran, and the Caliphate ( Pre-Review)

மிகவும் சர்ச்சைக்குரிய புத்தகம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளிவரப் போகிறது.

இது வரை அமெரிக்கர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்கிற பிரச்சாரத்தை உடைத்தெரிவதற்காக வெளிவரவிருக்கும் புத்தகம். 




“அமெரிக்க இஸ்லாமியர்களை அமெரிக்கா தனியாக பார்க்கவில்லை. எங்களில் ஒருவராக பார்க்கிறோம். அதனால், ஷரிய சட்டத்தை அமெரிக்காவில் அமல்ப்படுத்தவில்லை. ஷரிய சட்டம் கொண்டு வந்து இஸ்லாமியர்களை தனியாக பிரித்துக்காட்டவில்லை” என்பது போன்ற வாதத்தை முன் வைக்கிறார் எழுதாளர் Glenn Beck. 

அதே சமயம் பொய் #15, “America is safe from Sharia Law" என்ற அத்தியாயத்தையும் வைத்திருக்கிறார். 


ஆம், இந்த புத்தகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொயிதா இஸ்லாமைக் குறித்து முன் மொழியும் பதிமூன்று பொய்களை கூறுகிறார் எழுதாளர் Glenn Beck.


ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் மதத்தை முன் நிறுத்தி நடத்தும் தீவிரவாத தாக்குதலின் முகத்திரையை கிழிக்கும் புத்தகமாகவும், அமெரிக்காவுக்கு ஆதரவான புத்தகமாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான தீர்வை ஒரு அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். 

PROMO வுக்காக ஒரு நண்பரின் மேஜையில் இருந்த புத்தகம் என்பதால் முழுவதுமாக படிக்க முடிக்கவில்லை. கிடைத்த நேரத்தில் நான் வாசித்து புரிந்துக் கொண்டது. நூல் வெளியானதும், முழுவதுமாக வாசித்து எழுத வேண்டும். 

 **
It IS About Islam: Exposing the Truth About ISIS, Al Qaeda, Iran, and the Caliphate (Pre-order) 

இணையத்தில் முன் பதிவு செய்துக் கொள்ள... ( 12.5% discount + Free Shipping)

 Author Glenn beck Website - http://www.glennbeck.com/

Wednesday, September 2, 2015

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

”பயங்கரவாதம் தவிர்த்த எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம்” என்ற சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கும் நிலையில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இத்தருணத்தில் பலர் மரண தண்டனைக்கு ஆதரவாகும், எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றுபவரின் குரல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி யாரும் யோசித்ததில்லை. 

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - 117 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றிய ஒருவனின் மனசாட்சி. 1940ல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டிருக்கிறார். அவரின் பெயர் ஜனார்த்தனன். இவர் ஒரு தமிழர். 



இந்த புத்தகம் புனைவு என்று சொல்லிக் கொண்டாலும், ஒரு பேட்டியை போலவே தோன்றுகிறது. உணர்ச்சியில்லாமல் கொலைச் செய்ய வேண்டும் என்ற மனக் குமுறலை பல இடங்களைப் பார்க்க முடிகிறது. 

”ஒருவனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட்டு பிறந்த மகளைப் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார். தன் மகளை தொட யோசிக்கிறார். தன்னால் தூக்கிலிடப்பட்ட மறுபிறவியாக இருக்குமா என்று அஞ்சுகிறார்.”

”அப்பாவிடம் இருந்து இந்த வேலை எடுத்துக் கொண்டார். முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றிய பிறகு அப்பா ஒவ்வொரு தண்டனையை நிறைவேற்றிய அமைதியாக இருந்ததை புரிந்துக் கொள்கிறார்.” 

பல நாடுகளில் மரணத் தண்டனையை நிறைவேற்றும் போது ஒருவனை மட்டும் சார்ந்து தண்டனையை நிறைவேற்றுவதில்லை. எப்படி ஆறு, ஏழுப் பேர் உதவிக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. தூப்பாக்கி சுட்டுக் கொல்வதாக இருந்தாலும், கல்லால் அடித்துக் கொல்வதாக இருந்தாலும், தூக்கிலிடுவதாக இருந்தாலும் உதவியாளர்களை பலர் வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம், ஒருவரின் மரணத்திற்காக பழியை பலர் பகிர்ந்துக் கொள்வதற்காக செய்கிறோம் என்று சொல்லும் இடம், பல உண்மைகளை விளங்குகிறது. 

மூன்று, நான்கு நாட்கள் அலுவலக வேலை என்றால் உடல் சோர்வு வரும். ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் மூன்று நாட்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருக்கிறார். உடல் சோர்வை விட மனசோர்வு தான் அதிகமாக இருக்கும். அந்த மனநிலையை எந்த வார்த்தையில் சொல்லிப் புரியவைப்பது. 

இந்த புத்தகத்தைப் பற்றி இன்னொரு தகவல் என்னவென்றால், ” புறம்போக்கு” படத்தில் விஜய்சேதுபதியின் பாத்திரம் இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டது தான்.

”புறம்போக்கு” படத்தில் வரும் ஒரு சில வசனங்கள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் சேதுபதி தூக்குப் போட யோசிக்கும் போது, ஒரு நீதிபதி கொடுக்கும் கொடுக்கும் விளக்கம் இந்த புத்தகத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அச்சு அசல் அதே வாக்கியங்கள். 

மரண தண்டனை நிறைவேற்றியவன் மனதை சோர்வடைச் செய்யும், குற்றவுணர்வில் தள்ளும் என்ற உண்மையை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

மரண தண்டனை குறித்து ஆயிர விவாதங்கள் இருக்கிறது. ஒரு முறையாவது என்னுடன் இருந்து மரண தண்டனையை பாருங்கள், அப்போது புரியும் மரணம் கொடுக்கும் வலியை என்ற உண்மையை ஜனார்த்தனன் நமக்கு காட்டுகிறார். 

