வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 30, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 2

ஒரு அடர்ந்த காடு. மற்றக் காட்டைப் போல இந்த காட்டிலும் சிங்கம் தான் ராஜாவாக இருந்தது. அதன் கீழ் மூன்று தந்திர நரிகள், ஒவ்வொரு நரிக்கும் கீழ் நான்கு வேட்டை நாய்கள் இருந்தது. 

சிங்கத்தின் ஆணைக்கிணங்க ஒரு நரியின் தலைமையில் நான்கு வேட்டை நாய்கள் வேட்டைக்கு சென்று வேடையாடி வர வேண்டும். இந்த பதினைந்து மிருகம் ( 3 நரி + 12 வேட்டை நாய்) கொண்டு வரும் உணவை மற்ற விலங்குகள் உணவாக உண்டு வந்தது. அதற்காக மற்ற விலங்குகள் வேலை செய்யாமல் இல்லை. தங்கள் தகுதிக்கு தகுந்த உணவை வேட்டையாடுவதும், மீதி உணவை பராமரித்து அடுத்த வேளைக்கு உணவாக பயன்படுத்தும் வேலையை செய்து வந்தது. ஆனால், உணவுக்கு இந்த பதினைந்து பேர் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. 



மூன்று நரிகளில் யார் சிறந்த நரி என்று தேர்வு செய்து, அதில் ஒன்றை தலைமை மேலாளராக நிர்வாகம் செய்ய சிங்கம் தீர்மாணித்தது. அதனால், ஒவ்வொரு குழுவிற்க்கு உணவு இவ்வளவு கொண்டு வர வேண்டும் என்று நிர்ணயம் செய்தது. 

மூன்று நரி குழுவும் தங்கள் திறமையை பயன்படுத்தி வேட்டை நாய் உதவியோடு பல விலங்களுகளை வேட்டையாடி உணவாக கொண்டு வந்தது. சிங்கத்தை சந்தோஷப்பட்டு நரிகளும் வேட்டை நாய்யை முடிந்த வரை வேலை வாங்கியது. 

எந்த நரி சிறந்தது என்று சிங்கத்தால் தீர்மாணிக்க முடியவில்லை. மூன்று நரிகளும் திறமையால் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது கிடையாது. பிறகு ஒரு யோசனை தோன்றியது. நரிக்கு கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்யை தனியாக அழைத்து பேசியது. 

அதில், முதல் நரி கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள் நரி தங்களில் ஒருவரகாக பழகுகிறது. அதனால், அவரின் தோழமைக்காக அவர் சொல்லும் வேலையை செய்கிறோம் என்றது. 

இரண்டாவது நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், தங்கள் வேட்டையாடிய விலங்குகளில் இருந்து ஒரு பகுதியை வெகுமதியாக கொடுக்கும். அதனால், வேட்டையாட உத்வேகமாக இருந்தது என்றது. 

மூன்றாவது நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், தங்களை விட நரி தான் அதிக மிருங்களை வேட்டையாடும். தலைமையில் இருப்பவர் இவ்வளவு வேட்டையாடும் போது, அவருக்கு கீழ் இருக்கும் நாம் எவ்வளவு விலங்களுகளை வேட்டையாடிக் காட்ட வேண்டும் என்று கூறியது. 

சிங்கம் மூன்றாவது நரியை தலைமை நரியாக அறிவித்தது. 

Management நீதி : 
தோழமையோடு பழகுவதும், லாபத்தில் பங்கு தருவது எல்லா தலைமையில் இருப்பவர்களால் செய்ய முடியும். ஆனால், தங்கள் கீழ் வேலை செய்பவர்களுக்கு நிகராக உழைத்து, அவர்களுக்கு உத்வேகம் அளிப்பது போல் உழைத்துக் காட்டுவது மிக அரிதான தலைமை பண்பு.

Thursday, April 23, 2015

ஓ.. காதல் கண்மணி - விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு காதலை காதலிக்க வைத்தப்படம். 

முதல் முறையாக சாருவின் விமர்சனத்தோடு நான் ஒத்துப்போகிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ”படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் நான் எழுதியது போல் உணர்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் என் வாழ்வில் நடந்திருக்கிறது.” என்று சாரு கூறியிருக்கிறார். 