தூக்குதண்டனை நிறைவேற்றும் தமிழரின் வாழ்க்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, பின்பு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது தான் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. எனினும், இப்படி ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்த முருகவேலுக்கும் வெளியிட்ட எதிர் வெளியீடு சா.அனுஷுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Tuesday, September 1, 2015

தனி ஒருவன் - திரை விமர்சனம்

நண்பர்களை விட எதிரி தான் நமது உண்மையான ஆற்றலை வெளியே கொண்டு வருகிறான். சின்ன சின்ன க்ரைம் வேலை செய்பவர்களை அழிப்பதை விட அவர்களை எல்லாம் ஆட்டி வைக்கும் ஒரு பெரிய எதிரியை நாயகன் ஜெயம் ரவி தேடுகிறான். அப்படி மூன்று பேரை தேர்வு செய்து, அதில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது அந்த மூன்று பேர்களையும் ஆட்டி வைக்கும் கெட்டவனாக அறிமுகமாகிறார் அரவிந்த்சாமி.  
தனி ஒருவனான ‘ஜெயம்’ ரவி, தனி ஒருவனான சமூகத்தை ஆட்டி வைக்கும் அரவிந்த் சாமிக்கும் நடக்கும் ஆடு-புலி ஆட்டம் தான் படத்தின் கதை.



கதைப்படி அரவிந்த் சாமி தான் நாயகன். வழக்கமான நாயகனுக்கான அறிமுகம், அதிரடி, காதல் என்று பொருத்தி ‘ஜெயம்’ ரவியை நாயகனாக ஏற்க வேண்டியதாக இருக்கிறது. அரவிந்த் சாமி தன்னுடைய திட்டங்களை எப்படி அறிந்துக் கொள்கிறார், எப்படி முறியடிக்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் போது நன்றாகவே நடித்திருக்கிறார். மற்றபடி வழக்கமான நாயகனுரிய பழைய வேலை தான்.

நயந்தாரா ‘ஜெயம்’ ரவியை உத்வேகப்படுத்தும் விதமாக பேசும் வசனத்தை தவிர பெரிய வேலையில்லை. அவருக்கு ஒரு பாடல் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. 

இந்த வருடம் கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாக மாறும் வருடம் என்று நினைக்கிறேன். கார்த்திக், அருண் விஜய், ராணாவை தொடர்ந்து வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும் நாயகன் அரவிந்த்சாமி. சைகோ தனமாக, கொடூரமான, முட்டாள் தனமான வில்லன்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அழகான வில்லனாக வந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அமைதியான வில்லனை திரையில் பார்க்கிறோம். ’ஜெயம்’ ரவியை வைத்து தன்னை அழிக்க நினைப்பவர்களை எல்லாம் அழிக்கும் புத்திசாலி தனம் தொடங்கி இறுதிக் காட்சி வரை அமைதியான நடிப்பை ரசிக்க முடிகிறது.

இன்று நம் செய்திதாளில் படிக்கும் குற்றங்களுக்கு சொல்லப்படும் காரணங்களை உண்மை என்று நம்புகிறோம். உண்மையில் குற்றத்திற்கான பின்புலத்தை மறைக்கப்படுவதற்காகவே குற்றங்கள் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலரை கொலைச் செய்யும் போது செயின் திருட்டு, அறிவியல் பெண்ணை கொலைச் செய்யும் போது கற்பழிப்பு, போலீஸ்க்காரனை கொலைச் செய்யும் போது போதை மருந்து மயக்கம்…. என்று பல விஷயங்களை பார்க்க முடிகிறது. குற்றத்திற்கான காரணத்தை மாற்றிவிட்டால், குற்றவாளி தப்பிவிடுவான் என்பதை இன்றைய ஊடகம் நமக்கு சொல்கிறது.

முதல் முறையாக இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா, ரீ-மேக் செய்யாமல் சொந்தக்கதை, திரைக்கதை எடுத்து இயக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால் வெற்றியும் பெற்றிருக்கிறார். (American Gangster, இன்னும் சில ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பயர் என்று சொல்லலாம்.) 

முதல் முறையாக ’ஜெயம்’ ரவி - ’ஜெயம்’ ராஜா கூட்டணியில் உருவான படம் தெலுங்கில் ரீ-மேக் செய்ய வாழ்த்துவோம்.

Wednesday, August 26, 2015

வெள்ளை எலி என்கிற நான்சி வேக்

தகவல் கொடுப்பது தான் தனது வேலை என்று நான்ஸி இருக்கவில்லை. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைக் கொடுக்கும் துணிச்சல் நான்ஸிக்கு இருந்திருக்கிறது. 

நாஜிப்படைகள் வீழ்ச்சி நெருங்கும் காலக்கட்டத்தில் பிரிட்டன் இராணுவத்தை உளவு பார்க்க ஒரு பெண்ணை அனுப்பியிருந்தார்கள். அந்தப் பெணிண் போராத நேரம் பிரிட்டன் இராணுவத்திடம் பிடிப்பட்டாள். அவள் நாஜிகளுக்கு ஆதரவாக பிரிட்டன் படைகளை வேவு பார்க்க வந்திருக்கிறாள் என்று விசாரனையில் தெரியவந்தது. 



நியாயமாக உளவு பார்ப்பவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது தான் யுத்தக் கள மரபு. கைது செய்யப்பட்டவள் பெண் என்பதால் அவளை சுட யோசித்தனர். அப்போது, நான்ஸி “தாங்கள் தண்டிக்க தயங்கினால், அந்த பெண்ணை நான் சுட்டுக் கொன்றுவிடுவேன்” என்று கூறினாள். 

பொதுவாக, உளவாளிகளுக்கு தண்டிக்க உரிமைக் கிடையாது. தகவலை சேகரித்து கொடுப்பது மட்டுமே வேலை. ஆனால், நடப்பது இரண்டாம் உலக யுத்தம். மாட்டிய உளவாளி ஹிட்லருக்கு ஆதரவாக செயல்ப்படுபவள். அவளுக்கு கருணைக் காட்டக் கூடாது என்று நான்ஸி நினைத்தாள். 