நான் அதற்கு ஒரு படி மேல் சொல்ல வேண்டுமென்றால் “எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும் என்று நினைத்தேனோ... அப்படியெல்லாம் ஆதி பாத்திரத்தின் மூலம் காதலிக்க வைத்து காட்டியிருக்கிறார்”. இந்திய சினிமாவில் காதலையும், காமத்தையும் தனித்தனி பிரித்துக் காட்டி பழக்கப்படுத்திவிட்டனர். பார்வையாளனையும் அதை ஏற்க வைத்து இளைய சமூதாயத்திற்கு பெரிய சாபமாக மாற்றிவிட்டனர். மணிரத்னம் இந்த மரபை “ஓ.காதல் கண்மணி’ யில் உடைத்திருக்கிறார். காமத்திற்கு பிறகு வருவது தான் உண்மையான காதல். அதை இந்தப்படத்தில் பார்க்க முடிகிறது.



Living Together - ஒன்றாக வாழலாம். அனைத்தும் பகிர்ந்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போகலாம். உறவில் எந்த உத்திரவாதம் கிடையாது. ஆறு மாதமாக ஒன்றாக வாழ்ந்து, காமத்தை ரசித்தப் பிறகு பிரியும் தருவாயில் காதல் வெளிப்படுகிறது. (இதே கதையமைப்பில் பத்து படமாவது வெளிவரும்) 

இரண்டாம் பாதி பலர் குப்பை என்று கூறினார்கள். நான் ஆதியாக படத்தில் பயணித்ததால் தாராவின் கண்ணீரை துடைக்கவும், தலைமுடிக்குள் விரலால் வருடவும், Dependent Husband விசாவில் அவளோடு செல்லவே விரும்பினேன். நித்யாமேனன் ரசிகனாக மாறிவிட்டேன். காஞ்சனா – 2 இந்த நினைப்பு மாறலாம். ( அடுத்த இரண்டு வருடங்களுக்கு விஜய், அஜித், சூர்யா, படங்களில் நடிக்க ஒரு நாயகி கிடைத்துவிட்டார்.) 

திருமணத்திற்கு முன் வரும் காதலில் நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் வெளிப்படுத்த தோன்றும். அந்த ஒரு நிமிடம் தவறவிட்டால் மீண்டும் அந்த நிமிடம் கிடைக்குமா என்ற பயன் ஒட்டியிருக்கும். அப்படி நினைத்த போழுது காதலை காட்டிவிடுவதால் பல காதல்கள் வெற்றிக்கரமாக திருமணத்தில் முடிகிறது. ஆனால், திருமணத்திற்கு பிறகு வரும் காதல் அப்படி இருப்பதில்லை. காதலில் திட்டமிட்டு வெளிப்படுத்தப்படுகிறது. இடம், பொருள், ஏவல், வவ்வால் எல்லாம் பார்க்க வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுகிறோம். காதலிக்க நமக்காக ஒரு இடம் இருக்கிறது. அங்கு காதலித்துக் கொள்ளலாம். முத்தமிட்டுக் கொள்ளலாம் என்று வந்த காதல் உணர்வை தள்ளி வைக்க வைக்கிறார்கள். காதலிக்கும் போது பார்க்காத நாகரிகம், திருமணத்திற்கு பின் ஒட்டிக் கொள்கிறது. இதனால், பல காதல் திருமணம் விவாகரத்தில் முடிகிறது. 

Living Together வரும் பிரச்சனை, சமூகப் பார்வை என்று டாக்குமெண்ட்ரி மாதிரி எடுக்காமல், காதலை மட்டுமே காட்டியிருப்பது சிறப்பு. 

இந்த படத்திற்கு 100 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றால் மணி ரத்னம் - 90, வைரமுத்து - 10, ஏ.ஆர்.ரகுமான் - 0 என்று கொடுப்பேன். அலைப்பாயுதே, ரோஜா, திருடா திருடி அளவில் பாதிக் கூட ஏ.ஆர் கொடுக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. ஒன்று, இரண்டு பாடல் கேட்கும் படி இருக்கிறது. அதற்கு ஏ.ஆர்.ரகுமான் தேவையில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ் போதும். ஏ.ஆர்.ரகுமான் என்றால் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாக இருக்க வேண்டும்.

மணிரத்னம் + ஏ.ஆர்.ரகுமான் + வைரமுத்து கூட்டனியில் வந்த பாடல்களில் பாதிப்பு இதில் இல்லை என்பது தான் வருத்தம். பின்னனி இசை மட்டும் நன்றாக இருக்கிறது. ”கடல்” படத்திற்கு கொடுத்தது போல் இல்லை என்பது தான் பெரிய ஆருதல். 