கைது செய்யப்பட்ட பெண்ணும் நான்ஸிக்கு சலைத்தவள் அல்ல. தான் உளவு பார்க்க வந்ததை தைரியமாக ஒத்துக் கொண்டாள். அவள் முகத்தில் எந்த விதமாக அச்சமோ, களேபரமோ இல்லை. ஹிட்லருக்காக பணி செய்த பெருமிதம் அவள் முகத்தில் இருந்தது. எந்த வித கொடுமைகளை கொடுத்தாலும், எதிர்க் கொள்ள தயாராக இருந்தாள். 

நான்ஸி அந்த பெண்ணுக்கு உணவளித்தாள். பிறகு அவளிடம், “உன்னை இங்கு வைத்திருப்பது எங்களுக்கு ஆபத்தானது. யுத்த தர்மப்படி நாங்கள் உன்னை சுட்டுக் கொள்ளப் போகிறோம்” என்றார். 

அந்த பெண் மரணத்திற்கு அஞ்சவில்லை. மரணத்திற்கு துணிந்து தான் பிரிட்டனை வேவு பார்க்க வந்தாள். உணவு உண்டப் பிறகு, அந்தப் பெண் தனது ஆடைகளைக் கலைத்து நிர்வாணமாக நின்றாள். பாதுகாப்புக்காக இருந்த ஆண்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இறக்க போகும் பெண் இப்படி ஒரு காரியத்தை எதற்காக செய்தாள் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. இங்கிருக்கும் ஆண்களை கவரவா, கவனத்தை தன் மீது ஈர்க்கவா அல்லது இறக்கும் முன் யாரையாவது உடலுறவு அழைக்கவா? நிச்சயம் இல்லை. ஹிட்லருக்காக எதை வேண்டுமானாலும் செய்பவள் என்பதையும், தான் எதற்கும் துணிந்தவள் என்பதையும் காட்ட இந்த பெண் அப்படி நடந்துக் கொண்டாள். 

அந்த பெண் “ஹெய்ல் ஹிட்லர்” என்று கூற, நான்ஸி அவளை சுட்டார். அவள் இறக்கும் வரை உண்மையான நாஜியாக அந்த பெண் இருக்க விரும்பினாள். அவளை சுட்டத்திற்காக நான்ஸி வருத்தப்படவில்லை. பெருமைப் பட்டுக் கொண்டார். 

நான்ஸி கையால் இறக்கப்பட்ட பெண் முக்கியமில்லை. யுத்தக் களத்தில் ஆண்கள் செய்ய தயங்கியதை துணிச்சலாக செய்த நான்ஸி தான் நமது உளவு ராணி. அவளது முழுமையான பெயர் நான்ஸி வேக். 

உண்மையான நாஜி பெண்ணை தனது கையால் கொன்ற சந்தோஷத்தை. ‘தி கைட்’ ( November 2, 1987) பத்திரிக்கைக்கு தனது நினைவோடை பற்றி பகிரும் போது நான்ஸி வேக் இப்படி பேட்டியளித்தாள்.

Thursday, August 20, 2015

மனைவி ஒரு தந்திரம் – மார்கிரேட் கெம்பில் கேஜ்

லிபர்டி புதல்வர்கள் லெக்சிகனில் இருப்பதாக தகவல் வந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அமெரிக்கர்கள் ரகசியமாக செயல்ப்படுகிறார்கள் என்பது ஜென்ரல் தாமஸ் கேஜ் அவ்வப்போது தகவல் வந்துக் கொண்டு தான் இருந்தது.  
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு முன் லிபர்டி புதல்வர்களை சிறு துசி என்று நினைக்க முடியாது. அமெரிக்க ரகசிய புரட்சி படையினர் எப்போது வேண்டுமானாலும் தலைவலியாக மாறக் கூடியவர்கள் என்பது ஜென்ரல் தாமஸூக்கு தெரியும். லிபட்டி புதல்வர்களை அப்படியே விட்டால் பெரிய புரட்சி இயக்கமாக மாறிவிடும். அவர்களை கைது செய்து’ ஒட்டிக்க வேண்டும் என்று ஒரு படையை ஜென்ரல் அனுப்பி வைத்தார். 

அமெரிக்காவில் புரட்சிப் படையினர், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்று குழம்ப வேண்டாம். இந்த உளவு ராணி இருந்த காலக்கட்டம் 18ஆம் நூற்றாண்டு. அப்போது, அமெரிக்காவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சாராசரி அடிமை தேசம் தான். தங்கள் விடுதலைக்காக ’லிபர்டி புதல்வர்கள்’ (Sons of Liberity) என்ற இயக்கத்தை நடத்திவந்தார்கள். 



ஜென்ரல் தாமஸின் இலக்கு லிபர்ட்டி புதர்வர்களான ஜான் ஹென்காக்கும், பால் அடம்ஸ் தான். இவர்களை கைது செய்து மற்ற லிபர்ட்டி புதல்வர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும். புரட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மரண தண்டனையை கொடுக்க வேண்டும் என்பது தான் ஜென்ரல் தாமஸின் திட்டமாக இருந்தது. ஒரு அடிமை தேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜென்ரல் இது கூட நினைக்கவில்லை என்றால் எப்படி. ஆனால், நடந்தது அனைத்து தலைக்கிழாக இருந்தது. 

லிபர்ட்டி புதல்வர்களை கைது செய்ய சென்ற பிரிட்டிஷ் வீரர்களுக்கும், அமெரிக்க புரட்சிப் படையினர்களுக்கு கடுமையான துப்பாக்கி சுடு நடந்தது. பிரிட்டிஷ் வீரர்கள் வருகை அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பது அவர்களின் தாக்குதலில் தெரிந்தது. அமெரிக்க புரட்சி படையினர்களை விட பிரிட்டிஷ் இராணுவ பக்கத்தில் அதிக இழப்புகள். மரணங்கள். 