59 வயதில் இவ்வளவு இளமையோடு ஒருவனால் யோசிக்க முடியாம என்பது வியப்பாக இருக்கிறது. வசனம், காட்சி, பாத்திரம் அனைத்திலும் இளமை தெரிகிறது. வாழ்த்துக்கள் மணிரத்னம் சார் !! 

தமிழில் சிறந்த காதல் படங்களில் (இதயம், காதல் கோட்டை, அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா… ) வரிசையில் ”ஓ..காதல் கண்மணி” கண்டிப்பாக இருக்கும். 

குறிப்பு: இன்னும் நீளமாக வர வேண்டிய விமர்சனக் கட்டுரை. எழுதும் போது சுஹாசினி முகம் வந்து தொலைவதால், இதுவே அதிகம் என்று தோன்றுகிறது.

Tuesday, April 21, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 1

வேலையை மாற்றிக் கொடுப்பது

ஒரு வியாபாரி தனது வீட்டில் குதிரையும், கழுதையும் வைத்திருந்தான். வியாபாரத்திற்காக தனது பொருட்களை கழுதையின் முதுகு மீது கட்டுவான். குதிரை மீது தான் அமர்ந்தவாறு கழுதையின் இழுத்துச் செல்வான்.

பொருட்கள் எடுத்து செல்லும் எல்லா ஊரிலும் வியாபாரியின் பொருட்கள் நன்றாக விற்பனையானது. அந்த வியாபாரிக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதனால், வழக்கத்திற்கு மாறாக விற்பனைக்கு அதிகப் பொருட்கள் எடுத்துச் செல்லலாம் என்று தீர்மாணித்தான். 



அடுத்த நாள் வியாபாரத்திற்கு கழுதையின் மூதுகில் ஒரு மூட்டைக்கு பதிலாக இரண்டு மூட்டையை கட்டினான். கழுதையால் சுமக்க முடியாமல் பாதி வழியில் திணறியது. வேறு வழியில்லாமல் ஒரு மூட்டையை தான் சுமந்தவாறு குதிரையில் பயணம் செய்தான். சிறுது தூரம் சென்றதும் குதிரை கடிவாளம் பிடித்துக் கொண்டு மூட்டையை வியாபாரியால் சுமக்க முடியவில்லை. அதனால், இரண்டு மூட்டையை குதிரை மீது கட்டினான். 

குதிரையின் முதுகில் விற்பனை பொருட்கள் இருந்ததால் அந்த வியாபாரி குதிரை மீது அமர முடியவில்லை. வேறுவழியில்லாமல் கழுதை மீது அமர்ந்துக் கொண்டு பயணம் செய்தான். 

வியாபாரியின் எடையையை விட இரண்டு மூட்டைகளின் எடை குறைவாக இருந்ததால் குதிரை சந்தோஷமாக நடந்து வந்தது. ஆனால், இரண்டு மூட்டையை சுமக்க முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து வந்த கழுதை, வியாபாரியை சுமக்க முடியாமல் அங்கையே சோர்ந்து விழுந்தது. அதன் பிறகு வழக்கமாக சுமக்கும் ஒரு மூட்டை எடையைக் கூட சுமக்க முடியவில்லை. 

வியாபாரத்திற்கு சரியான நேரத்தில் சென்றால் தான் இரண்டு மூட்டை பொருட்களையும் அந்த வியாபாரியால் விற்பனை செய்ய முடியும். இப்போது ஒன்றுக்குமே உதவாக கழுதை என்ன செய்வது என்று யோசித்தான். 

வேறு வழியில்லாமல் கழுதையை அங்கேயே விட்டுவிட்டு குதிரையோடு நடந்து பயணம் செய்தான். யார் உதவி செய்ய முடியாததல் கழுதை அங்கையே இருந்தது. வியாபாரி நடந்து சென்றதால் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. 

Management நீதி : 
கழுதைக்கு கொடுக்க வேண்டிய வேலையை குதிரைக்கும், குதிரைக்கு கொடுக்க வேண்டிய வேலையை கழுதைக்கு கொடுத்தாலும் அந்த வேலை உருப்படாது. மேலும் அதிக வேலை தான் நமக்கு கொடுக்கும்.

Monday, April 20, 2015

காதல் கபடி !

Note : Inspired from பட்டுக்கோட்டை பிரபாகரின் “முதலாம் காதல் யுத்தம்” (சிறுகதை)


“விஷயம் தெரிஞ்சிடுச்சுல. அவன எப்படியாவது கட் பண்ணிடு” என்று போனின் எதிர்முனையில் குரல் கேட்டது. 

“என்ன.. கொலையா?” ஷாக்கானாள். 

 “கட் பண்ணனுமானா… கழட்டிவிடனும் சொன்னேன். இப்படி டியூப் லைட்டா இருக்க.அதான் அவன் உன் தலைமே நிக்குறான்” 

” சரி டி. “நாம லவ் பண்ண அப்புறம், எதுக்கு அவங்கள தனியா கொலை பண்ணனும்”. 

தனது தோழி இப்படி சொன்னதும் சொப்ணாவுக்கு சிரிப்பு வந்தது. எக்காரணத்திற்காகவும் தினேஷ்யிடம் சிரித்துவிடக் கூடாது என்பது தோழி யோசனை சொல்லியிருந்தாள். 

”சரி ! நா பேசிட்டு உனக்கு கால் பண்ணுறேன்.” என்று போன்னை துண்டித்தாள். சொப்ணாவுக்கு தினேஷ் மேல் கோபமாக இருந்தாள். அவள் தோழியின் யோசனை கேட்டப்பிறகு கோபம் அதிகமாகியிருந்தது. தினேஷ் பார்க்கிங் லாட்டில் வண்டியை வைத்துவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். அப்போது, கதவு திறக்கும் போது தினேஷ் மீது கதவு இடித்தது.

”சாரி சார்… சாரி சார்…” என்று பதட்டமாக ஹோட்டல் சேகியூரிட்டி கூறினான்.  
தினேஷ் கோபப்படாமல் சிரித்தப்படி “இட்ஸ்.. ஒகே” என்று நகர்ந்தான். எதையுமே கூலாக கையாள வேண்டும் என்று நினைப்பவன். தினேஷ் சொப்ணா அமர்ந்திருக்கும் டேபிள் நோக்கி வந்தான். 

 “ஹாய் ! சொப்ணா” என்று கூறி சிரித்துக் கொண்டே அமர்ந்தான். சொப்ணா முகத்தில் புன்னகையில் இல்லை. எரிச்சல் குடி புகுந்திருந்தது. எதோ விபரிதமாக பேசப் போகிறாள் என்பதை அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால், கோபத்தில் சொப்ணா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

”என்ன சொப்ணா ! வரச் சொல்லிட்டு எதுவும் பேசாம இருக்க” என்றான். 

 ”Can we breakup?” என்றாள் சொப்ணா. 

 “வாட் ?” தினேஷூக்கு அதிர்ச்சியாக இருந்தது. 



“நாம பிரிஞ்சடலாமானு இங்கிலீஷ்ல கேட்டேன்?” பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள். 

எந்த விஷயத்தையும் ஒன்று இரண்டு முறை சொன்னால் தான் தினேஷ் செய்வான் என்பது சொப்ணாவுக்கு தெரியும். ஆனால், பிரிய வேண்டும் என்பதை கூடவா இரண்டு முறை சொல்ல வேண்டும் என்பது சொப்ணாவுக்கு எரிச்சலாக இருந்தது. 

 ”நான் பேசிட்டேன் தினேஷ். நீ தான் இப்போ பேசமா இருக்க?” 

‘காபி சாப்பிடலாமா?’ என்கிற கேள்விக்கு ‘சரி’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ, கேள்வி தன் கேள்விக் குறியை அணிவதற்கு முன்பே பதிலைச் சொல்லிவிட முடியும். பல நாள் கைகளை வருடி கடற்கரை ரசித்த காதலியை எந்த காரணம் இல்லாமல் பிரியவதற்கு என்ன பதில் கூற முடியும். எப்போதும் போன்ற சந்திப்பு என்று தான் தினேஷ் நினைத்தான். இறுதி சந்திப்புக்காக சந்திப்பு என்பதை தினேஷ் எதிர்பார்க்கவில்லை. 

 இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம் என்ன ? இந்தக் கேள்விக்கு எப்படி உடனே பதில் சொல்வது? அதற்குக்குள் சர்வர் வந்து நின்றான். 

”சார் ! யுவர் ஆர்டர்” 

இரண்டு கேள்விகளுக்கு எந்த கேள்விக்கு பதிலளிப்பது தினேஷ் முழித்தான். 