எங்கிருந்து அமெரிக்கர்களுக்கு ஆயுதம் கிடைத்தது ? துப்பாக்கி பவுடர்களை எப்படிப் பெற்றார்கள் ? எப்படி இவர்களால துள்ளியாக தாக்க முடிந்தது ? என்று பல கேள்விகளை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஜென்ரல் தாமஸை கேட்டனர். 

அதற்கு பதில் அளிப்பதை விட அவர் மனது அவரிடம் ஒரு கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தது. 

பிரிட்டன் இராணுவப் படை லிபர்ட்டி புதல்வர்களை கைது செய்ய வருவதை யார் தகவல் கொடுத்தார்கள் ? ரகசியமான தகவல் எப்படி கசிந்தது என்பது தான். 

அதற்கான விடையை அவருக்கு கிடைக்கும் போது அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளாக இருக்கக் கூடாது என்று தாமஸ் மனது நினைத்தது. ஆனால், அவளை தவிர வேறு யாரும் தகவல் கொடுத்திருக்க முடியாது. 

"நான் லிபர்ட்டி புதல்வர்களை கைது செய்ய படைகளை அனுப்பியது அவளுக்கு மட்டுமே தெரியும்" 

தாமஸ் ரகசிய திட்டத்தை உளவு பார்த்து கூறியது அவருடைய மனைவி மார்கிரேட் கெம்பில் கேஜ். தாங்கள் எதற்காக லெக்ஸிகன் செல்கிறோம் என்பதை சென்ற படைக்களுக்கு கூட தெரியாது. படையை நடத்தும் தளபதிகளுக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் தான் படையை வழி நடத்துபவர்கள். இந்த ரகசியத்தை வெளியே சொல்ல வாய்ப்பில்லை.

தளபதிகளிடம் திட்டத்தைப் பற்றி பேசும் போது அவரது மனைவியை தவிர வேறு யாருமில்லை. விளையாட்டாக வெளியே சொல்கிற விஷயமில்லை என்பது அவளுக்கு நன்றாக தெரியும். அதையும் மீறி எதற்காக வெளியே சொல்ல வேண்டும். தன் மனைவி தன்னுடைய வளர்ச்சி எதிராக செயல் பட்டுவிட்டாள் என்று தாமஸ் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

தன் கணவனை விட அவளுக்கு அப்படி என்ன முக்கியமாக தெரிந்தது ? பணம், பொருள்... நிச்சயம் இல்லை. தாய் நாடு. அது தான் அவளுக்கு முக்கியமாக இருந்தது. தாமஸ் இங்கிலாந்தை சேர்ந்தவனாக இருந்தாலும், மார்கிரேட் கெம்பில் அமெரிக்காவை சேர்ந்தவள். 

மார்கிரேட் கெம்பில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பிறந்தவள். அவளது தந்தை நியூ ஜெர்ஸியின் முக்கிய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என்பதால் தாமஸ் கேஜூடன் நல்ல நட்பு இருந்து வந்தது. அதனால், தனது மகள் மார்கிரேட்டை தாமஸூக்கு உறவை வலுவாக்கிக் கொண்டார். 

திருமணமாகி பதினெழு ஆண்டுகளாகிறது. பதினொரு குழந்தைகள். இருவருக்குள் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. சண்டை சச்சரவு இல்லை. தன் நாட்டை அடிமையாக நடத்துகிறார் என்று மார்கிரேட் கணவர் மீது கோபமாக பேசியது இல்லை. ஆனால், நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வை தொடரவிட்டால் அமெரிக்கா பல ஆண்டுகளானாலும் அடிமையாக இருக்கும் என்று மார்கிரேட் கெம்பில் நினைத்தாள். அதனால், புரட்சியாளர்களை காப்பாற்ற தனது வாழ்க்கைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மருத்துவர் ஜோசப் வாரேன் என்பவரிடம் தகவலை கூறினாள். 

ஜோசப் வாரேன் விரைந்து செயல்ப்பட்டு லிபர்ட்டி புதல்வர்களை எச்சரித்ததோடு இல்லாமல் குறுகிய நேரத்திற்குள் தாக்குதலுக்கு தயார் செய்தனர். ஜென்ரல் தாமஸின் திட்டம் தவிடுப் போடியானது. 

மார்கிரேட் கெம்பல் ஒரே இரவில் கணவனுக்கு எதிராக செயலப்பட வலுவான காரணம் இருக்கிறது. 

1765 – 73 பிரிட்டன் ஏழு வருடங்களுக்கு மேல் யுத்தத்தில் ஈடுப்பட்டதால் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அதனால், 1773ல் தங்களது அடிமை தேசத்தில் வரியை பெருக்கிறது. அமெரிக்காவில் போஸ்டன் நகரத்தில் டீ உற்பத்தி மிகவும் பிரபலம். டீ ஏற்றுமதிக்கு கடுமையான வரி விதித்தது. இதை, அமெரிக்கர்கள் எதிர்த்தனர். போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க நினைத்து தாக்கினார். பிரிட்டிஷ் இராணுவம் ”போஸ்டன் டீ பார்ட்டி” என்னும் போராட்டத்தை வெற்றிக்கரமாக அடக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். அதில் போராடியவர்களுக்கு தண்டனைக் கூட தரவில்லை. ஆனால், ‘லிபர்ட்டி புதல்வர்கள்’ என்னும் புரட்சிப்படை உருவாகக் காரணமாக இருந்தது. பின்னர், அதுவே மிகப் பெரிய புரட்சி இயக்கமான வளர்ந்தது. 

தனது தாய்நாட்டை காப்பாற்ற கணவனுக்கு எதிராக செயல்படுவதை நினைத்து மார்கிரேட் கவலைப்படவில்லை. வேறு யாராவது இப்படி ஒரு தவறு செய்திருந்தால் தாமஸ் மரண தண்டனை கொடுத்திருப்பார். ஆனால், உளவு பார்த்தது அவருடைய மனைவி. அவன் பதினொரு குழந்தைக்கு தாய். அவளை இங்கிலாந்து அனுப்பினார். 

நிலைமையை சரிச் செய்து தானும் இங்கிலாந்து செல்லலாம் என்று தாமஸ் நினைத்தார். ஆனால், நடந்தது எல்லாம் அவருக்கு எதிராக இருந்தது. பல வருடங்களாக பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்கா தங்கள் பிடியில் இருந்து நழுவிக் கொண்டு இருந்தனர். 

லெக்ஸிகன் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் புரட்சித் தீப்பரவத் தொடங்கியது. பல இடங்களில் யுத்தம் மூண்டது. இங்லாந்தில் பல இராணுவ வீரர்கள், ஆயுத தடவாளங்கள் அனைத்தும் கொண்டு வந்தனர். ஆனால், பலனில்லை. பிரான்ஸோடு யுத்தத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக சண்டைப் போட்ட அமெரிக்கர்கள் அல்ல இவர்கள். இப்போது தங்களுக்காக சண்டைப் போடுகிறார்கள். இவ்வளவு உத்வேகமாக, ஆக்ரோஷமாக அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள் என்று தாமஸ் நினைத்துப் பார்க்கவில்லை. இங்கிலாந்து பிடி தளர்ந்து விடக் கூடாது என்று பல வருடங்களாக போராடினார். ஒரு வருடம், இரண்டு வருடமல்ல… கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு மேல் இங்கிலாந்து இராணுவத்திற்கும், அமெரிக்க புரட்சியாளர்களுக்கும் யுத்தம் தொடர்ந்துக் கொண்டு இருந்தது. இறுதியில், அமெரிக்கப் புரட்சியினர் பக்கமே வெற்றி. 

அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க சுதந்திரப் போராட்டத்திற்கு ”போஸ்டன் டீ பார்ட்டி” புரட்சி தொடக்கப் புள்ளி என்றால், லெக்ஸிகன் தாக்குதல் சுதந்திரப் பாதைக்கு எடுத்துச் சென்ற வரைப்படம். வரலாற்று சிறப்பு மிக்க லெக்ஸிகன் தாக்குதல் அமெரிக்கர்களுக்கு சாதாகமாக அமைந்தது என்றால் அதற்கு தாமஸின் கைது நடவடிக்கையை உளவு கூறிய அவரது மனைவி மார்கிரேட் கெம்பல் ஒரு காரணம்.

 அமெரிக்காவை சுதந்திர நாடானப் பிறகு தாமஸ் இங்லாந்துக்கு திரும்பினார். பல வருடங்களாக யுத்தத்தில் ஈடுப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் தனது மனைவி மீது எந்த வருத்தமோ, கோபமோ அவருக்கு இல்லை. இறுதி வரை மார்கிரேட்டோடு தான் வாழ்ந்தார். 1787ல் உடல்நலக் குறைவால் இறந்தார். 

கணவர் இழந்து 37 வருடங்கள் சகல சௌபாக்கியங்களுடன் தனது பிள்ளைகளோடு வாழ்ந்து இறந்தாள். 

மருத்துவர் ஜோசப் வாரேனுக்கும், மார்கிரேட்டும் ரகசிய காதல் இருந்தது. அதனால் தான் கணவனுக்கு எதிராக இந்த தகவல் கொடுத்தார் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு தேசத்தை தலையெழுத்தை மாற்று வகையில் இந்த உளவு ராணி ஈடுப்பட்டிருக்கிறார். இதுப் போன்ற எதிர்மறையான கருத்துக்கள், பிரச்சாரங்கள் இருப்பது சகஜம் தான். அமெரிக்க சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாதப் பெண்மணியாக மார்கிரேட் கெம்பல் இருக்கிறார்.

 உதவியது 

http://www.biographi.ca/en/bio.php?BioId=36017 
http://thehistoryjunkie.com/margaret-kemble-gage/ http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/1508330/General-who-lost-his-wife-to-the-American-Revolution.html 
http://www.womenhistoryblog.com/2009/05/margaret-kemble-gage.html https://en.wikipedia.org/wiki/Margaret_Kemble_Gage

Thursday, July 23, 2015

உளவு ராணிகள் - புதிய தொடர் !!

உலகில் மிக ஆபத்தான ஆயுதம் எது ?

கத்தி. துப்பாக்கி. அணுகுண்டு. ரசாயனம். இன்னும் பிற ஆயுதங்கள் என்று பட்டியலிட்டு சொல்லலாம். உயிரை குடிக்க, துன்புருத்த எத்தனையோ ஆயுதங்கள் இருக்கிறது. பல நாடுகளுக்குள் இருக்கும் போட்டிகளில் இன்னும் பல ஆயுதங்களை கண்டு பிட்டிக்கத்தான் போகிறார்கள். மனித குலம் அழியும் வரை ஆயுத கண்டுப்பிடிப்புக்கு முற்றுப்புள்ளி வரப்போவதில்லை. 

ஆனால், இத்தனை ஆயுதங்களை விட மிக பெரிய ஆயுதம் ஒன்று இருக்கிறது. எல்லா ஆயுதங்களை விட மிக ஆபத்தாக ஆயுதம். உலகின் முதல் ஆயுதம். கடவுள் சொல்லுக்கு எதிராக ஆதாமை ஆப்பிள் பழத்தை உண்ண வைத்தது. மிக பெரிய ரோம் சாம்ராஜ்ஜியம் சரிய செய்தது. ராமன் இராவணன் மீது போர் தொடுக்க வைத்தது. இன்றைக்கும் பல சாமியார்களின் லட்சனம் வெளியே தெரியவருவது அந்த ஆயுதத்தால் தான். 

அந்த ஆயுதத்தின் பெயர்.... "பெண்". 