முதலில் சர்வரை அனுப்புவோம் என்று, “இரண்டு ஸ்வீட் கார்ன் சூப்” என்றான்.  
“இல்ல.. எனக்கு ஸ்வீட் கார்ன் வேண்டாம். டோமேட்டோ ஹாட் சூப்” என்றாள்.

சர்வர் இருவரை பார்த்து சிரித்தான். அவன் சொப்ணாயை பார்த்து வழிந்தது, தினேஷ் கோபத்தை வர வழைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். 

 “ஹலோ ! சொல்யாச்சுல. ஸ்விட் கார்ன், டோமேட்டோ ஹாட் சூப் கொண்டு வாங்க..” என்று கூறி தினேஷ் சர்வரை அனுப்பினான். 

சர்வர் சென்ற பிறகு, “என்னோட இண்டர்ஸ்ட் தெரியாம நீயே எப்படி ஆர்டர் பண்ணுவ” என்று சொப்ணா சீறினாள். 

“உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமே சொன்னேன்.” 

“இப்போ புடிக்கல..” 

 “ஸ்வீட் கார்ன் சூப்பா… இல்ல நானா ?” என்றான் தினேஷ். 

சொப்ணா முறைத்தாள். 

“ஏன் சொப்ணா. என்னாச்சு ?” சொப்ணா மௌனமாக இருந்தாள். 

தினேஷ் மீது இருக்கும் கோபத்தை வெளியே காட்டிவிடக் கூடாது எச்சரிக்கை உணர்வா அல்லது பொது இடம் என்கிற உணர்வா என்று தெரியவில்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையை வீணாக்கக் கூடாது, அதே சமயம் சொல்ல வந்தது சரியாக சொல்லிவிட வேண்டும் என்பதில் சொப்ணா கவனமாக இருந்தாள். 

 ”நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”. கோபம் இப்போது அதட்டலாக மாறியிருந்தது. 

 ”நீயும் தான் சொல்லலை. பேசாம இரண்டு பேரும் காரணம் சொல்ல வேண்டாம். அப்படி சூப் குடிச்சுட்டு, பீச்சுக்கு போவோமா” என்றான். 

சொப்ணா தினேஷிடம் ரசிப்பது இந்த குணத்தை தான். எந்த பிரச்சனையையும் கேப்டன் தோனி போல் நடந்துக் கொள்வான். ஆனால், தற்சமயம் இந்த குணம் சொப்ணாவை கோபத்தை அதிகப்படுத்தியது. 

”நாம பிரியலாம் சொல்றேன். அதுக் கூட உனக்கு விளையாட்ட தெரியுதா..? 

“என்ன காரணம் சொல்லாம நீ பேசும் போது, எப்படி ரியாக்ட் பண்ணனும் தெரியல..” 

”காரணம் தெரியாதா?” 

”உன் மனதுசுல இருக்குற காரணம் தெரியாது.” 

” வசந்தி. அவ தான் காரணம். தோழி, தங்கச்சி மாதிரி சொல்லி தப்பிக்க பாக்காதே !” 

சொப்ணா கோபமாக பேசுவதை பக்கத்து டேபிள் இருக்கும் குழந்தை அமைதியாக பார்த்தது. தினேஷ் அந்த குழந்தையை பார்த்து சிரித்து ஒன்றும் நடக்காதது போல் காட்டிக் கொள்ள நினைத்தான். 

“கொஞ்சம் அமைதியா பேசு. இது ஹோட்டல். மத்தவங்க பாக்குறாங்க. அசிங்கமா நினைக்கப் போறாங்க” 

”நீ நடந்துக்கிட்டது அசிங்கமா இல்ல, நான் பேசறதுதான் அசிங்கமா இருக்கா?”

”ஒ.கே. ஒரு காலத்துல நா அவள காதலிச்சேன். அப்புறம் பிரிஞ்சிட்டோம். நா தேவதாஸ் அலையாம உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கிறது தப்பா ? ”

“நீ பண்ண தப்ப நியாயப்படுத்தா தினேஷ்?”

”தப்பே பண்ணல்ல. எப்படி நியாயப்படுத்த முடியும்!” சொப்ணாவின் கையில் ஹோட்டல் மேஜை மீது தட்டு மீது இருந்தது. கோபத்தில் தினேஷ் தலை உடைத்துவிடலாமா என்று யோசித்தாள். செய்த தவறை விட அவன் பேசிய நியாயம் தான் அவளுக்கு உருத்தலாக இருந்தது. சொப்ணா தினேஷிடம் இதற்கு மேல் பேச வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. 