பெண் எப்போது தென்றலாக இருப்பாள். புயலாக இருப்பால் என்பது அவளுக்கு தான் தெரியும் என்று கவிதை நடையில் சொல்லலாம். பெண் எப்போது ஆயுதமாக இருப்பாள், ஆபத்தாக இருப்பாள் என்று அவளுக்கு தான் தெரியும் என்பதை எதார்த்த உண்மை நடையில் சொல்லலாம். அவள் மிக பெரிய சக்தி என்பது எல்லா மெகா சீரியலில் காட்டு உண்மை. நாம் அனைவரும் உணர்ந்த உண்மையும் அதுதான்.


அதேப் போல் உளவுத்துறையில் மிகப் பெரிய ஆயுதம் ‘பெண்’ தான். 

பத்து பேர் அடித்து துவைத்து கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையில் கொண்டு வந்துவிடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெற வேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையில் பெற்றுவிடுவாள். பணத்தில் மயங்காதவன் கூட அவள் அழகில் மயங்கிவிடுவான். 

பத்து எதிரிகளை கூட அடித்து வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது மிக பெரிய விஷயம். பல ஆண்களில் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம். 

நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை உளவு பார்ப்பது மிக அவசியமானது. அவர்களின் ரசகசியத்தை தெரிந்துக் கொள்வது நல்லது. இதில் நேர்மை, நியாயம், தர்மம் என்பது கிடையாது. எதிரியின் ஜாதகம் நமது கையில் இருந்தால் தான் நமது ஆயுள் ரேகை நீண்ட நாள் இருக்கும். எதிரிக்கு சுக்ர யோகம் அடித்தால், நமக்கு ராகு, கேது சேர்ந்து நம் நாட்டின் மீது மானாட மயிலாட ஆடிவிடுவான். 

தர்மத்தை நிலை நாட்ட மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரும் அதர்மத்தை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. இன்றைய உலக அரசியலும் நம் நாட்டின் பாதுகாப்புக்கு சில அதர்ம வழியில் செல்ல வேண்டியதாக தான் இருக்கிறது. 

இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லமால், கற்பு, மொழி, உறவு போன்ற விஷயங்களை கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நரக கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தகவல் சேகரித்து வெற்றிக்கரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். 

இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை. நினைவுசின்னம். வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை. பூங்கொத்தில்லை. எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும்.

தகவலுக்காக சில தருதலைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று திருமணம் செய்துக் கொள்ள நேரிடும். காதல், கணிவு, கருணை அனைத்தும் மறக்க வேண்டியதாக இருக்கும். பெண்ணுக்கு உண்டான அனைத்து மேன்மை குணங்களை இழக்கும் சூழ்நிலை உருவாகும். அனைத்தையும் தைரியமாக எதிர்க் கொண்டு நாட்டுக்காக தகவல் சேகரித்தவர்கள். 

அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ உளவு ராணிகள் பற்றிய தொடர் இது.

Friday, July 17, 2015

‘மாரி’ போனாலும், ‘மாறாமல்’ தொடரட்டும் !!

உண்மையில் தனுஷ் வீட்டில் அதிஷ்ட தேவதை ரூம் போட்டு தங்குகிறாள் என்று நினைக்கிறேன்.

அழகில்லாத முகம், ஒல்லியான உடல்... ஆனால், முன்னனி நாயகனாக இருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளை.

பாடத் தெரியாத குரல்... ஆனால், அவர் பாடினால் பாடல்கள் ஹிட்டாகிறது.

சில சமயம் பிரபல பாடலாசிரியர்கள் எழுதிய பாடல் கூட மொக்கையாக அமைவந்துண்டு. இவர் எழுதிய ‘கொலைவெறி’ பாடல் உலகமே பாடியது.

பணம் இருக்கிறதே என்று படம் தயாரித்தார்... தேசிய விருதோடு வசூல் குவிந்துக் கொண்டு இருக்கிறது.

அவருக்காக வேலை செய்ய ஒரு டீம் உருவாக்கியிருக்கிறார்.

நண்பர்கள் விமர்சனத்தை பார்க்கும் போது ‘மாரி’ சுமார் படமாகத் தான் தெரிகிறது. ஆனால், அடுத்த மூன்று நாட்களில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல்.

எல்லாவற்றை கற்றுக் கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் கமலஹாசன் என்றால், சினிமாக்குள் வந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவர் தனுஷ் !!

தனுஷூக்கு  ‘மாரி’ போனாலும், ‘மாறாமல்’ வெற்றி தொடரட்டும்.

Thursday, July 16, 2015

பாகுபலி - திரை விமர்சனம்

பிரமிக்க வைக்கும் பிரமாண்டம். எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தியளவில் தன்னை முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார். ஒரு படத்தை இரண்டு பாகமாக வெளியீட்டு லாபம் சம்பாதிக்கும் உத்தியில் வெற்றிப் பெற்றுயிருக்கிறார். ( ரத்த சரித்திரம் 1, 2ல் ராம்கோபால் வர்மா சறுக்கிய இடம்). 

அடிமைப் பெண் + மஹாபாரதம் சேர்ந்த கலவை தான் கதை. சொதப்பல் திரைக்கதையான ‘மித்’ படத்தை அபாரமான ’ மஹதீரா’ வாக எடுத்தவருக்கு, அடிமைப் பெண் படத்தை ‘பாகுபலியாக’ எடுப்பதில் பெரிய விஷயமில்லை. 

இரண்டாம் பாகம் வரும் வரை இது முழுமையான திரைக்கதை இல்லை என்பதால் அதைப்பற்றி இங்கு பேச விரும்பவில்லை. 

படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எனக்கு தெலுங்கு படத்தை தமிழில் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் காட்சிகள். தூதுவன் ஒருவனை தேடும் இடத்தில் பாட்டு, பல இடங்கள் வசனங்கள் உதடு ஒட்டாமல் இருப்பது, கதாநாயகனை போர் வீரனாக காட்டுவதை விட சூப்பர் ஹீரோவாக காட்டும் முயற்சி... எல்லாம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படம் தான். இந்த படத்தை தெலுங்கில் பார்த்திருந்தால் அதிக பாதிப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக பாகுபலி-2 தெலுங்கில் தான் பார்க்க வேண்டும்.