”காதல் தப்பில்லனா. ரெண்டாவது காதல். மூனாவது காதல் எப்படி தப்பாகும் ?”

“பொறுக்கி தனத்துக்கு இப்படி ஒரு விளக்கத்த யாராலும் கொடுக்க முடியாது “

“இது பொறுக்கி தனம்னா. ஒரு கம்பேனியில வேலைவிட்டு அனுப்பும் போது இன்னொரு கம்பேனிக்கு வேலைக்கு போறவங்களும் பொறுக்கிங்களா ?”

 “அப்போ நா போனாலும் இன்னொருத்திய லவ் பண்ணுவ...” 

“சார் ! ஹார்ட் சூப் இல்ல. வேற ஏதாவது சூப் ?” சர்வர் இடையில் நுழைந்தான். மீண்டும் இரண்டு கேள்வி. எதற்கு பதில் சொல்வது ?. 

”சொப்ணா ! வேற எதாவது சூப் வேணும்னா சொல்லு…” என்று தினேஷ் கேட்டான். “நீ பதில் சொல்லாத வரைக்கும் சர்வர் உன்ன பார்த்து வழிவான்” என்று தினேஷ் மனதில் சொப்ணாக்கு சொல்லுவதுப் போல் சொல்லிக் கொண்டான். 

 “எனக்கு ஹாட் சூப் தான் வேணும்” என்று சொப்ணா உறுதியாக கூறினாள்.

“மேடம் ! எல்லா சூப்புமே ஹாட்டா தான் இருக்கும்”. சொப்ணா கோபம் இன்னும் தலைக்கேறியது. 

 “இருக்குற பிரச்சனையில் இவன் வேற நேரம் காலம் தெரியாம மொக்கை பொடுறான்.” ஒரு வேலை சொப்ணாவை பிரிய நேர்ந்தால் கண்டிப்பாக இந்த சர்வரை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ”யோவ் ! நான் ஆர்டர் பண்ண ஸ்வீட் கார்ன் சூப் மட்டும் கொண்டு வா…” என்று சர்வரிடம் கோபமா கூறி அனுப்பினான். 

பக்கத்து டேபிள் குழந்தை கையில் இருப்பதை சாப்பிட்டப்படி கூர்மையாக கவனிக்கிறது. சர்வர் சென்றப் பிறகு, “பி பிராக்டிக்கல் சொப்ணா” தினேஷ் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான். 

”நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் மறைச்சிருப்பியா?” மீண்டும் அதே கேள்வியை சொப்ணா கேட்டாள். 

”ஷ்யூர்! சொல்லுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல.” 

”ஆமா. பல பேர காதலிக்கிறது ஆம்பளைகளுக்கு பெரிய விஷயம் இல்லாம இருக்கலாம். பொம்பளைக்கு அப்படியில்ல” 

”நீ எவ்வளவு கோபப்பட்டு பேசினாலும் இந்த விஷயத்துல எனக்கு கோபம் வராது சொப்ணா”. தினேஷ் சிரித்துக் கொண்டே கூறினான். 

”என் கோபம் நியாயமானது நீ ஒத்துக்கிற” 

”அர்த்தமில்லாத கோபம். நா பெரிசா எடுத்துக்கல” 

”முதல் காதல் விஷயத்த விட நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு.” 

”உன் கேள்வி தாக்குதல்ல இருந்து என் தற்காப்பு பண்ணிக்குறேன்.” 

”செஞ்ச தப்புக்கு சாரி சொல்லும் நாகரிகம் இல்ல. குறைஞ்ச பட்சம் வசந்தி பிரிஞ்ச காரணத்தையாவது விளக்கி நியாயப்படுத்துவ எதிர்ப்பார்த்தேன். அதுவும் செய்யல. யூ டிஸ் அப்பாயிண்டட் மீ” 

”காரணத்த தெரிஞ்சு என்ன பண்ணப் போற சொப்ணா ?” 

“எந்த காரணத்துக்காக வசந்திய பிரிஞ்சியோ அதே காரணத்துக்காக என்ன பிரிய மாட்டேனு என்ன நிச்சயம் தினேஷ்.” 