‘நான் ஈ’யில் சந்தானத்துக்கு இரண்டு காட்சிகள் வைத்து, ’தமிழ் படம்’ என்று நம்ப வைத்த்திருப்பார். அந்தளவுக்கு அடிப்படை வித்தியாசத்தை கூட இதில் கொடுக்கவில்லை. சத்யராஜ் இருப்பதால் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவர் இரு மொழி நடிகனாகி நீண்ட நாட்களாகிறது. 

’மஹதீரா’வில் ராம் சரண் சண்டையின் போது இருக்கும் வீரம் பிரபாஸிடம் இல்லை என்றோ தோன்றுகிறது. ராம்சரண் ‘மஹதீரா’வில் நூறு பேரை வீழ்த்தும் போது ஏற்படுத்திய பிரமிப்பு பிரபாஸ் ஆயிரம் பேர் வீழ்த்தும் போது வரவில்லை. உடல்மொழியிலும், பேச்சிலும் இரண்டு பாத்திரத்திற்கும் பிரபாஸ் வித்தியாசமில்லை. 

மிர்ச்சி, ரேபுல், பில்லா போன்ற படங்களில் நடித்தது போலவே சாதாரனமாகவே நடித்துவிட்டார். 2.5 வருடம் தனது கால்ஷிட் கொடுத்து, உடலை மெருக்கேற்றியளவிற்கு ராஜாக் காலத்துக்கு கதைக்கு பிரபாஸ் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 



பாகுபலிக்கு சரியான தேர்வு ராம்சரண் தான். ஒரு வேளை தமிழ், தெலுங்கு (இரு மொழி) படமாக முன்பே திட்டமிட்டிருந்தால் ‘நாகர்ஜூனா’ அல்லது ’சூர்யா’ சரியான தேர்வு. இவர்களில் 2.5 வருட கால்ஷிட் கிடைப்பது சிரமம் என்பது வேறு விஷயம். தெலுங்கில் எடுத்து முடித்த பிறகு இரு மொழிப்படம் என்று வணிகத்திற்காக விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. 

போர்க்களத்தில் இருக்கும் வில்லனின் நடிப்பும் அப்படி தான். ’மஹதீரா’வில் ஸ்ரீஹரி ராம்சரண்னை கொல்ல நூறு பேரை அனுப்புவார். ஒரு கட்டத்தில் ராம்சரண் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பார். தனது படை வீரர்கள் இறப்பதை விட ராம்சரணின் வீரத்தை ரசிப்பார். கண்ணிலும், குரலிலும் மனுஷன் பின்னியிருப்பார். இதில் முகத்தில் சாயம் பூசப்பட்ட எதிரி (சாய்குமார் என்ற நினைக்கிறேன்). ஒரே மாதிரியான முகபாவனை. தனது படை எதிரி படைகளை தும்சம் செய்யும் போது சரி, இரண்டு இளவரசர்கள் தன்னை தாக்க வரும் போது சரி ஒரே மாதிரியான முகப்பாவனை. கோபம், ஆவேசம், அச்சம் காட்ட வேண்டிய எதிரி பாத்திரத்தை முகத்தில் சாயம் பூசி நடிக்க வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். 

டெக்கினிக்கலான விஷயத்தில் அதிகமாக கவனத்தை செலுத்தியதால் இப்படி ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பற்றி தனி பதிவாக சொல்ல வேண்டும். இந்த படத்தை முழுமையாக நடித்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். 

அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் மிரட்டுவார் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முன் ’ருத்ரமாதேவி’ வந்துவிட்டால், ரசிகர் அனுஷ்காவை அந்த படத்தோடு தான் ஒப்பிடுவார்கள். ராஜமௌலிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். 

எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் (நாவல்), பானிபட் யுத்தம், வீர சிவாஜி போன்ற கதைகளை திரைப்படமாக எடுக்கும் நம்பிக்கையை ‘பாகுபலி’ கொடுத்திருக்கிறது. பல சரித்திரக்கதைகளுக்கு திரைக்கதை அமைக்கப்படலாம். அதற்கான வணிகமும் இருக்கிறது என்பதை ராஜமௌலி சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே அவரை வாழ்த்த வேண்டும்.

Tuesday, July 7, 2015

பெரியார் ரசிகன் – வசீகரனின் எதிர்வினை

அன்புக்குரிய குகனுக்கு வணக்கம்,

தங்களது “பெரியார் ரசிகன்” என்ற 160 பக்க புதின நூலை படித்து மகிழ்ந்தேன். இது தங்களின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தவித சிந்தனைத் தடுமாற்றமும் இன்றி கதையை சொல்லிக் கொண்டு போகும் கலை தங்களுக்கு கைவந்து இருக்கிறது. எழுத்தாளன், கவிஞன் ஆவதற்கென்றே தமிழ்மொழி மீது ‘ஈர்ப்பு’ கொண்டு குறுகிய காலத்தில் கற்று தேறி உள்ளீர்கள் என்பதை எண்ணி வியந்து பாராட்டுகிறேன்.


கதை நூலுக்கு “பெரியார் ரசிகன்” என்ற பெயர் பொருத்தமில்லை என்பது என் கருத்து. பெரியாரை நேசிக்கும் ஒரு மனிதரின் எண்ண மன ஓட்டத்தை கதையாகப் பதிவு செய்து இருக்கின்றீர்கள். இதுவும் நல்ல உத்தி தான். அவனுடைய பள்ளிப் பருவத்தில் இருந்து தொடங்கி தந்தையை இழந்து மாமாவின் ஆதரவோடு வாழ்க்கைப் போராட்டத்தில் குதித்து நீந்திச் சென்று கொண்டிருக்கும் காட்சிகளில் ஆரம்ப அத்தியாயங்கள் கடந்து செல்கின்றன. ஒன்றாவது அத்தியாயத்துக்கு ‘முன்னதாக முன்னுரைப் போன்று சுழியம் அத்தியாயமாக ஒர் அத்தியாயத்தை இணைத்து இருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த அத்தியாயம் தேவையற்றது. நீக்கி இருக்கலாம்.

முதல் அத்தியாயத்தில் தன் கதையை கூறும் துவங்கிச் செல்கிறது. 1950 குடியரசு தின தொடக்க நாளன்று நாயகன் பிறப்பதாக அமைத்து இருப்பது அதைத்தொடர்ந்து காலக்கட்டத்தை நிறுவும் வகையில், அண்ணாவின் வெற்றி, மரணம், இந்திரா காந்தியின் மறைவு, எம்.ஜி.ஆர் மறைவு என்று அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். போற்றுகிறேன். ‘இந்த உலகத்தில் இன்று நான் சிறைப்பட்டேன்’ என்று தன் பிறப்பைச் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்க வரி. 

ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்கி எதையோ சுவையாகச் சொல்லிக் கொண்டே போனாலும் கூட கதை எதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்பதை நெடுநேரம் யூகிக்கவே முடியவில்லை என்பது புதினத்தின் குறையாகவே தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாத்தையும் போரடிக்காமல் கொண்டு சென்ற காரணத்தினால் வாசகன் சலிப்படைவதில் தப்பிக்கிறான். ஒரு புதினத்துக்கு குறைந்த பட்ட கால்பங்கு நகர்வுக்கு பின்பாவது அதன் மைய இழை கோடிட்டுக் காட்டப்பட்டால், அதன் விறுவிறுப்பு மேலோங்கி நிற்கும். அந்த உத்தியை தாங்கள் பின்பற்றாத காரணத்தினால் சற்று உப்பு உறைப்பு குறைகிறது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது. 

ஒரு சராசரி மனிதனின் சமாளிப்புகளுடான சம்பவங்களே இந்தக் கதையின் மையம் என்று தாங்கள் நேரில் விளக்கம் தந்து இருந்தீர்கள். அதை ஏற்கிறேன். எந்த ஒரு மனிதனும் திரைப்பட நாயகன் மாதிரி எல்லா விசயங்களிலும் அசகாய சுரனாக இருந்து விட முடியாது என்ற கண்ணோட்டத்தில் படிக்கிற போது ஒரு வாசகன் நிச்சயம் இந்தப் புதினத்தைப் போற்றி ஓரிடத்தில் தருவான். 

ஆங்காங்கே பகுத்தறிவுக் கேள்விகளை, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பதிவு செய்து கொண்டு செல்கிறீர்கள். நாயகன் பெரியாரின் ரசிகனாக மாறுகிறான் என்பதை பதிவு செய்யப்படுவதற்குள்ளேயே பாதிக்கதை கடந்தோடிவிடுகிறது. துணிச்சலாக நிமிர்ந்து நின்று தாலிகட்டாமல் பகுத்தறிவு திருமணம் செய்து கொள்வதும், அதையே பின்பற்றி தன் மகனது திருமணத்தை நடத்தி வைப்பதுமாக சென்ற நாயகன், மகள் திருமணத்தில் ஒரு தந்தையாக மட்டும் நின்று தடுக்கிவிழுந்து விடுகிறார் என்பதையே உச்சக்காட்சியாக பதிவு செய்து இருக்கிறீர்கள். அதையே கதையில் போக்கில் அந்த உயர்குல சம்மந்தி சொல்கிற நிபந்தனைகளுக்கெல்லாம் சிறு திருத்தமும் கூட சொல்லாமல், எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏன் என்பது புரியவில்லை. தன் சொந்தக்கருத்தை பதிவு செய்யாமல் ஒரு பகுத்தறிவாளனால் விட்டுக் கொடுக்க முடியும் என்பதும் பகுத்தறிவுக் கேள்வி தான். 

மாண்டவர் மீண்டும் வந்து தனக்கே மகனாக மகளாக பிறப்பார் என்பது ஒரு பகுத்தறிவாளனின் நம்பிக்கையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ’பெரியார் ரசிகன்’ தானே அதை நம்பிக்கையுடன் கூறி ஏற்கிறார். அம்மாவே மகளாக வந்து பிறந்து இருப்பதாகச் கூறுகிறார். அது ஆன்மிக நம்பிக்கை என்பதே உண்மை. நிறைவு வரியில் கூட, “அப்பா எனக்கு மகனாகப் பிறப்பார்” என்று நாயகரின் மகள் கூறுவதாக நிறைவு பெறுவதும் பகுத்தறிவுக்குப் பொருந்துவது எப்படியோ தெரியவில்லை. ஆனால், தன் கொள்கைகளை தன் மகளுக்காக விட்டுக் கொடுத்து அடக்கி வைத்திருந்த ஆத்திரமே அவரது மரணமாக வெளிப்பட்டுள்ளது என்பது கதைக்கு சரியான நிறைவு தான். 

மாமா, தமிழாசிரியர், இஸ்லாமிய நண்பன், கிறிஸ்துவ நண்பன், பிராமண காதலி என்று பல்வேறு பாத்திரப் படைப்புகள் கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கின்றன. பல சூழல்களில் திறமையான வாதங்களால் கதையை அழகாக நகர்த்திச் செல்லும் உத்தி உங்களுக்கு கைவசம் வந்து இருக்கிறது. 

பெரியாரின் கொள்கைகளை பதிவு செய்து ஒரு புதினம் எழுதுவது என்பது ஒரு கடினமான செயல். அதை சுலபமாகவும், துணிச்சலாகவும் செய்து இருக்கின்றீர்கள். பாராட்டிப் போற்றுகிறேன். 

தங்களது அடுத்த புதினம் இதனினும் சுவை கூடி அமையும் என்பது திண்ணம். இந்நூல் பல பதிப்புகள் காண்ட்டும். 


நன்றி. 
வாழ வளர்க வெல்க, 

வசீகரன்
பொதிகை மின்னல், ஆசிரியர் 
30.6.2015




LinkWithin

Related Posts with Thumbnails