 சொப்ணா வார்த்தையில் பிரிந்துவிடலாம் என்று கூறினாலும், உள்ளத்தில் அப்படி நினைக்கவில்லை என்பது இந்த கேள்வியில் உணர முடிகிறது. இன்செக்யூராக உணர்கிறாள். வசந்தி பிரிந்ததைப் போல அவளை பிரிந்துவிடக் கூடாது நினைக்கிறாள் என்பது தினேஷுக்கு புரிகிறது. தானும் எக்காரணத்திற்காகவும் கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். 

”முடிவா என்ன சொல்ல வர தினேஷ்.” 

 “பிரியுற முடிவ மாத்திக்க சொல்லுறேன். சேன்ஜ் யூவர் டிசிஷன் சொல்றேன்.”

“அவர்ஸ் இருந்து யுவர்ஸ் ஆயிடுச்சு. அது தான் டிசிஷன்.” 

”இந்த முடிவுல உனக்கு சந்தோஷம் இருக்குனு நீ சொல்லு.” 

“மனசுக்கு புடிச்ச பொண்ணுக்கிட்ட பொய் சொன்னது உன் மனச உருத்தவே இல்லை. இப்படிப்பட்ட ஆள் கூட வாழனும் நினைக்கிறியா?” 

”மனசுக்கு புடிச்ச பொண்ணு கஷ்டப்படக் கூடாது மறைச்சேன். தப்பு நீ நினைக்கிறீயா?” 

சொப்ணா மவுனமானாள். 

 “என் காதல் விஷயம் தெரிஞ்சுல நீ சந்தோஷ்ப்பட்டியா. இந்த நிமிஷம் வைக்கும் உன்னையும் கஷ்டப்படுத்தி, என்னையும் கஷ்டப்படுத்துற. அப்படிப்பட்ட விஷயத்த உன் கிட்ட எப்படி சொல்ல சொல்லுற.” 

 ”வாழ்க்கை முழுக்க உனக்கு சந்தோஷம் தரனும் நினைச்சேன். அது தப்புனு சொல்லுறீயா? நா சாரி சொல்லுறதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நா சொன்னது அப்புறம் நீ நார்மல்ல இருக்க மாட்ட. நா சொல்லப் போற சாரிய விட நா மறைச்சதுல இருந்த காதல்ல நீ மொதல்ல புரிஞ்சிக்கனும். ”

சொப்ணாவின் கண்கள் மெல்ல கலங்க தொடங்கியது. 

 ”வாழ்க்கை முழுக்க நாம நிறைய சாரி சொல்லுற தருணங்கள பாக்கனும் ஆசைப்படுறேன். ” சொப்ணாவால் எதுவும் பேசமுடியவில்லை. 

சர்வர், “ஒன் ஸ்வீட் கார்ன் சூப்” என்று தினேஷ் முன் வைக்கிறான். 

சொப்ணா தினேஷின் அனுமதியின்றி எடுக்கிறாள். ”இன்னொரு பவுல் கொண்டு வாங்க…" என்று சர்வரிடம் கூறினாள். 

சர்வர் , “இன்னொரு ஸ்வீட் கார்ன் சூப்பா?” “இல்ல... Empty bowl. நாங்க ஒன் பை டூ சாப்பிடுறோம்” என்று சிரித்தப்படி கூறினாள். தினேஷ்வும் சிரித்தான். சர்வர் தலை சொரிந்துக் கொண்டு சென்றான். 

“சூப் ஒன் பை டூ ஒ.கே. நீ கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்ல..”

”நாம என்ன பேசினோம்?” 

”பிரிஞ்சிடலாமானு கேட்டியே…” 

”அப்படி பேசுனோமா ?” என்று குறும்பாக சொல்லி பக்கத்து டேபிளை பார்த்தாள். பக்கத்து டேபிளில் இருக்கும் குழந்தை அவர்களை பார்த்து கைத்தட்டி சிரித்தது. 

சொப்ணா பிரெண்ட் போன் செய்தாள், அவள் எடுக்காமல் அந்த அழைப்பை தூண்டித்தாள்.

கல்லூரி நாட்களில் மனோகருடன் இருந்த காதலை தினேஷிடம் கூறிவிட வேண்டும் என்று சொப்ணா பல நாட்களாக நினைத்தாள். கடைசி வரை தினேஷிடம் சொல்லக் கூடாது என்று இப்போது முடிவெடுத்தாள். தினேஷ் மீது இருக்கும் காதல் ஒரு காரணம். ஆண்கள் என்றுமே ஆண்கள் என்பது இன்னொரு காரணம்.

Friday, April 3, 2015

80, 90களில் எடுக்கப்பட்ட 26 வாரத் தொடர்கள் !!!

சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’
சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்’
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்...’
சிவ சங்கரின் ‘ஒரு மனிதனின் கதை’
நீல.பத்மநாபனின் “தலைமுறைகள்’
அகிலனின் "சித்திரப்பாவை 
ஜெயகாந்தனின் "பாரீசுக்குப் போ"

இப்படி தூர்தர்ஷனின் வந்த தொலைக்காட்சி தொடர் சி.டி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா ? யாராவது இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். 

இன்று 1000 எபிசோட் கொண்ட நூறு சீரியல் இருந்தாலும் 26 வாரம் வந்த இந்த தொடர்களுக்கு நிகராக இருக்க முடியாது. 

மூப்பது வருடங்களுக்கு முன்பு “உண்மையே உன் விலை என்ன?”, “துக்ளக்” போன்ற நாடகங்களை படமாக எடுக்க தெரிந்த சோவுக்கு “எங்கே போகிறான் பிரமணன்” நாவலை தொடராக எடுக்கத் தெரியவில்லை. கலைஞரின் “ரோமாபுரி பாண்டியன்” தொடரும் அப்படி தான் இருக்கிறது. 

மேகா சீரியல் பார்த்து பெண்கள் கெட்டது போல், பல இயக்குனர்களும் கெட்டு போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் குறிப்பிட்ட தொடர்கள் ஒரு Reference ஆக இருக்கும். 

Youtube ல் தேடினால் பல பழைய இந்தி சீரியல் கிடைக்கும் அளவிற்கு தமிழ் தொடர்கள் கிடைக்கவில்லை. அதை பார்த்தாலாவது ஒரு கதையை எப்படி தொடராக எடுக்க முடியும் என்கிற பாடம் டி.வி இயக்குனர்கள் தெரிந்துக் கொள்ளலாம். 

நாவலை திரைப்படமாக எடுப்பதை விட, அதன் சாரம் கெடுக்காமல் தொலைக்காட்சி தொடராக எடுப்பது சுலபம். அந்த பணியை இன்று இருக்கும் 30 தமிழ் சேனல்கள் யாராவது ஒருவர் செய்தால் நன்றாக இருக்கும்.

உண்மையில், 80, 90களில் எடுக்கப்பட்ட 26 வாரத் தொடர்கள்  ஒரு பொற்காலம்  என்று சொல்லலாம் !!

Thursday, April 2, 2015

வீடு நெடுந்தூரம் (1) - குறும்பட விமர்சனம்

Guhan sir,

Viewed your "veedu neendathuram" in youtube! 

விமர்சனம் செய்தால் படத்தின் சுவாரஸ்யம் சிதைந்து விடுமென்ற வகையான கதைக்கரு என்பதனால் இவ்வாறு என் அபிப்ராயங்களைக் கூறிவிடுகிறேன்! 

முதலில் வழக்கமான அரைத்த மாவு அரைக்கும் பாணியில் இல்லாமைக்கு வாழ்த்துக்கள்! So the "ingate" of the film gets 50% நவீன கதை சொல்லும் யுக்திக்கு 20% ஒரே கதாபாத்திரத்துடன் தயாரிப்புச் செலவைக் குறைத்த சிக்கனத்திற்கு 10% செல்போன் பேச்சு என்று நம்பியிருந்த பார்வையயாளர்களுக்கு போலீஸ்காரர் (அது இரண்டாவது கதாபாத்திரம் என்றாலுமே கணக்கில் வராராததாகத்தான் கொள்ள வேண்டும்!) மூலம் ஒரு Twist ஐ தந்த தந்திரத்துக்கு 5% நட்பின் ஆழத்தை வலியுறுத்திய தரமான கரு விற்கு 10% 

So total 95% கொடுக்கலாம்! 

ஆனால்,  மூடம்பிக்கை என்ற நீரில் நினைத்த அப்பளம் போல ஈஷிக்கொண்டு உள்ளேயும் முழுங்க முடியாமல் வெளியேயும் துப்ப முடியாமல் ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக Minus 50% போட வேண்டியதாகிறது! 

- ராஜூ பாரதி.

 "வீடு நெடுந்தூரம்" குறும்படத்தை பார்க்க....

LinkWithin

Related Posts with Thumbnails